srinivas iyer

Inspirational

3  

srinivas iyer

Inspirational

மகான்களை சரணடைந்துவிட்டால்

மகான்களை சரணடைந்துவிட்டால்

1 min
215



*போக நிலை* ,

*வீர நிலை*,

*யோக நிலை*!




ஓரு ஊரில்ஓரு மகான் இருந்தார் அவரிடம் ஓரு ஸ்வாமிகள் வந்து எனக்கு ஓரு அம்பாள் விக்கிரகம் செய்து அதை என் ஆசிரமத்தில் பிரதிஷ்டை செய்யவதற்கு நீங்கள் தான் அனுக்கிரஹம் பண்ணவேண்டும் என்றார். அதற்கு மகான் அவரைப்பார்த்து

உனக்கு போகம் வேண்டுமா வீரம் வேண்டுமா அல்லது யோகம் வேண்டுமா என்றார். ஸ்வாமிகள்அதற்கு புரியவில்லையே ஸ்வாமி கொஞ்சம் விளக்குங்கள் என்றார்.

அதற்கு மகான்

திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகையைப்போல் இடதுகால் கீழே இருந்தால் அது போகம். போகாசனம் போகம் என்றால் செல்வம்


சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மனைப்போல் வலது கால் கீழே இருந்தால் அது வீரம் வீராசனம்


காஞ்சிபுரம் ஸ்ரீகாமாஷியைப்போல் இரண்டு காலும் மடித்திருந்தால் அது. யோகம் யோகாசனம். என்றார்


அதற்கு ஸ்வாமிகள் போகாசனம் உடைய அம்பாள் விக்கிரகம் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொடுங்கள் என்றார்.

மகானும் அதன்படி ஏற்பாடு செய்துகொடுத்து விக்கிரகமும் பிரதிஷ்டையாகி மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அது முதல் ஆசிரமத்தில் செல்வம் குவிய ஆரம்பித்தது. ஆனால் ஸ்வாமிகளால் பூஜை ஜெபம் தியானம் யோகம் ஆகிவற்றில் கவனம் செலுத்தமுடியவில்லை.

நமக்கு பிறகு இவ்வளவு செல்வத்தை யார் நல்லமுறையில் பராமரிப்பார்கள் என்ற கவலை வேறு வந்துவிட்டது.

அப்போது தான் யோசித்தார் நாம்

தவறு செய்துவிட்டோமே பேசாமல் மகானிடமே அந்த பொறுப்பை விட்டிருந்தால் நமக்கு எது நல்லதோ அதை செய்து கொடுத்திருப்பாரே

போகம் என்று கேட்டதனால் இப்போது

எதிலும் கவனம் செலுத்தமுடியாமல் போய்விட்டதே என்று மிகவும் வருத்தப்பட்டார்.

ஆகையால் மகான்களை சரணடைந்துவிட்டால் அவர்கள் நமக்கு எப்போது எதை எப்படி கொடுக்கமுடியுமோ அதை அப்படி கொடுப்பார்கள் கவலை வேண்டாம்.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational