பெண்மையே அது மென்மையா?
பெண்மையே அது மென்மையா?
மாலை பள்ளி முடிந்ததும் வேக வேகமாக வீட்டிற்க்கு வந்தவள், தன் பையை ஒரு ஓரமாக வைத்து விட்டு தோட்டத்திற்கு விரைந்தாள்.
அவள் முகம் ஏதோ யோசனையில் ஆழ்ந்து உணர்வற்று இருந்தது...
அவள் கண்முன்னே...
புல் ரோஜா... பன்னீர் ரோஜா... மல்லி.. பிச்சி... பந்துபூ... செவ்வந்தி என பலவித மலர்களுடன் ஆங்காங்கே தலை தூக்கியிருக்கும் குப்பை செடிகளிலும் மிக சிறிய அளவில் குட்டி குட்டி வண்ண மலர்கள் பூத்திருந்தது..
கண்ணில் படும் ஒவ்வொரு மலரையும் தன் கரம் கொண்டு அவள் அழுத்தி பிடித்து கசக்கிட, சிலவை கசங்கியது.. சிலவை பாதியாக உதிர்ந்தது... சிலவை முற்றிலும் உரு குழந்தது..
அதை பார்த்தவள் நினைவில் காலை வழிபாட்டு கூட்டத்தில் தன் ஆசிரியர் கூறிய வார்த்தைகள்..
"பெண்கள் மலரை போன்றவர்கள்... அதனால் தான் ஆணாதிக்காத்தால் எளிமையாக நசுக்க படுகிறாரகள்... பெண்களை மலரோடு ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும்... அவ்வளவு பலவீனமானவர்கள் அல்ல பெண்கள்", என்ற ஆசிரியரின் வார்த்தைகளை அவளால் முழுமையாக ஏற்க முடியவில்லை..
தன் கைபட்டு கசங்கிய மலர்களையே வெகுநேரமாக பார்த்து கொண்டிருந்தவள், தன் பார்வையை வேறு புறமாக திருப்ப... அங்கிருந்தது அந்த மலர்...
அதனை கண்டதும் அவள் சிந்தையில் சிறு தெளிவு பிறக்க.. நேராக அதனிடம் சென்று தன் கரங்களால் அழுத்தி பிடித்தாள்.
கசங்கவில்லை... உதிறவில்லை... நிறமும் மாறவில்லை... அப்படியே திடமாக நின்றது அந்த வாடாமல்லி.
அதை கண்டவள் முகத்தில் முழுமையான தெளிவு பிறந்தது..
பெண்கள் நிச்சயம் மலர்களை போன்றவர்கள் தான்.. ஆனால் எந்த மலர் என்பதில் தான் அவளின் வாழ்க்கை உள்ளது.
✨✨✨
ஆம்!.. பெண்கள் மலர்களோடு ஒப்பிட கூடியவர்கள் தான்.. ஆனால் எல்லோரும் அவ்வாறு ஒப்பிடும்போது அதிகபட்சம் ஒப்பிடுறது ரோஜா மற்றும் மல்லி பூக்களோடு தான்.
ஆனால் பெயராறியா பல மலர்கள் பூமியில் இருக்கிறது... இன்னும் கண்ணுக்கு சிக்காத அபூர்வ மலர்களும் பலவை இருக்கிறது...
நெப்பந்தஸ்... வீனஸ் ஃப்லை ட்ராப்... ரஃபேல் lஸியா... இவைகளும் கூட மலர்கள் தான்... இதனோடும் கூட பெண்மையை நிச்சயம் ஒப்பிடலாம்..
உங்களுக்கு ஒரு கேள்வி மக்களே... நீங்கள் எந்த மலர் போன்றவர்கள்?.. அல்லது எந்த மலரின் சுபாவத்தொடு இருக்க விரும்புகிறீர்கள்??..
