STORYMIRROR

srinivas iyer

Action

5  

srinivas iyer

Action

ஆறாம் அறிவு

ஆறாம் அறிவு

1 min
290


ஆறாம் அறிவு சிரிக்க மட்டுமே..!


அந்த ஹோட்டலில் நுழைந்து மேஜை முன் அமர்ந்தார் பார்வையற்ற மனிதர் ஒருவர்.


அருகே வந்த மேனேஜர்,

சார்..மெனு தரவா..பார்த்து ஆர்டர் செய்யுங்கள்...


அய்யா..நான் பார்வையற்றவன்..

உங்கள் சமையலறையிலிருந்து கரண்டிகளைக்கொண்டு வாருங்கள். அதை முகர்ந்து பார்த்தே நான் ஆர்டர் செய்கிறேன்..


மேனேஜர் உள்ளே சென்று சில கரண்டிகளை கொண்டுவர, அவற்றை முகர்ந்து பார்த்துவிட்டு..


சார் ..எனக்கு ஒரு பிளேட் சில்லி சிக்கனும் சப்பாத்தியும் கொண்டு வாங்க..


மேனேஜருக்கு ஆச்சர்யம்..என்ன ஒரு நுட்பமான அறிவு...


இன்னொரு நாள் வந்தவர், முன் போலவே கரண்டிகளை முகர்ந்து பார்த்து முட்டை பரோட்டாவும் மட்டன் சாப்சும் ஆர்டர் செய்தார்..


இது இவ்வாறு அவ்வப் போது தொடர, ஒருநாள் மேனேஜர் அவரை சோதிக்க எண்ணம் கொண்டார்..

உள்ளே கிச்சனில் சென்று அங்கே மேற்பார்வை யிட்டு கொண்டிருந்த தனது மனைவியிடம் ஒரு கரண்டியை கொடுத்து,

உமா..இதை உனது உதடுகளில் நன்றாக தேய்த்து எடு...

என்று சொல்லி, அந்தக் கரண்டியை கொண்டுவந்து பார்வை யற்றவரிடம் கொடுத்தார்...


முகர்ந்து பார்த்த அவர்,


சார்..சார்.. எனது கிளாஸ்மேட் உமா இங்குதான் வேலை பார்க்கிறாளா...?


என்று கேட்க...மேனேஜர் மேஜைமேல் மயங்கிச் சாய்ந்தார்!!!



Rate this content
Log in

Similar tamil story from Action