Madhu Vanthi

Drama Action Thriller

4  

Madhu Vanthi

Drama Action Thriller

ஏலியன் அட்டாக் - 17

ஏலியன் அட்டாக் - 17

3 mins
164


அந்த விசித்ர உயிரினங்களை உருவாக்கியதே வில்சன் தான் என்று சொஹாரா கூறியதை அடுத்து, என்ன பேசுவது என்று புரியாமல் குழப்பத்தில் மூவரும் நின்று கொண்டிருக்க..., அந்த மௌனத்தையும் குழப்பத்தையும் கலைத்தது மாயா தான்.


"நீ என்ன சொல்லுற... அப்டின்னா... அப்போ அவரே வந்து எதுக்காக எல்லாரையும் காப்பாத்துனாரு...", என அவள் கேட்டு கொண்டிருக்கையில் இடையே குறுக்கிட்ட அனு, "ஹே... ஒரு நிமிஷம்... நாங்க எதுக்காக உன்ன நம்பனும்... நீயே எங்கேயோ இருந்து வந்துருக்க... எங்களுக்கு தப்பு தப்பா எல்லாத்தையும் காட்டி எங்கள பிரைன் வாஷ் பண்ணலான்னு நாங்க எப்டி நம்புறதாம்... உன்ன பாத்தாலே பக்கா கிரிமினல் மாரி தெரியுது... நாங்க இப்போவே வில்சன் ஸார் கிட்ட சொல்ல போரோம்... ஏய் அனு.. குடு டி உன் ஃபோன...", என கத்தி கொண்டே அனுவின் கையில் வைத்திருந்த போனை பிடுங்கி வில்சனின் எண்ணுக்கு அழைப்பு விடுக்க தொடங்கினாள்.


அதை பார்த்து கொண்டே சொஹாரா அமைதியாக எங்கோ வெறித்து கொண்டு நின்றான்.. அவனின் கவனம் இங்கு நடக்கும் கலவரத்தில் இருந்தால் தானே... அவன் எண்ணங்களோ, தான் பூமிக்குள் நுழைந்ததால் அந்த தகவல் ஏதேனும் சாத்தியங்கள் மூலமாக அந்த வில்சனுக்கு தெரிய வாய்ப்புள்ளதா என்பதில் தான் நிலைத்திருந்தது.


இப்பொழுது மாயாவை ஆப்படியே விட்டால் வந்த காரியமே கெட்டு விடும்.. அவள் எப்படியோ வில்சனின் எண்ணை தேடி பிடித்து அழைப்பையும் விடுத்து மொபைலை காதில் வைத்த அடுத்த நொடி அது தரையில் கிடந்தது.. பந்து வடிவ ரோபோ ஹெலிகாப்டரான ஃப்ரீ பர்டின் மகிமையால்.


நடப்பவற்றை, சொஹாரா தடுப்பதற்கு எந்த வித அறிகுறியும் இல்லாது போனதால், அவனை கண்டு தலையில் அடித்து கொள்ளாத குறையாக ஃப்ரீ பார்டே களத்தில் இறங்கி அந்த மொபைலை தட்டி விட்டிருந்தது.. நல்ல வேலை... மொபைலுக்கும் அதில் இருந்த டெம்பர் கிளாசுக்கும் ஆயுள் கெட்டி போலும்.. எந்தவித அடியும் படாமல் தப்பித்து விட்டது.


"ஏய்ய்ய்... ஹவ் டேர் யூ.. அத என்ன வாலிபால்ன்னு நெனச்சியா??.. ", என அந்த பறக்கும் பந்தை நோக்கி கத்தி கொண்டே வேகவேகமாக மொபைலின் நிலையை கவணிக்க ஓடிய அனு அது நல்ல நிலையில் இருப்பதை கண்ட பின்பே பெரு மூச்சு விட்டாள்.


இங்கே இவள் கத்திய கத்தலில் சுய நினைவுக்கு வந்து விட்ட சொஹாரா..., "ஹே.. ஹே.. என்னாச்சு.. இப்போ எதுக்கு இப்டி கத்துற...", என நிதானமாக அவனின் தனிப்பட்ட குரலால் கேட்க, "ஹான்.. இந்த முட்ட பொம்ம என் ஃபோன தள்ளி விட்டுறுச்சு", என கத்திய அனு சற்று நேரம் கழித்தே அவனை கவனித்தாள்.


