Madhu Vanthi

Drama Inspirational Others

4  

Madhu Vanthi

Drama Inspirational Others

2k kids 13

2k kids 13

6 mins
401


காலாண்டு தேர்வு தொடங்கி இருந்த நிலையில் இன்று அனைவரும் மூன்றாம் நாளாக பரிட்சை எழுத ஹாலுக்குக் நுழைந்தார்கள்.... நான்காம் ஹாலில் அமர்ந்திரக்கும் தீரா, "எங்க இன்னும் என் அண்ணன காணோமே.. அவனுக்கும் இதே ஹால் தானே இருந்துச்சு...", என இன்னும் ஹாலினுள் நுழையாத அர்ஜுனை வலை வீசி தேடி கொண்டிருக்க.. அவனோ, சண்டை போட்ட அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத கூடாது என்று கூறி விட்டதால் மற்ற பஷ்மெண்ட் நட்புகளை துணைக்கு அழைத்து கொண்டு சுகன் சாரிடம் கெஞ்சி கொண்டிருந்தான்... 


இங்கே முதல் ஹாலில், அல்ஃபபெட் படி பில்கி ஹரிணி மட்டும் தனியாக சிக்கி கொள்ள.. அவர்களின் மற்ற நட்புகள் இரண்டாம் ஹாலில் ஒன் மார்க் கேள்விகளை ஆசிரியருக்கு சந்தேகம் எழாதவாரு அழகாக பகிர்ந்து கொண்டிருந்தார்கள்... 


நெற்றியில் தொட்டால் முதல் ஆப்ஷன் மூக்கில் தொட்டால் இரண்டாவது ஆப்ஷன் வாயைத் தொட்டால் மூன்று நாடியை தொட்டால் நான்கு என்றுதான் சென்ற ஆண்டு ஒன் மார்க் பரிமாற்றம் நடந்தது.. ஆனால் இம்முறை அந்த டெக்னிக் ஆசிரியர்களுக்கு தெரிந்து விட... எவரின் கையாவது முகத்தை நோக்கி செல்கிறதா என்று இம்முறை அந்த டெக்னிக்கை மாற்றி விட்டார்கள்... விடை தெரிந்த அந்த படிப்பாளி அனைத்து நட்புகளிடமும் கண்ணாலேயே தயாரா?.. என கேட்டு விட்டு வலது கையை கொஸ்டீன் பேப்பரில் வைத்து கொண்டு பார்வையையும் அதிலேயே பதிக்க.. மற்ற அணைவரின் ஒரு கண் அவரவர் கொஸ்டீன் பேப்பரிலும் மற்றொரு கண் அந்த படிப்பாளியின் மடியில் இருக்கும் அவளின் மற்றொரு கையிலும் பதிந்தது.. அனைவரும் தலையை குனிந்து கொண்டே இருந்ததால் ஆசிரியர் கூட சந்தேகிக்கவில்லை... பதில் கூறிபவளின் கையை கூட ஆசிரியரின் பார்வையில் இருந்து ஒரு டேபிள் மறைத்து கொண்டது.. 


அவள் கொஸ்டீனை பார்த்தது கையில் ஆப்ஷனை கூறி கொண்டே இருக்க... மற்றவர்களும் பதிலை குறித்து கொண்டே வர.. படக்கென எழுந்து நின்றான் ஒருவன்...


மயான அமைதியில் இருந்த அந்த ஹாலில், "மிஸ்...", என சத்தமாக அழைத்தவாரு ஒருவன் எழுந்து நிற்க... கள்ள வேலையில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் ஒரு நொடி பகீரென ஆனாது.. பின்பு தங்களை சமன் செய்து கொண்டு, "எதாச்சும் டவுட் கேக்கவா இருக்கும்", என நினைத்து கொண்டு தங்கள் வேலையை தொடர போக.. அப்போது எழுந்து நின்றிருந்தவன் கூறிய வார்த்தையில் அரண்ட விழிகளுடன் அனைவரும் ஆசிரியரை நோக்கினார்கள்...

