DEENADAYALAN N

Inspirational

5  

DEENADAYALAN N

Inspirational

மிஸ் குருவம்மாவின் ஆய்வுக் குறிப்புகள்!

மிஸ் குருவம்மாவின் ஆய்வுக் குறிப்புகள்!

5 mins
489


 

4 of 52

Prompt: 4. கதை - ஒரு தனிப்பட்ட சோகம் அல்லது விபத்தை சித்தரிக்கும் ஒரு சிறுகதையை எழுதுங்கள், அதன் பின்னணியில் தேசிய பேரழிவு விரிவடைகிறது, இதன் விளைவாக எதிர்பாராத மனித இயல்பு பற்றிய சில கடினமான, உலகளாவிய உண்மையை வெளிப்படுத்தும் கதையை எழுதவும்.

 

மிஸ் குருவம்மாவின் ஆய்வுக் குறிப்புகள்!

(கோவை என். தீனதயாளன்) 

     


அதிகாலைச் செய்தியைக் கேட்ட மக்கள் – குறிப்பாக அறிவியல் சமூகம் - அதிர்ந்துதான் போனார்கள். திரு.ஜனஞ்சயன் (ஜனா) என்னும் உலகறிந்த விஞ்ஞானி விபத்தில் காலமானார் என்பது செய்தி. பூமி அறிவியலில் ஆழ்ந்த அறிவுடையவர். டெல்லியில் ஒரு அறிவியல் கருத்தரங்கு. அதில் அவருடைய அறிவியல் சிஷ்யை குமாரி குருவம்மாவுடன் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தார். விமான நிலையத்தில் இறங்கி குருவம்மாவை வழி அனுப்பி வைத்து விட்டு தன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போதுதான் இந்த விபத்து நடந்திருக்கிறது. அவருடைய ஓட்டுனர் சில லேசான காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். ‘விரைவில் வீட்டுக்குப் போ’வென தன்னை அவசரப்படுத்திக் கொண்டிருந்ததாக ஓட்டுனர் சொல்லிக் கொண்டிருந்தார்.


சரி! இனி இந்தக் கதையின் பின்புலத்திற்குள் நுழைவோம். கதையை ஜனா அவர்களே நமக்காக சொல்கிறார். முடிந்த வரை அவர் சொல்லட்டும். அவர் இறந்த பிறகு இந்தக் கதையின் எழுத்தாளனாகிய நான் தொடர்வேன்.

 

ஜனா சொல்கிறார்:

கடந்த மாதம் 20ம் தேதி, டெல்லி அறிவியல் சங்கமம் ஒன்றிலிருந்து எனக்கு கைப்பேசி அழைப்பு வந்தது. அதற்கு முன் இந்த சங்கமம் பற்றி நான் படிக்கும் போதெல்லாம், இப்படி ஒரு அறிவியல் சங்கமம் இருக்குமா என ஐயம் எழும். ஆனால் அதன் ‘அறிவியல் செயலர்’ திரு. டேராவிடம் பேசும்போதுதான் என் ஐயம் தவறென்று தெரிந்தது.


வழக்கமான ‘ஹலோ’ மற்றும் ‘வணக்கங்க’ளுக்குப் பிறகு, டேரா பேசினார். ‘சார் நாங்கள் புவிசார் (Earth) சிம்போசியம் ஒன்றை நடத்தப் போகிறோம். அதன் தலைப்பு “ பூமிக்கிரகம் “ ‘


‘அப்படியா! மிக நன்று! இது ஒரு இனிய செய்தி!’ என்றேன் நான்.


‘ஆமாம் சார்.. எங்களின் அறிவியல் சங்கமம் சார்பாக, இந்த சிம்போசியத்தை தலைமைப் பொறுப்பேற்று நிர்வகித்து நடத்தித் தர, உங்களை மகிழ்ச்சியுடன் அழைக்கிறேன். ‘பூமி மற்றும் மனிதவர்க்கத்தின் வாழ்நாள்’ என்பது இதன் தலைப்பு. ‘


‘நன்றி டேரா. ஆனால் முதல் தர விஞ்ஞானி குமாரி. குருவம்மா பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் இதற்கு மிகவும் பொருத்தமானவர். புவி சார்ந்த பல ஆராய்ச்சிகளை செய்தவர். செய்து கொண்டிருப்பவர். இந்த பொறுப்பிற்கு மிகவும் பொருந்தக் கூடியவர். நீங்கள் அவரை அணுகி..’


