Win cash rewards worth Rs.45,000. Participate in "A Writing Contest with a TWIST".
Win cash rewards worth Rs.45,000. Participate in "A Writing Contest with a TWIST".

Madhu Vanthi

Drama Action Fantasy


4  

Madhu Vanthi

Drama Action Fantasy


ஏலியன் அட்டாக் -18

ஏலியன் அட்டாக் -18

2 mins 284 2 mins 284

"நா அப்போவே சொன்னேன்... கேட்டீங்களா??... இவரு கெட்டவரு தா.. இப்போவாச்சும் என்ன நம்புறீங்களா இல்லையா?...", என சொஹாரா கூறியது போலவே வில்சன் இவ்விடம் வந்துவிட்டதை சுட்டிக்காட்டி, முகத்தில் எவ்வித ரியாக்ஷனை காட்ட என்பது புரியாமல் இருந்த அம்மூவரையும் நக்கலாக பார்த்திருந்த நேரம், இன்னும் அது முழுமையாக நிரூபணம் ஆகாததால் தொண்டையை செருமிக்கொண்டு பேச்சை திடங்கினான் முகிலன்.


"ஹலோ ஹலோ... அவரு தா இங்க நடக்குற எல்லா கொலப்பத்துக்கும் காரணம்னு நீ இன்னும் முழுசா புரூப் பண்ணவே இல்ல", என அவனின் நக்கலான பார்வையை தாங்க முடியாமல் வேறெங்கோ பார்த்துகொண்டு எரிச்சலுடன் அவன் கூற..., அதை பார்த்து வாய்மூடி சிரித்த கொண்ட சொஹாரா, முகிலனின் மீது பதித்திருந்த தன் பார்வையை மாற்றாமலலேயே, "சாரா... ஸார் பீச்ல தூக்கி போட்ட அந்த வாட்ச்ச குடு மா", என கையை மட்டும் பல்லி பிரானியான சாராவை நோக்கி நீட்ட... சாராவும், முகிலன் பீச்சில் தூக்கி போட்ட கண்ணனின் வாட்ச்சை சொஹாராவின் கையில் வைத்தாள்.


அதை வாங்கி கொண்ட சொஹாரா, அதை பின்பக்கமாக திருப்பி ஒரு பட்டனை அழுத்தினான். சரக்கென வாட்ச்சின் இரு பக்கமும் இருந்து எதோ குச்சி போல நீட்டி கொண்டு வர.. அதன் மேல் கண்ணுக்குள் வைக்கும் இரு லென்ஸ் இருந்தது.. அந்த லென்ஸை மட்டும் கையில் எடுத்து கொண்டவன் வாட்ச்சை அனுவிடம் நீட்டி, "இத வச்சுக்கோங்க... இது மூலமா உள்ள நடக்குறத நீங்க பாக்க முடியும்... நா உள்ள போரேன்.. உள்ள நடக்குறத இங்க இருந்துட்டே நீங்க பாருங்க... ", என கூறிக்கொண்டே வாட்ச்சினுள் இருந்து எடுத்த லென்ஸ் இரண்டையும் அவன் விழிக்குள் பொறுத்தினான்.

இப்பொழுது அனுவின் கையில் இருந்த வாட்ச்சில், அவளே அவளுக்கு தெரிந்தாள்.


அனு வாட்ச்சுடன் அதை ஆச்சரியமாக பார்ப்பது அவளுக்கே தெரிய.. விழியை விரித்து சொஹாராவை நோக்கியவள், "டேய்.. எங்க டா கேமரா வச்சுருக்க... நானே எனக்கு தெரியுரேன்...", என அவனுக்கு மேலே.. பின்னால்... பக்கத்தில் என அனைத்து இடத்திலும் கேமராவை தேட.. மாயாவும் முகிலும் கூட இப்போது அந்த வாட்சில் தெரிவதை பார்த்துவிட்டு அவளுடன் சேர்ந்து தேட தொடங்கி விட்டார்கள்.


அதை கண்ட சொஹாராவோ சிரித்துகொண்டே, "ஹே ஹே... கேமராலாம் வைக்கல... அதுக்கு காரணம் என் கண்ணுல இருக்குர லென்ஸ் தா", என கூரியவனை மற்ற மூவரும் கேள்வியாக நோக்க... அதை புரிந்து கொண்டவன், "நிஜமா தா.. இந்த மாறி இருக்குற ஒவ்வொரு வாட்சுக்கும் கூடவே ஒரு ஸ்பை லென்ஸ் இருக்கும்... அத போட்டுகுட்டா அது கேமரா மாறியே வர்க் ஆகும்...", என கூறி சுற்றி முற்றி தன் பாரவையை சுழல விட... அவன் பார்க்கும் அனைத்தும் அனுவின் கையில் இருந்த வாட்சின் ஸ்க்ரீனில் தெரிந்தது.

அதன் பின்பே அவன் திட்டத்தை புரிந்து கொண்டவர்கள் இன்னும் முழுமையாக அவனை நம்பாத ஒரு பார்வையுடனேயே வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்கள்.


            *******


வீட்டிற்குள்,


யாரும் இல்லை என்ற தைரியத்தில் வேக வேகமாக உள்ளே வந்த வில்சன் நேராக சென்றது தோட்டத்திற்கு தான். அவனின் சந்தேகத்தை உறுதி செய்வதற்காகவே அங்கே சொஹாராவின் பறவை வடிவ மினி காப்டர் நின்று கொண்டிருக்க... தலைமுடியை கொத்தாக பிடித்துகொண்டு, பல்லை கடித்துகொண்டு சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தவர், பின் என்ன நினைத்தாரோ விறுவிறுவென வீட்டிற்குள் வந்து ஒவ்வொரு அறையாக நுழைந்து எதையோ பரபரப்பாக தேடினான்.


அனு மாயா முகிலன் அவர்களின் உடைமைகளை மட்டுமே காலி செய்து எடுத்துகொண்டு சென்றிருந்தார்கள்... ஆனால் அந்த வீட்டில் ஏற்கனவே இருந்த கண்ணனின் பொருட்கள் அப்படியே தான் இருந்தது... அவற்றில் தான் எதையோ அவர் தேடிகொண்டிரிக்க... திடீென்று முதுகுக்கு பின்னால் யாரோ கை தட்டும் ஓசை கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தார்.


அங்கு சோஹாரா தான் முகத்தில் வெறுப்பு கலந்த புன்னகையுடன் நின்றிருந்தான்.. நொடியில் அவனை அடையாளம் கண்டுகொண்ட வில்சன், இதழோரம் ஏளன சிரிப்புடன், "சொ. ஹா.. ரா...", என அவனது பெயரை ஒவ்வொரு எழுத்தாக கூறியவாறு, அவனை நோக்கி நடந்து வந்தவர், "இன்னும் என்ன நியாபகம் வச்சிருக்கியா?", என அந்த ஏளன பார்வை மாறாமலேயே அவனை பார்த்து நிற்க.. அதை வீட்டிற்க்கு வெளியே நின்று பார்க்கும் மூவரும் ஒரு சேர வாயில் கை வைத்து விட்டார்கள்.


                        - தொடரும்.....Rate this content
Log in

More tamil story from Madhu Vanthi

Similar tamil story from Drama