srinivas iyer

Inspirational

4  

srinivas iyer

Inspirational

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

2 mins
197



நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது என்னை பரிபூரணமாக அம்மை ஆட்கொண்டது. எல்லாம் பெரிது பெரிதாக  கொ ப்பளமாக அம்மை .உடலில் துணியே போட முடியாது. உடம்பே பற்றி எரியும். என் தந்தை பொறுமையாக அமைதியாக பக்கத்தில் உட்கார்ந்து வேப்பிலைக் கொத்தால் தடவி விடுவார். என் கைவிரல்களால் சொ றிய போகும் போது அன்பால் தடுத்து நிறுத்தி வேப்பிலையால் தடவிக் கொடுப்பார் . பேர் அன்பு. சிறு வெங்காயத்தை உரித்து ,மோர் குடிக்க, புளித்து விடாமல் அந்த காலத்தில் பிரிட்ஜ் கூட கிடையாது ,என்னை கண்கொத்திப் பாம்பு போல் பாதுகாத்தார் . மோர் ,வெங்காயம், வாழைப்பழம் என்று விடாமல் வாங்கித் தருவார்.

எனக்கு சைக்கிளில் செல்வது என்றால் மிகவும் படு ஜாலி. எனவே என்னை சதா சைக்கிளில் வைத்துக்கொண்டே எல்லா ஊர்களுக்கும் அழைத்துச் செல்வார்.


ஒருமுறை வத்தலக்குண்டில் இருந்து மதுரை சென்ற போது திரும்பி வரும் வழியில் சிலுக்குவார்பட்டி .இருட்டு நேரமாநதால் நான் கீழே விழுந்து விட்டேன் .நான் கீழே விழுந்ததால் சைக்கிளுடன் என் அப்பாவும் விழுந்துவிட்டார் .அப்போது கூட தான் விழுந்தது பற்றி கவலைப்படாமல், என்னைப் பார்த்து ஒன்றும் ஆகவில்லையே.அடி  படலயே என்று துடிக்கிறது இன்றும் கண்களில் நிற்கிறது .அதுவல்லவோ தந்தை பாசம்.

நாங்கள் வத்தலக்குண்டில் வசித்த போது அங்கு மூன்று அக்ரஹாரம். நாங்கள் இருந்தது சிவன் கோவில் தெரு. மேலும் நடுத்தெரு,ஒற்றை த்தெரு என்று இரு அக்ரஹாரம் உண்டு.


என் வீட்டை ஒட்டி அது ஸ்ரீ ராமசந்திர பஜனை சபா.

எதிரில் சிவன் கோயில் .காசிவிஸ்வநாதர் , விசாலாக்ஷி .


தினமும் காலையில் எழுந்து என் வீட்டிற்கு, ராமசந்திர பஜனை சபாவிற்கு நான்தான் பெருக்கி ,நீர் தெளித்து ,கோலமிட்டு ,செம்மண் இ டுவேன். அது புண்ணிய காரியம் என்று என்னை வற்புறுத்தி செய்யச் சொல்வார் என் அப்பா.


நாங்கள் வத்தலகுண்டில் இருந்தபோது அங்கே மூன்று அக்ரஹாரத்தில்


நிறைய பெண்கள் கல்யாணம் ஆகாமலே இருந்தார்கள் .என் அப்பா தினமும் மாலை வேளையில் விஷ்ணு சகஸ்ரநாமம், நவக்கிரக ஸ்தோத்திரம் ,ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம் எல்லாம் சொல்லிக் கொடுத்து ஒரு வருடத்தில் சடசடவென்று எல்லோருக்கும் கல்யாணம் முடிந்தது .அப்போது எல்லாம் பே சிக் கொண்டார்கள் இவரால் தான் என்று.


அந்தக் காலத்து எஸ்எஸ்எல்சி ,பதினோராம் வருட பரீட்சை நடந்து கொண்டு இருக்கிறது. அன்று கணித பரிட்சை .


ஆனால் வலது கை ஆள்காட்டி விரலில் கீறி ரத்தம் வடிந்தது .துடித்துவிட்டார். என் அப்பா .பரீட்சை நேரத்தில் குழந்தைக்கு விரலை நறுக்கி கொண்டாலே என்று அவர் கண்களில் நீர் பொல பொல என்று கொட்டியது .அப்படி எழுதியும் கணக்கில் நூற்றுக்கு 97 மார்க் வாங்கி விட்டேன்.அவருக்கு சந்தோசம். 


தினமும் அதிகாலை 3 மணிக்கு ப்ப்ரஹ்மமுகூர்த்தம் என்று எழுந்திருக்க செல்வார். அப்போது எழுந்ததும் காலையில் விஷ்ணு சுப்ரபாதம் ,சகஸ்ரநாமம் ,ராஜேஸ்வரி அஷ்டகம், அன்னபூர்ணாஷ்டகம், காமாக்ஷி து க்க நிவாரண அஷ்டகம், லலிதா சஹஸ்ரநாமம் என்று பலவிதமான சுலோகங்கள் ,சாங்ஸ் சொல்ல வேண்டும் .அது அபார ஞாபக சக்தியை பெருக்கும் என்று கூறுவார் .உண்மைதான்.


வாழ்வில் என் ஒரே குரு என் அப்பாதான் .அவர் சொல்லித்தராத மந்திரமோ


ஸ் லோகமோ கிடையாது.


தனுர் மாத பஜனை மார்கழி மாசம் 5 ஏஎம் தொடங்கி விடும். எனவே அவர் நாலு மணிக்கு எல்லாம் கடும் குளிரில் கிணற்றில் தண்ணீர் இழுத்து, பச்சை தண்ணீ றில் தலை குளித்து, பஞ்சகச்சம் கட்டி, ருத்ராட்சம் மாலை அணிந்து, விபூதி பட்டை உடல் முழுவதும் பூசி பரமேஸ்வரன் பார்ப்பது போலவே இருக்கும். கண்கொள்ளா காட்சி.


நரசிம்ம ஜெயந்தி க்கு 10 நாள் புதுக்கோட்டையில் அமர்க்களப் படும். அதற்கு சைக்கிளிலேயே என்னை அழைத்துப் போவார் .கோபாலகிருஷ்ண பாகவதர் அந்த காலத்துல கோலாகலமாக நடத்துவார்கள். 10 நாட்கள் உற்சவம் .எல்லோர் வீட்டிலும் தங்க இடம் தந்து, ஃப்ரீயாக அன்னதானம். அவர்களுக்கு பிரமாதமாக செய்வார்கள் எங்கப்பா பாடினார் என்றால் அந்த காலத்திலே SG கிட்டப்பா அவர்கள் பாடினால் சுற்றியே ஐந்து கிலோமீட்டர் காவேரிக்கரை சுற்றிக் கேட்கும் என்பார் என் அப்பா .அது போல் தான் என் அப்பா பாடினால் கணீர் குரல்.


என் அப்பாவைப் பற்றி நினைத்தால், சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு ஒரு வரியும் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது .என் கடைசி சுவாசம் உள்ளவரை அது என்னை விட்டு விலகாது., மறையாது.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational