DEENADAYALAN N

Classics

5  

DEENADAYALAN N

Classics

அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் இப்பத்திரண்டு

அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் இப்பத்திரண்டு

4 mins
36


அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் இப்பத்திரண்டு


ஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!

(கோவை என். தீனதயாளன்)


டுமீல்.. டுமீல்… - நீங்களும் ஓமர்ஷெரீஃப்தான் – க்ரிகரிபெக்தான்

 

இந்தப் பகுதியை சுற்றிப் பார்ப்பதற்காக பேருந்தில் செல்லும்போது, ‘ஹௌலபாய் ராஞ்ச்’ (Haulapai Ranch) என்னும் இடத்தில் இறங்கிக் கொண்டோம். ஏதோ அந்தக்கால கௌபாய்(Cowboy) படங்களான மெக்கனாஸ் கோல்ட், ஜாங்கோ, ஒன் சில்வர் டாலர் போன்ற படங்களில் வரும் ‘கௌபாய்சூழல்’ உலகில் நம்மை இறக்கி விட்டு விட்டதைப் போல் ஓர் உணர்வைக் கொடுக்கும்.

  

                                                  


அந்தப் படங்களில் நாம் பார்க்கும் ஜெயில், சுருக்குக் கயிறு இத்யாதிகளுடன் தூக்கிலிடும் மேடை, நான்கு சக்கர சாரட் வண்டி, தபால், தந்தி அலுவலக முகப்பு அமைப்பு, கரடு முரடான வங்கி, கௌபாய் நடன அரங்கம், குதிரை சவாரி சூழல், கௌபாய் உடைகளுடன் பாடிக் கொண்டே கிடார் வாசிக்கும் நபர், தட்டுமுட்டு கூடாரங்கள், உயரத்தில் அமைக்கப்பட்ட ட்ரம் கூண்டு - போன்ற சூழலில் நாம் உயிரோட்டமாக செயல் பட்டு உலவுவது உண்மையிலேயே ஒரு பிரம்மிக்கத் தக்க உணர்வு.


நானும் என் மகனும் எதிர் எதிர் திசையில் நின்று கொண்டோம். பொய் குண்டுகள் நிரப்பிய தூப்பாக்கிகளை இடுப்பில் வைத்துக் கொண்டோம். ஒரு கௌபாய் ஒன், டூ, த்ரீ சொல்வார். இடுப்பிலிருந்து துப்பாக்கியை எடுத்து, விசையை பின் தள்ளி, விசை வில்லை இயக்கியவுடன் உண்மையிலேயே ‘டும்’ என்று சத்தத்துடன் வெடிக்கும். யார் முதலில் சுட்டார்களோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிப்பார். அப்போது எழும் ஒரு பெருமிதமான உணர்வுக்கு ஈடு இணை இல்லை!


நாங்கள் பார்த்ததில் ஹௌலபாய் பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனமும் குறிப்பிடத்தக்க ஒன்று.


க்ராண்ட் கான்யான் பயணம் மேற்கொண்டதற்கும், ஹௌலபாய் மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளை ஈடுபாட்டுடன் கண்டுகளித்து அனுபவித்ததற்கும் சான்றாக ஒரு சான்றிதழும் வழங்குகிறார்கள்.


நயாகரா நீர் வீழ்ச்சியைப் போலவே, க்ராண்ட் கேன்யானும் எங்கள் வாழ்வில் மறக்க முடியாத, என்றென்றும் மனதை ஆக்கிரமித்து நிற்கும் அற்புத ஆச்சரியங்களில் ஒன்று!



நன்றி நவிலும் நாள்!(THANKS GIVING DAY)

வ்வொரு வருடமும், நவம்பர் மாதம், நான்காம் வியாழக்கிழமை அன்று (Thanks Giving Day) நன்றி நவிலும் நாள் அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. 1789ல் அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களால் நன்றி நவிலும் நாள் உருவாக்கப்பட்டதாகவும். 1863ல் அப்போதைய ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் அவர்களால் இந்நாள் அதிகாரபூர்வ விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதாகவும் அறிகிறோம்.


