சட்டம் ஒரு பக்கம்: அத்தியாயம் 12
சட்டம் ஒரு பக்கம்: அத்தியாயம் 12
சட்டம் ஒரு பக்கம்: அத்தியாயம் 12
பையனுக்கு கால் கட்டு கட்டிவிட்டால் பையன் திருந்தி விடுவான் என்று இந்த சமூகம் எத்தனை பெண்களின் வாழ்க்கைய சீரழித்து கொண்டு இருக்கின்றது...
எலிசா கண்விழித்து பார்க்க எதிரில் அவளது அப்பா ஆல்பர்ட்..வாயில் துண்டை வைத்து அழுத்தியவாறு அழுது கொண்டு இருந்தவனை... அப்பா எப்ப வந்தீங்க என்று கேட்டாள்... ஆல்பர்ட் பதில் சொல்ல முடியாமல் தவித்தான்..
சுற்றி சுற்றி பார்த்தவள்... நான் எப்படி இங்க... எப்படி இங்க என்றவளுக்கு நடந்தது நினைவக்கு வந்தது...
கணவன் டேவிட் பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றவன்.. எனது மனைவி உனக்கு நான் கட்டி வைத்த தாஜ்மஹாலை பார்..என் வசந்த மாளிகை இதோ... என்று எலிசாவை பழைய பொருட்கள் போடப்பட்ட அறையில் வைத்து சிறை வைத்தான்.. அவள் கதறினாள்.. கத்தினாள்..கதவை தட்டினாள்.. காட்டுமிராண்டி டேவிட் காது கேளாதவனைப் போல் சென்றான்..
பழைய பொருட்களுடன் சேர்ந்த புதிய பொருளாக உள்ளவே சுருண்டாள்.. இரவு வந்தது கரப்பானும் வந்தது எலிகளும் பல்லிகளும் விளையாடியது ..விளக்கில்லை வெளிச்சம் இல்லை... பயத்தில் உடல் நடுங்கியது..பசியில் வயிறு கூவியது...எப்படியோ இரண்டு நாட்கள் கழிந்தது...
தண்ணீர் தாகம் அதிகரித்தது... அப்போதுதான் Discovery channelலில் காட்டுக்குள் சுற்றுலா சென்றவர் குடிக்க தண்ணீர் இல்லையென்றால் தனது சிறுநீரை குடிப்பது போன்ற காட்சிகள் நினைவுக்கு வர எலிசா அதை கடைப்பிடித்தால்...சில நாட்களில் அதற்கு பஞ்சம் ஏற்பட்டது..
நரகம் எப்படி கொடியது என்பதை உயிருடன் அனுபவித்தாள் எலிசா..
28 வது நாள் அந்த காட்டுமிராண்டி டேவிட் வரமாட்டான் என்று முடிவுக்கு வந்தவள் தப்பிக்க வழியை தேடினாள் கதவு நல்ல தரமான மரத்தில் செய்யப்பட்டதால் அதை அவளால் உடைக்க முடியவில்லை... சுற்றி பார்த்தவள் ஜன்னல் இருப்பதை அறிந்து அதை இரும்பு லாடு கொண்டு ஒரு அடி அடித்தாள் கதவுகள் பறந்தன ..
28 நாட்கள் பிறகு வெளியுலகம் பார்த்தவள்... வெளியே எட்டிப் பார்த்தாள்...இரு ஆண்கள் மாட்டுக்கு புல் அறுத்து கொண்டிருப்பதை கண்டாள்...
அவர்களை பார்த்து அண்ணாச்சி அண்ணாச்சி என்று அழைத்தாள்.. அவர்களிடம் விவரங்களை கூறி கதவை திறக்க சொல்ல ...கதவை திறந்ததும் அவள் மயங்கி சரிந்தாள்... 28 நாட்கள் உணவு தண்ணீர் எதுவும் இல்லாமல் இருந்தால் 206 எழும்பில் தோல் மற்றும் ஒட்டிக் கொண்டிருந்தது.. பாவம் யார் பெற்ற பிள்ளையோ இரக்கம் கொண்ட இரு ஆண்களும் தான் வந்த சைக்கிளில் அவளை ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்...
மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்க.. வந்து விசாரணை செய்ததில்..பண்ணை வீடு DSP க்கு சொந்தமானது என்று தெரிந்தவுடன்.. தகவல் தெரிந்ததும் அவர் ஓடி வர மருமகளை பார்த்து விரக்தி ஆகி நின்றார்..
DSP அங்கு வந்திருந்த SI யை அழைத்து சார் இது என்னுடைய மருமகள்.. என் பையன் இந்த பொண்ணோடு லண்டன் டூர் போரேன் ஒரு மாதம் கழிந்த பின் வருவோம் என்றான்..இது எப்படி.... நடந்தது என்று தெரியவில்லை.. ரஸ்கல் வரட்டும் என்றார்.. பின் ஆல்பர்ட் போன் செய்து மதுரை வரவைக்க...பெண்ணை பார்த்ததும் கதறினான் உருண்டு உருண்டு அழுதான்..
என்ன உருண்டு என்ன செய்ய மதவெறி கொண்டு தன் தலையில் மண்ணை அள்ளி போட்ட பின்பு...
- தொடரும்
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ் கதை தொகுப்பு: ஞான.அ.பா.கெளசிக் சாஸ்னுமேலக்கலங்கல்


