கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 47
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 47
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 47
" தீயினால் சுட்ட புண்ணின்
வடுவும்...
நாவினால் சுட்ட வடுவும்..
மெல்ல மறைந்து விட்டன..உன்
செவ்விதழ் உதடுகள் தந்த
முத்த வடுக்கள்
மட்டும் மறையவில்லை...
என் காதலை
பலி கொடுத்தேன்
என்னவள் நீ
உன்னுடையயவனுடன் இனிதே
வாழவேண்டுமென்று...
உன்
சோகத்தை தீர்க்க
சாகசம் நானறியேன்
இனிவரும் காலங்கல்
இனிதாக இணைவோம்..
உனக்காக இல்லை
உன் குழந்தைகளுக்காக.."
என்று கவிதையை கெளதம்..
திரிஷா சங்கரன்கோவில் NGO colony யில் வாடகை வீட்டில் 🏡 குடியிருப்பதை அறிந்தவன்.. ராஜபாளையம் ரோடு 🚆 ரயில்வே கேட் அருகிலுள்ள விநாயகர் கோவிலில் காத்திருந்தான் கெளதம்..10 மணிக்கு கடையை திறக்க திரிஷா செல்லும் நேரம் அறிந்து...
திரிஷா அவன் கணித்த நேரத்தில் சரியாக 9.55 க்கு ரயில்வே கேட் அருகே வந்தவளை மறித்து கெளதம் மேலுள்ள கவிதையை கூறினான்...
அவன் முகத்தை கூட பார்க்க விரும்பாமல்.. அவள் விரைந்தாள்..
நினைத்தது நிறைவேறாத சோகம் கெளதமை வாட்டி வதைக்க.. செய்வதறியாது திகைத்து நின்ற போது...அவனை கடந்த அரசு பேருந்தில்..
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்...
பொருள்: கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.
என்று எழுதியிருந்தது....
வள்ளுவர் சொன்ன முயற்சி காதலில் வெற்றி தரவில்லையே....
முயற்சி தராத ஒன்றை தெய்வம் தரலாம் என்று குறளின் பொருளை மாற்றி யோசித்த கெளதம்..40 வெள்ளிக் கிழமை சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோவில் சென்று வணங்கிட முடிவெடுத்து...
35 வாரங்கள் வெள்ளிக் கிழமை தோறும் வழிபாடு செய்தான்.. பலன் ஒன்று கிடைத்தபாடில்லை... தளராமல் 36 வது வாரம் வெள்ளிக்கிழமை அம்மன் மனம் இறங்கி அருள்பாலித்தாள் ஆம்
" தெய்வத்தை நம்பினோர் கெடுவதில்லை "
அவன் அம்மனை தரிசனம் செய்துவிட்டு, அம்மன் சன்னதி எதிரே.. நடராஜர் கோவில் செல்லும் படிக்கட்டில் அமர்ந்து இருந்தான்...
அப்போது அங்கே ,திரிஷாவின் அப்பா கமலும் , அம்மா அபிராமியும் வருவதை பார்த்த கெளதம் எழுந்து தீடிரென்று அவர்களது காலில் நெடுஞ்சாணாக வணங்கினான்... பயந்து நடுங்கியபடி..யாருப்பா நீ எங்கள் காலில் விழுகிறாய் என்று அபிராமி கேட்க...
" உங்க வீட்டு உப்பை தின்னு உங்களுக்கு துரோகம் செய்த பாவியம்மா.. நான் " என்றான் கெளதம்..அபிராமி ..நீ யாரென்று.. தெரியவில்லையே என்றாள்.. கெளதம்.. மெல்லிய புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு நகர்ந்தான்...
(திரிஷாவின் பெற்றோர் பல ஆண்டுகள் கழித்து கெளதமை பார்த்ததால் அவர்களுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை..)