தன்னை அழைத்தவனை, "என்ன???..", என்பது போல் ஆசிரியர் நோக்க..., "மிஸ் அந்த பொண்ணு எல்லாருக்கும் ஆன்சர் சொல்லி குடுக்குது...", என இரக்கமே இல்லாமல் அவளை போட்டு கொடுத்தான்... 


அவளை நோக்கி ஆசிரியரின் பார்வை திரும்ப... அவளோ, அதிர்ச்சியாகி தனது முகத்தை மாற்றியமைத்து சீரியசாக வைத்து கொண்டே, "மிஸ்ஸ்ஸ்....... இல்ல.... நாபாட்டுக்கு என் கொஸ்டீன தா பாக்குறேன்..", என கொதித்து எழுந்துவிட்டாள். இப்போது ஆசிரியரின் பார்வை அவனை நோக்கி திரும்ப, "இல்ல மிஸ்... அவ கைய கீழ வச்சு ஆப்ஷன சொல்லிட்டு இருக்கா...", என கூற... அதற்கு அவள் மறுத்ததற்கு ஆசிரியர் அவளை நம்பாத பார்வை தான் பார்த்து கொண்டிருந்தார்... 


பின்ன.. என்ன நடக்கிறது என்பது அவருக்கு தெரியாதா என்ன.., "கீழ எறங்கி என் பார்வைக்கு நேரா ஒக்காரு..", என ஆசிரியர் கட்டளையிட... அவளும் பாவமாக முகத்தை வைத்து கொண்டு உள்ளுக்குள் அந்த மாணவனை கரித்து கொட்டி கோண்டு நட்ட நடு தரையில் தன் பேனா பென்சில் ஸ்கேல் என அனைதையும் பரப்பி கொண்டு தேர்வை எழுத தொடங்க... அந்த நேர்மையின் சிகரமும் தனது தேர்வை எழுத தொடங்கிவிட்டான்... 

நல்ல வேலை.. பதினேட்டு கேள்விக்கு விடை கூரிய பின்பே அவன் போட்டு கொடுத்திருக்க . மிச்ச இரண்டு கேள்விக்கும் சிலர் இன்கி பிங்கி பாங்கி போட்டு எழுதி விட.. மற்றவர்கள்.. பரிட்சை முடியும் தருவாயில் நடுவில் இருப்பவளிடமே கேட்டு விடலாம் என அப்படியே விட்டு விட்டார்கள்... 


மூன்றாம் ஹாலில் தன்னந்தனி மரமாக அமர்ந்திருந்தாள் ஜீனத்... முதல் ஹாலிலாவது பில்கி ஹரிணிக்கு நட்புகள் இல்லை என்றாலும் அவர்களின் வகுப்பை சேர்ந்த வேறு சிலராவது இருக்க.. இங்கு ஜீனத் கட்ட கடைசியாக இருப்பதால் அது கூட கிடைக்காமல் பதினொன்றாம் வகுப்பு அண்ணன்கள் ஒன்பது பேருடனும் பன்னிரெண்டாம் வகுப்பு அண்ணன்கள் ஒன்பது பேருடனும் இருந்தாள்.. இவள் மாட்டி கொண்டது போலவே அங்கே இன்னொரு ஜீவனும் இருந்தது... 

(வேறு யாரும் இல்ல பா.. நம்ம தீரா தா.. 🤣)


ஜீனத் இறுதியாக இருப்பதால் இங்கு வந்திருக்க.. தீரா அவள் வகுப்பு மாணவிகள் வரிசையில் முதலாவதாக இருந்ததால் இங்கு மாட்டி கொண்டாள்... எப்படியோ தங்கள் நிலையையும் பெயரையும் திட்டிகொண்டே தேர்வை எழுத தொடங்கினார்கள் இருவரும்.


