ஏலியன் அட்டாக் - 19
ஏலியன் அட்டாக் - 19


சொஹாரா மற்றும் வில்சன் இருவரும் நேருக்கு நேராக ஒருவரை ஒருவர் எந்த எண்ணத்தில் பார்க்கிறார்கள் என்பது கூட புரியாத ஒரு பார்வையில் பார்த்தவாறு நிற்க..., விரக்தியில் ஒரு புன்னகை சிந்திய சொஹாரா, "உன்ன எப்டி மறப்பேன் நா.... என் உயிர் நண்பன கொண்ணு... எங்க கிரகத்தையே அழிக்க திட்டம் போட்டு... கார்டியன்ஸ் ஷீல்ட திருடீட்டு போய்... அத திருடுனதே கண்ணன் தான்ணு அவரு மேல் பழிய போட்டு... அவரையும் எங்கள பாக்க வரவே முடியாத அளவுக்கு செஞ்சு.... .... .. இவ்ளோ பண்ண உன்ன.... நா அவ்ளோ சீக்கிரம் மறந்துறுவேன்னு நெனைக்குறியா... நிச்சயம் இல்ல....", என கூறியவனின் விழிகளில் கோபம் அனலாக பறக்க.. எதிரில் நிண்டிருந்த வில்சனோ அந்த ஏளன புன்னகையை இந்நொடி வரையில் மாற்றாமல் அப்படியே தான் இருந்தான்.
"சொஹாரா... இப்போ வந்து..." என எதையோ கூற வாயெடுத்தபடியே அவன் தோளில் கைபோட்டு அவனருகில் வந்தவரை வெடுக்கென தள்ளிவிட்டு விலகி நின்று அவன் முறைக்க... அதை பார்த்து லேசாக சிரித்து கொண்டவர், "ஹாஹா... கோபம்.... அவ்ளோ கோபம்... ம்ம்.. சரி விடு... இப்போ வந்து... நீ நினைக்கிறது எல்லாமே உண்ம தா.. அதாவாது... நீ உண்மன்னு நம்பிகிட்டு இருக்க எல்லாம் உனக்கு உண்ம தா.... ஆனா உண்மையான உண்ம எதுன்னு உனக்கு தெரியாதே... ஹாஹாஹா.. என்ன சொல்லுறேண்ணு புறியலல்ல... எனக்கும் தா... அப்ரம் இன்னொன்னு.... ரெண்டு உலகத்துக்கும் போர்.... கண்டிப்பா நடக்கும்... அத யாரு நெனச்சாலும் தடுக்க முடியாது...", என அநியாயத்திர்க்கு வார்த்தையால் வட்டமடித்து தானும் குழம்பி அவனையும் குழப்பி விட்டவர், தான் தேடி வந்த பொருள் இங்கில்லை என்பதால் வந்த வழியே கிளம்பி விட... சொஹாரா தான் பாவம்... வெளியில் இருக்கும் மூவருக்கும் தன்னை நிரூபிப்பதற்காக வில்சன் செய்த துரோகங்களை அவனுக்கு முன்னிலையில் கூறியிருக்க... இப்பொது வில்சன் குழப்பிய குழப்பலில் அவன் கூறியது.. இவ்வளவு நாள் நம்பியது எல்லாம் உண்மை தானா என அவனுக்கே சந்தேகம் எழுந்து விட்டது.
அவன் அப்படியே தரைய வெறித்து கொண்டு எவ்வளவு நேரம் இருந்தானோ... வீட்டிற்க்கு வெளியே இருந்து கொண்டே உள்ளே நடந்த உரையாடலை பார்த்து வாயடைத்திருந்தவர்கள், வில்சன் தன் காரில் ஏறி புறப்பட்ட பின்னரும் வாட்ச்சில் தரை மட்டுமே தெரிவதை பார்த்து, "இவரு உண்மைய போட்டு கலக்குன கலக்களுக்கு பையன் மூள கலங்கி நட்டு லூசாகிருச்சு போல...", என தலையில் அடித்து கொண்டு அவனை சகஜமாக்க உள்ளே நுழைந்தார்கள்.
உள்ளே சென்று சிலையாகி போய் இருந்தவனை போட்டு பின்னிருந்து உழுக்கியதில் அவன் திடுகிட்டு பின்னால் திரும்பினான்...