இவ்வளவு நேரமும் எதுவுமே நடக்காதது போல் அவன் சாதாரணமாக நின்றிருக்க.. அவனை மாயாவும் முகிலனும் ஒரு மார்க்கமாக பார்த்து கொண்டிருக்க..., "டேய் சொஹாரா... எந்த லோகத்துல கனவு கண்டுட்டு இருக்க.. இங்க இந்த புள்ளைங்க அந்த வில்சனுக்கு கால் பண்ணி காரியத்தையே கெடுக்க பாக்குதுங்க டா", என ஃப்ரீ பார்ட் அபாய எச்சரிக்கை கொடுக்கவும் தான் அவனுக்கு நிலைமையே புரிந்தது.


விழியை அகல விரித்தவன், "பிளீஸ் பிளீஸ்... அவன் கிட்ட மட்டும் நா வந்திருக்குற விஷயத்த சொல்லாதீங்க ... அப்பறம் பூமிக்கு மட்டும் இல்ல .. எங்க பிளானட் கிலெளடுக்கும் மிகப்பெரிய அழிவ அவரு கொண்டு வந்துறுவாரு.... பிளீஸ் என்ன நம்புங்க... எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க.." என சொஹாரா அனு மற்றும் மாயாவிடம் கெஞ்சு கெஞ்சென கெஞ்சி கொண்டிருக்க... இவ்வளவு நேரம் மெளனத்தில் இருந்த முகிலன் இப்போது தான் பேச தொடங்கினான்.


"சரி நம்புரோம்... ஆனா எங்களுக்கு அவரு நல்லவருன்னு தா தோனுது.. அது உண்ம இல்லன்னு எங்களுக்கு ப்ரூஃப் பண்ணு... நாங்க நம்புறோம்...", என கை காட்டியவாறு வந்து நின்ற முகிலனை கண்ட சொஹாரா, தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியுடன், "சரி... கண்டிப்பா நிரூபிக்கிரேன்.... அதுவும் இப்போவே", என அவன் முழு நம்பிக்கையில் கூறியதை பார்த்த மற்ற மூவருக்கும் ஆச்சரியம் தான்... இருந்தாலும் முகத்தை சீரியஸாகவே வைத்து கொண்டு "எப்டி??" என ஒரே போல் மூவரும் புருவமுயர்த்தி கேட்க... "சொல்லுரேன்... ஆனா அதுக்கு உங்க ஹெல்ப் வேணும்.... நீங்க எல்லாரும் இப்போ இங்க இல்லன்னு தா அவரு நெனச்சுட்டு இருக்காரு.... அவருக்கு நா இங்க வந்திருக்கிறது எப்டியோ தெரிஞ்சிருக்கு... அதா உங்களுக்கு கால் பண்ணிருக்காரு... இப்போ அவர பொறுத்த வர நீங்க... இங்க இல்ல... அதனால நிச்சயமா அவரு என்ன தேடி இங்க வருவாரு., அப்போ நிரூபிக்கிரேன் அவரோட நிஜமான முகத்த... அதுக்கு நீங்க நெஜமாவே இப்போ வீட்ட காலி பண்ணிட்ட மாதிரி காட்டணும்", என கூறி அங்கே ஏற்கனவே பேக் செய்ய பட்டிருந்த உடைமைகளை நோக்கி பார்வையை திருப்பினான்.


அந்த யோசனையும் சரியேன பட்டதால் அவர்கள் அனைவரும், சொஹாரா கூறியது போலவே அனைத்து உடைமைகளையும் எடுத்து வீட்டின் வெளிப்புறத்தில் ஒரு மறைவான இடத்தில் வைத்து விட்டு அவர்களும் ஒரு மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டார்கள்.


சரியாக பத்து நிமிடம் தான் கடந்திருக்கும் ... சீரிகொண்டு வந்து வாயிலில் நின்றது வில்சன் கார்.... அதை கண்ட சொஹாரா தன்னருகில் இருந்த மூவரையும், "அப்போவே சொன்னேன்... நம்புநீங்களா?", என்பது போல் ஒரு பார்வை பார்க்க.. மற்ற மூவரும் அதிர்ச்சியில் முகம் வெளிரிப்போய் இருந்தார்கள்.


- தொடரும்...



Rate this content
Log in

Similar tamil story from Drama