srinivas iyer

Action Inspirational

4  

srinivas iyer

Action Inspirational

பஞ்ச தந்திரம்

பஞ்ச தந்திரம்

2 mins
216


பஞ்ச தந்திரம் என்றால் என்ன?


1.மித்திர பேதம் - நட்பை கெடுத்து பகை உண்டாக்குவது


2.மித்ர லாபம் - தங்களுக்கு இணையானவர்களுடன் கூடி பகை இல்லாமல் வாழ்வது


3.சந்தி விக்ரகம் - பகைவரை உறவு கொண்டு வெல்லுதல்


4.லப்த காணி (artha nasam) - கையில் கிடைத்ததை அழித்தல்


5.அசம்ரெஷிய காரியத்துவம் - எந்த காரியத்தையும் விசாரணை செய்யாமல் செய்வது.


கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணு சர்மாவால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 86 கதைகளின் தொகுப்பே இந்த பஞ்ச தந்திர கதைகள். விலங்குகளை கொண்டு மனிதனுக்கும், அரசனுக்கும் அறம் போதிக்கும் கதைகள் இவை.


அழகான ஒரு ஏரியின் கரையில் , அதிசயமான ஒரு பறவை வாழ்ந்து வந்தது, அதற்கு ஒரு உடல், இரண்டு தலைகள். இரண்டு தலைகளும் , ஒற்றுமையாக நேசம் கொண்டு பல நாட்கள் வாழ்ந்து வந்ததன.


ஒரு நாள், அமுதம் போன்ற ருசியான ஒரு பழத்தை ஒரு தலை கண்டது. எடுத்து ருசித்ததும், "ஆகா என்ன சுவை" என்றது மற்றொரு தலையிடம். இதைக் கே ட்டு மற்றொரு தலை "எனக்கும் கனி தா" என்றது கனிவாய்.


பழத்தின் சுவையில் மயங்கிய அந்த தலையோ, "நம் இருவருக்கும் உடல் ஒன்று தானே, நான் தின்றால் என்ன? நீ தின்றால் என்ன?" என்றது. இது நாள் வரை எல்லாவற்றையும் பகிர்ந்து உண்டு வந்த அந்த தலைகளுக்குள் இப்படி பகை மூண்டது. 


ஏமாந்த தலை பழி வாங்கும் தருணம் பார்த்து காத்து இருந்தது. ஒரு நாள் , விஷக் கனி ஒன்று அதன் கண்ணில் பட்டது. அதை அந்த தலை உண்ணப் போவதைப் பார்த்ததும், பதறிப் போய் கத்தியது மற்றொரு தலை "உண்டு விடாதே , இருவருக்கும் ஆபத்து" என்றது. ஆனால் பழிவாங்கும் உணர்ச்சியில்

அதைக் கேட்காமல் ஏமாந்த தலை உண்டு விட்டது. அந்த பறவை இரு தலைகளும் தொங்க இறந்து விழுந்தது.


இந்த கதையிலிருந்து பல கருத்துக்களை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொருவரும் தங்கள் புரிந்து கொள்ளல் மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப தங்கள் வாழ்வின் பல நிகழ்ச்சிகளுக்கு வேறு வேறு கோணங்களில் பொருத்தி பார்க்க முடியும். "அமுதமே ஆனாலும் அதை பகிர்ந்து உண்ண வேண்டும்" ,"துணை என்பது அவசியம்-ஒருவருக்கு ஒருவர் பகை இல்லாமல் இருத்தலும் அவசியம்"என்பதே இக்கதையின் அடிப்படை கருத்து.


Rate this content
Log in

Similar tamil story from Action