"டேய் டேய்.. நாங்க தா..." என முகிலன் நிதானமாக்கிய பின்பே சகஜமானவன் தான் வந்த வேலையை எப்படியோ இறுதியாக நினைவுகூர்ந்து, "என்ன... இப்போ நம்புரீங்களா மூனு பேரும்... அவரு நல்லவரே கெடையாது.. என் நண்பன கொன்ன துரோகி....", என கூறியவன் லேசாக குழம்பினான்... வில்சனின் வார்த்தைகள் நினைவு வந்ததால்... தான் உண்மை என நினக்கும் எந்த விஷயத்தை அவன் உண்மை இல்லை என்றுவிட்டு சென்றான் என்பது புரியாமல் இருக்க...
"உன்ன நம்புரோம் சொஹாரா... ", என மாயா அவன் மும்பாக வந்து நின்றாள்.
"ஆமா சொஹாரா... உன்ன நம்புரோம்.... நடக்க போற போர தடுக்க எங்களால முடிஞ்சத செய்றோம்", என அனுவும் அவன் முன்னால் வர... சொஹாராவின் முகத்தில் புன்னகை இழையோடியது...
"ஒரு நிமிஷம் டா நல்லவனே... ஆமா... அந்தாளு என்னவோ உண்ம உண்மன்னு ஒலாருநாரே..
அது என்னன்னு உனக்கு தெரியுமா என்ன?..", என முகிலன் சந்தேகத்துடனேயே அவனை நெருங்க.., "எனக்கும் அது தா புரியல.." என சொஹாராவும் தலையை சொரிந்தான்.
"ஹே.. அவரு உன்ன கொழப்பி விட்டு, திச திருப்பி விடுறதுக்கு கூட அப்டி சொல்லிருக்களாம்ல...", என மாயா கேட்டது, "இப்படியும் இருக்கலாமோ?", என அனைவருக்கும் தோன்ற... அதை நாளை பார்த்து கொள்ளலாம் என ஓரங்கட்டிய சொஹாரா, "சரி சரி... அதையெல்லாம் நாம நாளைக்கு டிஸ்கஸ் பண்ணலாம்... இப்போ நீங்க மூனு பேரும் அவரு சொன்ன வீட்டுக்கு போய்ருங்க... அப்போ தா அவருக்கு எந்த சந்தேகமும் வராது... நாளைக்கு காலைல இங்க வந்துறுங்க... நாம நேரா பிளானட் கிளெளட் போகலாம்... பூமி வாசிங்க வந்து எங்க மேஜர் கிட்ட பேசினா அவரு கண்டிப்பா போர நிருத்துவாரு", என கூறி மூவரையும் வில்சன் கூறிய அந்த வீட்டிற்க்கு போக சொல்ல.... அவன் கூறுவதும் சரி தான் என மூவரும் தங்களின் உடைமைகளை எடுத்து கொண்டு இரண்டு தெரு தள்ளி இருக்கும் அந்த வீட்டிற்க்கு நடக்க தொடங்கினார்கள்.
அனுப்பி வைத்தவன், அங்கே கண்ணனின் உடைமைகளை அலசி ஆராய தொடங்கினான். உண்மையில் இவன் இங்கு வந்தது கண்ணனை பாரக்க தான்... அவரிடம் உதவி கேட்டு இமூவரையும் அழைத்து கொண்டு பிளானட் கிளவ்டிர்க்கு செல்லாம் என வந்திருக்க.. இங்கு கண்ணனே இல்லாதது அவனுக்கு குழப்பத்தை தான் ஏற்படுத்தியது.
அதனால் அவர் எங்கே சென்றிருக்கிறார் என்ற தகவல் கிடைக்கிறதா என பார்க்க அந்த வீட்டையே மொத்தமாக புரட்டி போட துவங்கி இருக்க... அப்போது தான் அந்த பெட்டி வடிவ கருவி அவன் கண்ணில் சிக்கியது... அதை கண்ட சோஹாராவிர்க்கு தன் கண்ணையே நம்ப முடியவில்லை... வாய்பிளந்து நோக்கியபடி அந்த பெட்டியை எடுப்பதற்காக மெல்லமாக கையை அதனருகில் கொண்டு போக... சட்டென அவன் பார்வை அருகில் இருந்த காகிதத்தில் பதிந்தது.
- தொடரும்..