srinivas iyer

Abstract

4  

srinivas iyer

Abstract

தெருச்சண்டை

தெருச்சண்டை

2 mins
244



ஒரு மிகச்சாதாராண தெருச்சண்டை எவ்வளவு பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பதற்கு இந்த வழக்கு உதாரணம்.


ஊரடங்கு காலத்தில் மகள் தனது காரில் வெளியே வருகிறார். காவலர்கள் மறித்து விசாரிக்கிறார்கள். வாக்கு வாதமாகிறது. காவலர்கள் மகளுக்கு அபராதம் விதித்து சலான் தருகிறார்கள். மகள் தன் தாயாரை ஃபோனில் அழைத்து விவரம் சொல்கிறார். அவர் உடனே சம்பவ இடத்திற்கு வருகிறார். காவலர்களை உக்கிரமாக கடும் வார்த்தைகளால் விளாசுகிறார். ஆவேசமாய் மகளை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார்.


காவல் துறை இருவர் மீதும் இபிகோ மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டங்களின் கீழ் பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்கிறது.


குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமீன் கோரி கீழமை நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்கிறார்கள். ஒரு வழக்கறிஞர் இப்படி அநாகரீகமாக நடந்து கொண்டது தவறு என்று கூறி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.


மீண்டும் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்படுகிறது. உயர் நீதி மன்றமும் தாயாரின் மனுவை தள்ளுபடி செய்கிறது. மகளுக்கு மட்டும் முன்ஜாமீன் வழங்குகிறது, நிபந்தனையுடன்.


உயர் நீதிமன்றம் இன்று வழங்கிய அந்தத் தீர்ப்பில் ஒரு சில வழக்கறிஞர்களால் ஒட்டு மொத்த வழக்கறிஞர் சமூகத்தின் பெயர் கெடுகிறது என்று இந்த சம்பவத்தை குறிப்பிட்டு சாடியிருக்கிறது. தமிழ்நாடு பார் கவுன்சிலையும் வழக்கில் சேர்த்து, இதுபோன்ற தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது எவ்வித புகாரும் வரவில்லை யென்றாலும், பார் கவுன்சில் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க உதவும் வழிமுறைகளை ஆராயச்சொல்லி இருக்கிறது.


அதே சமயம் சட்ட மாணவியான மகள் மீது அவரது எதிர்காலம் பற்றி சிறிதும் யோசிக்காமல் தேவையின்றி வழக்குப் பதிந்த காவல்துறையையும் நீதிபதி தன் தீர்ப்பில் சாடியுள்ளார். அவர் மீதான வழக்கை கைவிடவும் பரிந்துரைத்துள்ளார். இப்படி யோசிக்காமல் வழக்கு பதிவது கூடாது எனவும் தீர்ப்பில் கூறியுள்ளார்.


இதற்கிடையே வழக்கை விசாரித்த நீதிபதியை ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார் என்று விமர்சித்து, இந்த வழக்கில் இருந்து நீதிபதி தன்னை விடு வித்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் வாட்ஸப்பில் வேண்டுகோள் விடுக்கிறார்.


அந்த வாட்ஸப் வேண்டுகோள் நீதிபதியின் கவனத்திற்கும் வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பில் அதுகுறித்தும் குறிப்பிட்டு, அந்த வாட்ஸப் வேண்டுகோள் தன் நீதி பரிபாலனத்தில் தலையிடும் செயல் என்று கூறி அந்த வழக்கறிஞர் மீது குற்றமுறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் உத்திரவு இடுகிறார்.


இனி இந்த முன்ஜாமீன் மனு மீதான உத்திரவின் மீது உச்ச நீதிமன்றம் சென்றுதான் குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் பரிகாரம் தேடவேண்டும்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract