சிறிய பாராட்டு - உலக சாதனை
சிறிய பாராட்டு - உலக சாதனை


விருதுநகர் மாவட்டம், சிவகாசி கல்வி மாவட்டம். வெம்பக்கோட்டை ஒன்றியம், மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. அப்பள்ளியில் கிராமத்து குழந்தைகள் படித்து வருகின்றனர். கிராமத்து குழந்தைகளுக்கு சிறந்த முறையில் கற்பித்து வருகிறார் அப்பள்ளியின் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை ஜெயமேரி. மாணவர்களுக்கு அந்த ஆசிரியர் என்றால் மிகுந்த அன்பு. மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் எல்லாம் மற்றவர்களின் உதவியோடு அம்மாணவர்களுக்குச் செய்து வருகிறார். கிராமப் புற பெற்றோர்கள் தினமும் வேலைக்குச் சென்றால் தான் மாணவர்களுக்கு உணவு கிடைக்கும்.எனவே அதிகாலையிலேயே பெற்றோர்கள் தனது குழந்தையை விட்டுவிட்டு பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று விடுவர். அக்குழந்தை காலை உணவு உண்டதா எனபதைக் கூட அறியாமல் பெற்றோர்கள் பணிக்குச் செல்வதால் பல குழந்தைகள் காலை உணவின்றியே பள்ளிக்கு வரும். இதை அறிந்த அப்பள்ளி ஆசிரியை மாணவர்களுக்காக பெரியவர்கள் உதவியுடன் காலைச் சிற்றுண்டித் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அது போல் பல நல்ல திட்டங்களை மாணவர்களுக்காகச் செய்வதால் மாணவர்களுக்கு அவ்வாசிரியையை அதிகம் பிடிக்கும். இதை அறிந்த அக்கல்வி மாவட்டத்தின் ஒருங்க்ணைப்பாளர் அப்பள்ளி மாணவர்களையும் ஆசிரியரையும் பாராட்ட அப்பள்ளிக்குச் சென்றார். அப்போது கிருத்திகாஹரிணி என்ற மாணவி சிலப்பதிகாரப் பாடலை நயத்துடன் கூறினாள். அம்மாணவியின் திறனை மேலும் வெளிக்கொணர நினைத்த ஒருங்கிணைப்பாளர் உனக்கு திருக்குறள் தெரியுமா? எனக்கேட்டார். ஓ தெரியுமே! என பதிலளித்த மாணவி பத்து திருக்குறளைக் கூறினாள். அம்மாணவியையும் ஆசிரியரையும் பாராட்டிய ஒருங்கிணைப்பாளர் மேலும் அம்மாணவியின் திறனை வெளிக்கொணர ஐம்பது திருக்குறளைக் கூறினாள் உன்னை முதன்மைக்கல்வி அலுவலரிடம் அழைத்துச் சென்று பாராட்டு பெறச் செய்வேன் எனக் கூறி விட்டு சென்று விட்டார். ஒரு வாரம் கழித்து ஒருங்கிணைப்பாளாருக்கு அந்தப்பள்ளியின் ஆசிரியை கிருத்திகா ஹரிணி 50 திருக்குறளைப் படித்து விட்டாள். நான் நீங்கள் கூறிய ஐம்பது திருக்குறளைப் படித்து முடித்து விட்டேன். எப்போது முதன்மைக்கல்ல்வி அலுவலரிடம் அழைத்துச் செல்வீர்கள் என வினவுகிறாள் என அப்பள்ளி ஆசிரியை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளாரிடம் கூறினார். உடனே முதன்மைக்கல்வி அலுவலரிடம் ஒருங்கிணைப்பாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி அம்மாணவியின் திறனைக் கூறினார். உடனே அம்மாணவியை குறிப்பிட்ட நாளில் அழைத்து வரச் சொன்னார். அம்மாணவி,பெற்றோர் மற்றும் ஆசிரியையை மாவட்டக்கல்வி அலுவலர்கள்,வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டினார். 50 திருக்குறைக் கூறிய மாணாவி 200 திருக்கிறளை 5.36 நிமிடங்களில் கூறி உலக சாதனை படைத்தாள். அம்மாணவிக்கு அரிமா சங்கம் ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்து கௌரவித்தது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட துணை கண்காளிப்பாளர் ஆகியோரும் பாராட்டினர். ஒரே ஒரு பாராட்டினால் உலக சாதனையினை செய்த இரண்டாம் வகுப்பு மாணவி கிருத்திகா ஹரிணி. எனவே நாமும் எவரேனும் சிறிய வெற்றியையும் பாராட்டினால் அப்பாராட்டு பல வெற்றிகளையும் குவிக்கும், பாராட்ட நாம் மறந்திட வேண்டாம்.