பெண்ணியம்
பெண்ணியம்
விடியற்காலை மணி ஐந்து..
டான் என அலாரம் ஒலிக்க.. அவதி அவதியாக எழுந்தாள் அவள்.
எழுந்ததும் காலை கடன்களை முடித்து கொண்டு வாசல் பெருக்கி தெளித்து கோலமிட்டு, வீட்டில் இருப்பவர்களுக்கு டீ போட்டு கொடுத்து விட்டு, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை எழுப்பி விட்டு அவர்களை குளிக்க அனுப்பி விட்டு தானும் குளித்து முடித்து விட்டு வந்தால் மணி ஏழு.
பிள்ளைகளை பள்ளிக்கு தயார் செய்து கொண்டே சமையலை ஒரு பக்கம் கவனிக்க.. வேலைக்கு செல்லும் கணவன் ஒரு டிபனையும் பிள்ளைகள் ஆளுக்கு ஒரு டிபனையும் காலை உணவுக்காக ஆடர் செய்ய... சாதம் வடித்த பின் ஒரு அடுப்பில் குழம்பையும் மறு அடுப்பில் பொரியலையும் வைத்து விட்டு.. பொரியல் முடிந்ததும் வேக வேகமாக காலை டிபனை செய்து அனைவருக்கும் கொடுத்தாள்.
அனைவரும் காலை உணவு உண்டு முடிக்க.. மதிய உணவும் சரியாக தாயாராகி முடிந்தது.
அதனை ஒவ்வொருவருக்கும் தனித்தனி டப்பாவில் அடைத்து கொடுத்து கணவனையும் குழந்தைகளையும் வழியனுப்பி விட்டு வர.. மணி ஒன்பது.
பின் வீட்டில் இருக்கும் அத்தை மாமாவிற்கு காலை உணவு வழங்கி மாத்திரை மருந்து எல்லாம் சரியாக கொடுத்து விட்டு அரை மணி நேரத்தில் கிளம்பி விட்டாள்.
அவள் அலுவலகத்திற்கு.
வளைந்து கொடுப்பினும்
முறிந்து விடாத
முதுகெலும்பு
பெண்ணியம்