எல்லாம் வல்ல கடவுள் அருளிய நன்மைகளுக்காகவும், அனைவரையும் காத்தருள்வதற்காகவும் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது. பயிர்கள் செழித்து வளர்ந்து அறுவடை விருந்து படைக்கும் நாளாகவும் இந்நாள் சொல்லப் படுகிறது.


நன்றி நவிலும் நாளுக்கு (வியாழன்) அடுத்த நாள் வரும் வெள்ளிக் கிழமை கருப்புவெள்ளி (BlackFriday) என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் பழங்குடிமக்கள் அமெரிக்காவிற்கு செய்த பங்களிப்பை கௌரவிக்கும் நாளாக அந்நாள் குறிக்கப்படுகிறது.



அமெரிக்காவின் ஆடித்தள்ளுபடி!

 

இந்த கருப்புவெள்ளி அன்றுதான் (Shopping Day) ‘வாங்கும் நாளாக’ மக்கள் கடைபிடிக்கிறார்கள். இதைப் பயன்படுத்தி, அமெரிக்காவின் ஏறத்தாழ எல்லா கடைகளிலும் அதிக பட்ச தள்ளுபடி விலையில் பொருள்கள் விற்பனை செய்யப் படுகின்றன. பொருள்களின் தரமும் உயர்ந்து, விலையும் குறைந்து இருப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக இந்நாளில் கடைகளுக்கு படை எடுத்து பொருள்கள் வாங்கிக் குவிக்கிறார்கள். கிடைக்காமல் போய்விடுமோ என்கிற ஆதங்கத்தில் பல மணி நேரம் வரிசையில் நின்று பொருள்களை வாங்குகிறார்கள்.


நம் நாட்டில் பொங்கல், தீபாவளி, ஆடித் தள்ளுபடி, அட்சய திருதியை போன்ற சமயங்களில் தள்ளுபடி விற்பனை செய்வது போல் இதைக் கருதலாம் என்று நினைக்கிறேன்! ஆனால் கீழ்க் கண்ட வகையில் சற்று வித்தியாசப் படுகிறது.


நாங்கள் சென்ற ஒரு பிரபல பல் பொருள் அங்காடியில், குறிப்பிட்ட நேரத்திற்கு கடையைத் திறந்தார்கள். மற்றவர்களுடன் வரிசையில் நின்று நாங்கள் நான்கு பேரும் உள்ளே சென்றோம். ஒவ்வொருவர் கையிலும் சிறிய மணி இணைக்கப்பட்டு ஒரு கவரைக் கொடுத்தார்கள். ஒரு குறிப்பிட்ட நேரம் வரை இவ்வாறு கொடுத்தார்கள். ஒவ்வொரு கவரிலும் பத்து டாலர் மதிப்பிட்டு கூப்பன் ஒன்றை வைத்திருந்தார்கள். நாங்கள் அன்று அந்தக் கடையில் வாங்கிய பொருட்களின் மதிப்பு ஐம்பது டாலர்கள்தான். எனவே அந்த கூப்பன்களோடு வெறும் பத்து டாலர் மட்டுமே நாங்கள் எங்கள் கையிலிருந்து கொடுக்க வேண்டியிருந்தது!


நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ! மிகுந்த மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கினால் தான் அந்த பத்து டாலர்கள் தள்ளுபடி என்றில்லை. அந்த பத்து டாலர்களுக்கு மட்டும் கூட நீங்கள் ஏதாவது பொருள்கள் வாங்கிக் கொண்டு செல்லலாம்!



ஹெலிகாப்டர் சவாரி!

ஒரு நவம்பரில் ‘லேக் மீட்’ (lake mead) என்னும் இடத்திற்கு சென்றிருந்தோம். அங்கே ‘லேக் மீட்’ மீது பறக்கும் ‘ஹெலிகாப்டர் சவாரி’க்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. முப்பத்தொன்பது டாலர்களுக்கு (அப்போதைய நம் பணத்திற்கு சுமார் …ம்.. சரி விடுங்கள்…) இரண்டு நிமிடம் சவாரி! மலை முகடுகளுக்கு இடையில் குறுக்கும் நெடுக்கும் ஒரு குறுகிய சாகச பயணம். இன்னும் சற்று அதிக பணம் கொடுத்தால் அருகிலிருக்கும் ‘ஹூவர் டேம்’ (hoover dam) மீதும் பறந்து மலைப்பூட்டுவார்கள். ஓட்டுனரின் அருகில் கூட அமர்ந்து செல்ல அனுமதி உண்டு.