‘உண்மை சார். ஆனால் எங்கள் அறிவியல் சங்கமத்தின் இளம் விஞ்ஞானிகள் உங்களுடைய வருகையை மிகவும் எதிர்பார்க்கிறார்கள். ‘புவி இயல் விஞ்ஞானத்தில் சிறப்பான அறிவைக் கொண்டவர் நீங்கள். தங்களின் வருகை தங்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.’

என்றார் டேரா.


‘என்றாலும் குமாரி குருவம்மா சமீப காலமாக புவிசார் அறிவியல் கோட்பாடுகளில், மிக ஆழமான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறார். மிக அரிதான, ஆச்சரியப் படத்தக்க புவிசார் கோட்பாடுகள் சம்மந்தமாக மிக நுட்பமான முடிவுகளை கண்டறிந்துள்ளார். ‘பூமி’யின் ஆச்சரியமான தரவுகளையும் தகவல்களையும் அவர் தரக்கூடும்.’ நான் அழுத்தமாக கூறினேன்


‘சரி சார். நாங்கள் குமாரி குருவம்மா அவர்களையும் இந்த சிம்போசியத்தில் பங்கு பெற அழைக்கிறோம். அவர் தன்னுடைய விசாலமான ஆய்வு அறிவை நம்மோடு பகிரட்டும்.’ என்றார் டேரா.


‘அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். அவருக்கு நான் சொல்லும் இந்த தலைப்பை சொல்லி விடுங்கள் : “பூமி – தோற்றமும் – வீழ்ச்சிக்கான சாத்தியங்களும்” (The Raise and the Probable Fall of Earth)


‘நிச்சயமாக சார்’


‘பங்கு பெறும் அனைத்து விஞ்ஞானிகளையும், தாங்கள் வழங்கப்போகும் தலைப்பின் சாராம்சத்தை, ஓரிரு நாட்கள் முன்னதாகவே எனக்கு அனுப்பி வைத்து விடச் சொல்லுங்கள்”


‘நிச்சயம் சார்’


ஒரு வெற்றிப் புன்னைகையுடன் கைப்பேசி தொடர்பை துண்டித்துக் கொண்டேன்.




சில நிமிடங்களிலேயே திரு. ஹாசரை அழைத்தேன்.


ஒரு தொலைதூர தேசத்திலிருந்து, ‘ஹலோ’ என்றார் ஹாசர்


‘ஹலோ ஹாசர். எலியை பொறிக்குள் கொண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பு அமைந்திருக்கிறது’ என்றேன் உற்சாகத்துடன்.

 

‘ஓ.. அட்டகாசமான செய்தி’ என்று குதூகலித்தார் அவர்.


‘ஹாசர். இப்போதுதான் முதல் படியின் அடிக்கல்லைத் தொட்டிருக்கிறேன். இன்னும் முன்னேற வேண்டி இருக்கிறது. இன்னும் நெருக்கமாக வரும் சமயத்தில் உங்களை தொடர்பு கொள்வேன்.


‘ஓகே சார்’ என்றார் ஹாசர்.

 

 

 

மேலும்  அரை மணி நேரம் கழித்து, குமாரி குருவம்மாவை அழைத்தேன்


‘வணக்கம் சார். நலமா?’ மகிழ்ச்சியான குரல் மறுமுனையிலிருந்து வெளிப்பட்டது.


‘மிக்க நலம் குருவா. நீ எப்படி இருக்கிறாய்?’


‘மிகுந்த நலம் சார்’


‘டெல்லி அறிவியல் சங்கமத்திலிருந்து அழைப்பு வந்திருக்கும் என நம்புகிறேன்’ என்றேன் நான்


‘ஆமாம் சார். ஆனால் அதில் கலந்து கொள்ள எனக்கு கொஞ்சம் தயக்கம் இருக்கிறது’


‘என்ன அது?’


‘சார். பூமி சம்மந்தப்பட்ட என்னுடய ஆராய்ச்சி முடியும் தருவாயில் இருக்கிறது. ஆனால் இறுதி செய்யப்பட இன்னும் எனக்கு சமயம் தேவைப்படுகிறது. இந்நிலையில் என்னுடைய கண்டு பிடிப்புகளை நான் வெளியிட முடியாத நிலையில் இருக்கிறேன். எனவே சிம்போசியத்தில், நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பில், நான் சிறப்பாக எதையும் சொல்லி விட முடியாது.’