(ftee advise 😜 ungal pillaigal xam il pass aaga vendum endru ninaithyaal attendence il naduvil varumaaru peyar vaiyungal..,😁😁 appodhu dhan one mark udhavigal dhaaraalamaaga kidaikkum 😂😂🤣)


தேர்வு தொடங்கி இருபது நிமிடம் கழித்து ஒரு கூட்டம் தேர்வை தொடங்க வந்தது... (நம்ம பணிஷ்மென்ட் செட் தா)., பின்னாலேயே வந்த சுகன் ஸார் அவர்களை உள்ளே அனுமதிக்குமாறு கூறி விட்டு ரவுண்ட்ஸ் செல்ல.. என்ன நடந்திருக்கும் என்பதை சற்று யூகித்த தீரா அர்ஜுனை நன்றாக முறைக்க தொடங்கினாள்... ஆனால் அவனோ தாமதமானதால் அரக்க பறக்க கோஸ்டீனை எடுத்து அதற்கான விடைகளை மூளைக்குள் தூண்டில் போட்டு தேட... இவனை மதியம் கவனித்து கொள்ளலாம் என தீராவும் தேர்வை கவனிக்க தொடங்கினாள்.


பன்னிரண்டரை மணி... தேர்வு முடிந்து விட்டதை காட்ட ஒரு மணி அடித்தது... ஆனால் அனைவருமே இன்னும் அரக்க பறக்க எழுதிகோண்டு தான் இருந்தார்கள்... எல்லா தேர்வையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடித்து விடலாம்.. ஆனால் இந்த கணக்கு மட்டும் தானே முடிவே இல்லாத ஒன்று... 


மாணவர்களிடம் இருந்து பேப்பரை பிரித்தெடுக்க ஆசிரியர்கள் தான் படாதபாடு பட்டார்கள்.


பேப்பர் பறிபோன துக்கத்தில் வெளியே வந்த அனைவரும் வெளியே வந்து ஒப்பாரி வைக்கத குறையாக எழுதிய விடைகள் சரியா என புத்தகத்தை புரட்டி போட துவங்க.. நம் பத்தாம் வகுப்பு பட்டாளம் மட்டும் எதை பற்றியும் சிந்திக்காமல் சோறு தா முக்கியம் என உணவை தூக்கி கோண்டு வழக்கமான மரத்தடிக்கு சென்றார்கள்., பிறரை போல் பதிலை சரிபார்க்கும் பழக்கம் இவர்களிடம் இல்லவே இல்லை... எழுதிய விடை தவறு என்று தெரிந்தால் அதை மாற்றவா முடியும்??.. மாறாக அதனை நினைத்து கவலை தான் அதிகமாகும்.. அதனால் பாஸ்ட் இஸ் பாஸ்ட் என அடுத்த வேலையை பார்க்க கிளம்பி விட்டார்கள்.

மரத்தடியில் அவர்கள் அமர்ந்திருக்க.. அர்ஜுனை முறைத்து கொண்டே தீரா மற்றவர்களையும் இழுத்துகோண்டு வந்து சேர்ந்தாள்... 


"ஹாய் சீனியர்... என்ன நீங்க காலைல ஆஃபிஸ் ரூம் வாசல்ல இருந்தீங்க.. என்ன பஞ்சாயத்து என சபி ஒரு ஆர்வத்தில் கேட்டுவிட.. இப்போதே தீராவை சமாளித்து இருந்த அர்ஜுனுக்கு மறுபடியும் மொதல்ல இருந்தா என்று தான் தோன்றியது... இருந்தாலும் அதை கூற தொடங்கினான்...


(சண்டை சுருக்கம்)...


இடம் : ஸ்கூல் பாய்ஸ் பாத்ரூம்...


நேரம் : எக்ஸாம் தொடங்க இருபது நிமிஷம் முன்னாடி.... 


சண்டை மாந்தர்கள் : நவீன் , அர்ஜுன், 1 ஹிஸ்டரி வகுப்பில் நான்கு மாணவர்கள்..

சண்டை காரணம் : 1 ஹிஸ்டரி கிளாஸ் டாப்பர் நவீனா ஶ்ரீ..


சண்டை : நவீனின் ஒன் சைட் பப்பி லவ் தான் நவீனா... ஒரே ஏரியாவில் இருந்த அவளை இத்தனை நாள் அவளுக்கே தெரியாமல் லவ் பண்ணிய நவீனுக்கு ஒரே ஒரு கவலை... அவள் வேறு பள்ளியில் படிப்பது... அவன் கவலையை போக்கிடவே வந்தது போல் வந்து சேர்ந்தாள் இந்த பள்ளி 1 வரலாறு பிரிவில்.. அப்பறம் என்ன?.. தினம் தினம் சீக்ரெட் சைட்டிங் தான்.. 

