நாளைய விதைகள்
நாளைய விதைகள்
அன்று ஒரு புதன் கிழமை.. அந்த ஊரின் சந்தை நாள்... தன் மகளுடன் சந்தைக்கு சென்றவள் ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்களை எல்லாம் பேரம் பேசி வாங்கி கொண்டிருக்க... அனைத்தையும் உள்வாங்கி கொண்டு அன்னையுடன் சென்று கொண்டிருந்தாள் அந்த குழந்தை.
அனைத்தையும் வாங்கி முடித்ததும் கைநிறைய பொருட்களுடன் தாயும் மகளும் சந்தை வாயிலுக்கு வரவளித்தார்கள். அன்னையின் கையில் இரு பெரிய கட்டை பைகள் இருக்க... மகளின் கையில் ஒரு கிலோ வெண்டைக்காய் அடங்கிய வெள்ளை நிற கவர் இருந்தது.
இருவரும் சந்தை வாயிலை கடக்கப் போகும் சமயம் அந்த சிறுமியின் கண்ணில் விழுந்தார் ஒரு முதியவர். வெளுத்துப்போன தாடியுடன் சுருக்கம் விழுந்த முகத்துடன் இருந்தவர் குட்டி குட்டி பாக்கெட்களில் சில விதைகளை நிரப்பி தனக்கு முன்பாக ஒரு டேபிளில் பரப்பி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்..
"அம்மா.. எனக்கு அது வேனும்...", முதியவரை கடந்து செல்ககையில் மகளின் குரலால் நடைக்கு தடை விதித்து திருப்பி நோக்க... அவள் கைகாட்டும் திசையை பார்த்து விட்டு, "அது எதுக்கு டா பாப்பா... நம்ம காடர்ன்ல தா நெறைய ஃப்ளவர்ஸ் இருக்குல?",
"இல்ல ம்மா.. இது வெஜிடேபில்ஸ் சீட் (seed)... நீ உள்ள கடையில போய் வெஜிடேபிள் வாங்கும் போது அவங்க சொல்லுற காச விட கொறச்சு கொறச்சு சண்ட போட்டு தானே வாங்குன... இத வச்சு நம்ம வீட்டுலேயே வளத்தா அப்டி சண்ட போட தேவை இல்லல்ல", என கேட்க... மகளை கண்டு ஒரு நிமிடம் பெருமிதம் கொண்டவள், அந்த அளவிற்கு காய்கள் கிடைக்க போவதில்லை என்றாலும் மகள் கேட்ட அனைத்து விதைகளையும் அவளுக்கு வாங்கி கொடுத்தார்.
✨✨✨
மக்களே.... தாய் எட்டடி பாஞ்ஜா குட்டி பதினாறு அடி பாயும்ன்னு சும்மாவா சொன்னாங்க..