‘ஓ.. அப்படியா.. உன் ஆராய்ச்சியின் பளிச்சிடும் பகுதிகளை மட்டும் தொட்டுச் செல். ஆரம்பத்தையோ முடிவையோ நீ தொட வேண்டாம்.’


‘ஆனால் சார்.. வந்து..’ குருவம்மா ஏதோ சொல்ல வந்தார்.


‘சரி குருவா.. நாம் நேரில் சந்தித்து இது பற்றி ஒரு முடிவெடுப்போம். ‘ நான் வலையின் எல்லையை சற்றே அதிகப் படுத்தினேன்.


சிறிய தயக்கத்துடன், சந்திக்க ஒத்துக் கொண்டார், குருவம்மா. சுமார் பத்து வருடங்களாக என்னுடைய ஆய்வு மாணவராக இருந்தவர் குருவம்மா. அவருடைய இரண்டு டாக்டர் (PhD)s பட்டங்களுக்கும் நானே வழிகாட்டியாய் இருந்தேன். ஆனால், ஏனோ புவி சார்ந்த ஆய்வை மேற்கொள்ள அவர் என்னிடம் வரவில்லை. ஒரு IIT பேராசிரியரின் வழிகாட்டுதலை தேர்ந்தெடுத்துக் கொண்டார். அப்போதிருந்தே எனக்கு அவர் மேல் ஒரு எரிச்சல் உண்டானது. இப்போது இரண்டு காரணங்களுக்காக அவருக்கு இடையூறு செய்ய விரும்புகிறேன். முதலாவதாக: அவரது ஆராய்ச்சியில் அவருக்கு தவறான வழி காட்டுதலை காண்பித்து, அவருடைய பெயருக்கும் அறிவியல் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவது. அடுத்ததாக குருவம்மாவின் ஆய்வுக் குறிப்புகளைக் கைப்பற்றி, அதை தன்னை நாடி வந்திருக்கும் ஒரு சமூக கும்பலிடம் கைமாற்றி, ஐம்பது கோடி ரூபாய்களை அடைந்து விடுவது.



குருவம்மாவும் நானும் சந்தித்த போது சிம்போசியத்தில் பங்கு பெற அவரிடம் ஒப்புதல் பெற்றேன். சந்திப்பில் விவாதிப்பதற்காக அவர் எடுத்து வந்திருந்த ஆய்வுக் குறிப்புகளை, அவர் ஓய்வறையை பயன்படுத்த சென்ற சமயமாகப் பார்த்து, அவரின் கணினியிலிருந்து என் கைப்பேசியில் ஏற்றிக் கொண்டேன்.



குருவம்மா கிளம்பியவுடன், ஹாசரை அழைத்தேன். ஆய்வுக் குறிப்புகள் என் கைவசம் இருப்பதை தெரிவித்தேன்.


‘உடனே அனுப்பி வையுங்கள் சார்.’ அவசரப்படுத்தினார் ஹாசர்.


‘மன்னிக்கவும் நான் அறிவுறுத்திய முறையில் பணத்தை டெபாசிட் செய்து விட்டு ஆதாரத்தை அனுப்புங்கள். உடனடியாக ஆய்வுக் குறிப்புகள் உங்களை வந்தடையும்.’


‘நிச்சயமாக சார்’ என கைப்பேசி துண்டிக்கப்பட்டது.



சிம்போசியம் நடந்த நாளன்று நான் குறிப்பிட்டிருந்த முறைகளில் ஐம்பது கோடி பணத்தை டெபாசிட் செய்யப்பட்டிந்ததை உறுதி செய்தனர். உடனே, நானும் குருவம்மாவின் ஆய்வுக் குறிப்புகளை, ஒரு பிரத்தியேக ஏற்பாட்டின் படி, எண் சமிக்ஞை முறையில் உட்பதித்து இரட்டிப்பு குறியீட்டுத் தொகுப்பு மூலம் அனுப்பி வைத்தேன்.