இதில் நவீனுக்கு தெரியாத விஷயம் அவள் பக்கா பிரில்லியன்ட் என்பது... 


அதனால் அவள் அன்று சக மாணவன் ஒருவனுக்கு கணக்கு சொல்லி கொடுத்து கொண்டிருக்க.. (வரலாறு என்ன கணக்குன்னு கேக்காகீங்க பா.. இது அக்கொண்ட்டன்ஸ் கணக்கு.. அதுவும் அவர்களுக்கு ஒரு பாடம் தான்.) அதை அவ்வழியாக சென்ற நவீன் பார்த்து விட்டு கொதிக்க தொடங்கி விட்டான்.


இத பாத்த அர்ஜுன் சண்டையை சமாதானம் செய்ய நினைக்க.. சரியா அந்த பையன் பாத்ரூமுக்கு போக... இவர்களும் பின்னாடியே போக... அங்க போய் அவனிடம், " இனி நாவீனா கிட்ட பேசுற வேல வச்சுக்காத" என நவீன் அவனை மிரட்ட..., "என் பிரென்ட்.. நா அப்டி தா பேசுவேன்", என அவனும் எகிர... ஓங்கி ஒரு அறை விட்டான் நவீன்.. 


அத பாத்து பதறிய அர்ஜுன் நவீனை தடுப்பதற்குள் அவன் சட்டையை பிடித்திருந்தான் அறை வாங்கியவன்... எப்படியோ தகவல கேட்டு அறை வாங்கியவனின் நட்புகள் அங்கு கூடி விட.. அவர்கள் வருவதற்குள் சண்டை முற்றி... அவன் சுவற்றில் முட்டி.... தலையில் இரத்தம் கொட்டி.... இந்த தகவல் கேட்டு சுகன் ஸார் ஸ்பாட்டில் ஆஜர் ஆகிட.. சண்டை இனிதே நிறைவு பெற்றது.... பஞ்சாயத்து துவங்கியது..


இப்படியே தான் அர்ஜுன் சபிக்கு விளக்கம் கொடுத்தான்... அவன் கூரிய மாடுலேஷனில் தீராவை தவிர அனைவரும் குலுங்கி குலுங்கி சிரிக்க., நல்ல வேல.. சுகன் ஸார் பேரண்ட்ஸ்ஸ கூட்டிட்டு வர சொல்லல..." என அர்ஜுன் நிம்மதி பெருமூச்சு விட... , "நா எதுக்கு இருக்கேன்.. நா போய் மம்மி கிட்ட சொல்லி குடுப்பேன்...", என முறுக்கி கோண்டு அமர்ந்திருந்தாள் தீரா..


இவ சொன்னாலும் சொல்லுவா என நினைத்த அர்ஜுன், "செல்லம்ல.. பாப்பால... கியூட் தங்கச்சில... நா உனக்கு பத்து லாலிபாப் பெருசு பெருசா வாங்கி தருவேனாம்... நீ அத வச்சு வாய மூடிபியாம்.. ஓகே தானே..", என அவளின் கன்னத்தை பிடித்து கொஞ்சி கெஞ்ச... அவனை பார்த்து உள்ளுக்குள்ளேயே சிரித்து கொண்டவள், "ஹ்ம்ம்.. என் கிட்ட கபோர்ட் நெறைய லாலிபாப் இருக்கு... இருந்தாலும் நீ சொன்னத செஞ்சா நா அத வச்சே வாய மூடிபென்...", என தீரா கூறிட.. அர்ஜுனுக்கு அப்பாடா என்றிருந்தது... 


இந்த லாலிபாப் இருக்குற வர என தங்கச்சிய ஈசியா சமாளிக்கலாம்", என மனதினுள் நினைத்து கொண்டே அர்ஜுன் உணவை உண்ண தொடங்க.. மதி தான் வாயை பிளந்து விட்டாள்..