‘லேக் மீட்’ என்பது ஒரு நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கம் அல்லது குளம். ‘ஹூவர் டேமி’லிருந்து நீரைப் பெறுகின்றது. அதிக பட்சமாக நூற்றுத் தொன்னூறு கிலோமீட்டர் நீளமும், நூற்று அறுபத்தி இரண்டு மீட்டர் ஆழமும் உடையது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். குளத்தில் ஆயிரக்கணக்கான அன்னங்களும் பல்லாயிரக் கணக்கான மீன்களும் பரவசமூட்டுகின்றன. அவற்றிற்கு சுற்றுலாப் பயணிகள் ஆங்காங்கே உணவளித்து மகிழ்கிறார்கள். நூற்றுக் கணக்கான மீன்கள் ஒருசேர வரிந்து கட்டிக் கொண்டு வாயைப் பிளந்து கொண்டு வந்து அந்த உணவைப் பெற நிற்பது மலைப்பையும் ஒரு வித அசுயையும் அளிக்கிறது. கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கான படகுகள் ஆங்காங்கே நிறுத்தப் பட்டு கிடக்கின்றன. ஏராளமான படகுகள் சவாரியில் இருக்கின்றன.


டிசம்பரில் கண்டவை

சர்வம் ஒளி மயம்!

        

                                               

 

       

டிசம்பர் மாதம் 24ம் தேதி கிருஸ்துமஸ் மற்றும் 31ம் தேதி புதுவருடம் அன்று வண்ண விளக்கு அலங்காரங்களைக் காண்பதற்கென்றே ‘க்ரீன் வேல்லி’ போன்ற சில குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளுக்கு சென்றிருந்தோம். நம் ஊரில் சிறுவர்கள் பொம்மைக் கொலு காண செல்லும் நினைவுதான் வந்தது. இங்கே பட்சணம் கொடுப்படுது போல் அங்கே விதவிதமான் பிஸ்கட்டுகள் வழங்குகிறார்கள்.



அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் 23ல் ............. தொடரும்…


Links to Previous Chapters 1 to 20 (or cut -n- paste)


Link To ->CHAPTER-20https://storymirror.com/read/tamil/story/attiyaaym-iruptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/ge7isj3aLink To ->CHAPTER-19https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pttonnnptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/w1h7yza8Link To ->CHAPTER-18https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pttonnnptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/w1h7yza8Link To ->CHAPTER-17https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnneellluoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/ya2hzd8cLink To ->CHAPTER-16https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnnaarruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll/500icvq5Link To ->CHAPTER-15https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnnaintuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/e3fjusfnLink To ->CHAPTER-14https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinaannnkuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/92gte56fLink To ->CHAPTER-13https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptimuunnnrruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/qkrc8cqeLink To ->CHAPTER-12https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pnnnirennttuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/8st3xzy4Link To ->CHAPTER-11https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnnonnnrruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/gpv1cbdjLink To ->CHAPTER-10https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pttuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/jtbk307cLink To ->CHAPTER-9https://storymirror.com/read/tamil/story/attiyaaym-onnnptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/rhojyus1Link To ->CHAPTER-8https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ettttuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/veqm3za5Link To ->CHAPTER-7https://storymirror.com/read/tamil/story/attiyaaym-eellluoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/bmkvapm8Link To ->CHAPTER-6https://storymirror.com/read/tamil/story/attiyaaym-aarruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/59qmt83zLink To ->CHAPTER-5https://storymirror.com/read/tamil/story/attiyaaym-aintuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/luoldk3nLink To ->CHAPTER-4https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynnt-tottr-naannnku/n8ir0y75Link To ->CHAPTER-3https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynnt-tottr-muunnnrru/vgou2nszLink To ->CHAPTER-2https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynnt-tottr-irnnttu/9bzbu3kkLink To ->CHAPTER-1https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynn-tottr-onnnrru/7urar4au


Rate this content
Log in

Similar tamil story from Classics