சிம்போசியம் சிறப்பாக நடந்தது. குருவம்மாவின் பங்களிப்பு சிறப்பாக பேசப்பட்டது. ‘இயற்கை அல்லது மனித-சக்திகளால், மனித இனத்திற்கும், பூமிப்பந்திற்கும் பயங்கரத்தை விளைவிக்கும் ஆற்றல்களை, செயலிழக்கச் செய்யும் நோக்கிலான அவரது ஆய்வே’ அவரது பிரதான ஆராய்ச்சிக் களமாக இருந்தது. அவரது உரையில் மனித இனத்தின் வாழ்நாள், பூமிப்பந்தை அசைக்கும் ஆற்றலின் அளவு, பூமிவாழ் உயிரினங்களை அழிக்கவல்ல நிகழ்வுகள் (Astroid Impact, Expanding Sun, Moving Stars etc), பூமியை அச்சுறுத்தும் ஆற்றல்கள் (Nuclear War, Global Pandemic, Major Asteroids Impact, Super Valcano etc) போன்றவை விலாவாரியாக பேசப்பட்டது.


பங்கெடுத்துக் கொண்ட அனைத்து விஞ்ஞானிகளும் குருவம்மாவை பாராட்டி, நம் பூமித்தாய் மற்றும் மனித இனத்தைக் காக்க அவர் மேற்கொண்டிருக்கும் ஆய்வின் முடிவுகளை ஆவலாக எதிர்பார்ப்பதாக அறிவித்தனர்.


இவ்வாறு சிம்போசியம் இனிதே நிறைவேற நானும் குருவம்மாவும் ஊர் திரும்ப டெல்லி விமான நிலையத்தை நோக்கி விரைந்தோம். குறித்த நேரத்தில் விமானம் புறப்பட்டு எங்கள் ஊரை அடைந்தது. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். எங்களின் இரு ஓட்டுனர்களும் எங்களுக்காக காத்திருந்தனர். குருவம்மா அவருடைய காரில் கிளம்ப, நான் என் காரில் கிளம்பினேன்.




சரி! இதுகாரும் இந்தக் கதையை சொல்லி வந்த ஜனா அவர்கள் இல்லாமல் போன காரணத்தால், இனி, இந்தக் கதையை எழுதிக் கொண்டிருப்பவன் என்கிற முறையில், நான் தொடர்கிறேன்.

 

நன்மை செய்யும் குழு’ விற்கு அதன் உளவுப் பிரிவின் மூலமாக ஒரு தகவல் வந்தடைந்தது. அதில், ஜனா என்னும் புகழ் பெற்ற விஞ்ஞானிக்கு, ஒரு உலக சமூக விரோத குழுவிடம் தொடர்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ரகசிய விசாரணையில் தெரிய வந்த தகவல்: இந்த தொடர்பின் நோக்கம், ஜனா அவர்களின் அறிவியல் சிஷ்யையான, புகழ் பெற்ற, புவிசார் விஞ்ஞானி குமாரி குருவம்மா அவர்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் ஆய்வின் விவரங்களை, ஒரு மிகப் பெரிய தொகைக்கு பரிமாற்றம் செய்து கொள்வது என்பதாகும்.


அதன் பின் அவரது தொடர்புகள் கவனிக்கப்பட்டு பின்தொடரப்பட்டது. குருவம்மா அவர்களுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டு, எச்சரிக்கை செய்யப்பட்டது. எனவே, ஜனாவை சந்திக்கப் போகும்போது குருவம்மா, தன் முக்கிய எந்த கண்டு பிடிப்பையும் அவரோடு பகிர்ந்து கொள்ளவில்லை. தான் எடுத்துச் சென்ற தகவல்களும் உபயோகமற்றதாக இருக்குமாறு பார்த்துக் கொண்டார். அதை அவர் தன் கணினியிலிருந்து நகல் எடுத்துக் கொள்ளவும் (ஓய்வு அறைக்கு சென்று) சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த தகவல்களை சற்றும் ஆராயாமல், பணத்தைப் பெற்றுக் கொண்டு, ஜனா சமூக விரோதிகளுக்கு அனுப்பி வைத்தார். அந்த தவறான தகவல்களால் வெகுண்டெழுந்த சமூக விரோத சக்தி, ஜனாவின் கார் பயண விபத்தை திட்டமிட்டு அரங்கேற்றியது.


தீதும் நன்றும் பிறர் தர வாரா’ – [நன்றி – கணியன் பூங்குன்றனார்]



கோவை என். தீனதயாளன்


Rate this content
Log in

Similar tamil story from Inspirational