"தீராக்கா... நெஜமாவே ஒரு கப்போர்ட் ஃபுல்லா லாலிபாப் வச்சுருக்கியா என்ன??.. என அதீத அதிர்ச்சியில் அவள் கேட்க... அந்த கொடுமைய ஏன் மா கேக்குற", என ரக்ஷவும் அர்ஜுனும் கன்னத்தில் கை வைக்க.. தீராவும் மயூவும் வாயை மூடி சிரித்து விட்டு, "ஆமா மதி மா... நா வச்சுருக்கேன்...", என சாதாரணமாகவே கூறினாள்.


அது எப்படி என்றால்... 


ஹாஸ்பிடலில் திருமணம் முடிந்து வீட்டிற்கு வரும் அண்ணன் அண்ணியை ஆர்த்தி எடுக்க தீராகவும் அக்கா மாமாவிற்கு ஆரத்தி எடுக்க மயூவும் தயாராகி நா தா ஃபர்ஸ்ட்.... நீ தா ஃபர்ஸ்ட் என போட்டிபோட்டு கொண்டு இருந்தார்கள்... இறுதியில் தீராவே முதலில் எடுக்க முடிவாகி வி்ட.. அவளும் அழகாய் ஆரத்தி எடுத்து முடித்தாள்.


"ஓய் அண்ணா.. என்ன சும்மா பாத்துட்டே இருக்க.. சீக்கிரம் காச குடு டா", என தீரா அண்ணனை மிரட்ட.. பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு ஒரு ஆரஞ்சு கலர் நோட்டை கண்டு பிடித்து அவளிடம் கொடுத்தான்.. அது பத்தவில்லை என்றாலும் ஹாஸ்பிடலில் இருந்து வந்ததால் கையில் இல்லை போல என நினைத்து கொண்டு மயூவிர்க்கு வழி விட.. அவளும் சுத்தி முடித்து, " மாமா... மச்சிக்கு எக்ஸ்ட்ரா அமொண்ட் குடுக்கணும்.. இல்லனா அக்காவ உனக்கு குடுக்க மாட்டேன்... ", என மயூ நிற்க.. ஹர்ஷன் சிரித்து கொண்டே பேண்ட் பாக்கெட்டில் தேடினான்.. எதுவும் கிடைக்கவில்லை., சரியென சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுக்க.. ரோஸ் ரோஸாக ஐந்து நோட்டுகள் இருந்தது.... கையில் வைத்து கொண்டே தீராவை பார்க்க.. அவள் பொங்கி வரும் முன் மயூ அதை பிடுங்கி பதுக்கி கொண்டாள்.


"டேய்..... அண்ணா... அவளுக்கு மட்டும் ரோஸ் கலர் காசு  எனக்கு ஆரஞ்சு கலரா... இப்பொ எனக்கும் ரோஸ் கலர் வெனும்" , என குதியாய் குதித்து அதை வாங்கியும் விட்டாள்... 


இதை பார்த்து அர்ஜூன் மற்றும் ரக்ஷவ் தான், "என்னடா இது... கலருக்கு சண்ட பொடுறாளுங்க..", என நினைத்தாலும், "அவங்களுக்கு மட்டும் தானா... எங்களுக்கு அட்லீஸ்ட் ஒரு பச்ச கலர் நோட்டாச்சும் குடுங்க பா", என அப்பாவியாக நிற்க... அவர்களுக்கும் ஆளுக்கு ஒரு பிங்க் நிற நோட்டை கொடுத்து முதுகில் ஒரு அடியையும் கொடுத்தான்....


இப்பொழுது அந்த கலர் கலர் காசுகளை வைத்து கலர் கலராக குச்சி மிட்டாய் மட்டுமே வாங்கி தன் கப்போர்டை நிறப்பினாள் அந்த லாலிபாப் பைத்தியம்.


இதை ரக்ஷவ் கூறி முடிக்க.. அசடு வழிய சிரித்தாள் தீரா... இப்படியே பேசி சிரித்து உணவை முடித்து விட்டு.. அடுத்த பரிட்சைக்கு தயாராக கிளம்பி விட்டார்கள் ஆனைவரும்.


😜😈GALAATTAS ON THE WAY 😈🤪



Rate this content
Log in

Similar tamil story from Drama