கோவிலின் வாசலில் 37 வது வாரத்தில்.. கெளதமுக்காக திரிஷாவின் பெற்றோர் கோவில் வாசலில் காத்திருந்தனர்... கெளதம் வந்தவுடன்.. அபிராமி.. தம்பி கொஞ்சம் நில்லு..நீ பாட்டுக்கு வந்த எங்க காலில் விழுந்த ..யார்னு கேட்டா ஒன்று சொல்லாமல் செல்கிறாய் என்றாள் அபிராமி..
அம்மா.. நான் யாருனு சொன்ன, உங்க மனசு தாங்காது வாரேன்.. என்று சொல்லி விட்டு விரைந்தான் கெளதம்...
கோவிலில் 38 வது வாரம்.. அவன் வாகனத்தை நிறுத்தியிருந்த இடத்தில் திரிஷாவின் பெற்றோர் காத்திருக்க.. அவனும் வர .. அபிராமி நீ யாரென்று கேட்க அவன்.. கெளதம் என்று சொல்லி நகர்ந்தான்...(திரிஷாவின் பெற்றோர்க்கு அவன் கெளதமென நேற்றே அறிந்திருந்தனர்)
கோவிலுக்கு 40 வது வெள்ளிக் கிழமை திரிஷாவின் பெற்றோர் வந்திருக்க.. ஆனால் வழக்கமாக கோவிலுக்கு மாலை வரும் கெளதம் காலையிலே அம்மனை வணங்கி திரிஷாவின் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு சென்று விட்டதால்... திரிஷாவின் பெற்றோர் கெளதமை பார்க்க முடியாமல் சென்றனர்... அதன் பிறகு ஒவ்வொரு வெள்ளியும் திரிஷாவின் பெற்றோர் அவனை தேடினார்கள்.. ஆனால் அவன் வரவில்லை...
கைப்பேசி பழுது பார்க்க திரிஷாவின் அப்பா கெளதமின் கடைக்கு எதிர்பாராத விதமாக வந்தவர்... அவனிடம்.. மன்னிப்பு கேட்டார்...ஐயா நீங்கள் போய் என்னிடம்.. என்றான் கெளதம்...
ராணுவ மிடுக்கு தோலின் சுருக்கங்களில் மறைந்து.... திமிர் கூன் விழுந்த முதுகினால் குறைந்து.. இப்போது பணமில்லை அவரிடம் பாசம் நிறைந்த மனிதனாக இருந்தார்.. கெளதம் திரிஷா காதலித்த நேரங்களில்.. மனிதன் மிருகம் போல் மிரட்டியவர் .. சிறகுகள் ஒடிந்த 🐦 பறவையாக கமலை பார்த்த கெளதம் மனம் வருத்தம் கொள்ள.. கண்கள் கண்ணீரை சிந்தியது...
கமல் கொண்டு வந்த உயிரற்ற கைப்பேசியில் அவனது கண்ணீர் துளி பட்டவுடன் உயிர்த்தெழுந்தது.. கைப்பேசி மட்டுமல்ல கமலும் உயிர்த்தெழுந்தார்...
" நான் செய்த காதல் துரோகம் என்னை முகவரி இல்லாமல் ஆக்கிவிட்டது..... காதல் எதிர்ப்பின் அவமானச் சின்னம் என்னைப் பார்ப்போரும் படிப்போரும், காதலை எதிர்போரும் திருந்த வேண்டும் "என்றார் கமல்..
சில வருடங்கள் கழித்து திரிஷாவும் கெளதமும் முத்தங்களை வாரி வழங்கி இனிதாக மகிழ்ந்து வாழ்ந்தனர்.. " முத்தங்கள் பகிரப்பட்டது அவர்களுக்குள் இல்லை .. கெளதமும் திரிஷாவும் மாறி மாறி முத்தமிட்டது அவர்களின் பேத்தி சாஹானாவுக்கு.."
சாஹானா கெளதமின் மகனுக்கும் திரிஷாவின் மகளுக்கும் பிறந்த குழந்தை.. ஆம் இப்போது இருவரும் காதலர்கள் அல்ல.. தோழியும் அல்ல.. சம்பந்திகளாக. இனிதே வாழ்கின்றனர்...
தோழி காதலி ஆகலாம்..காதலி மனைவி ஆகலாம்.. பிறர் மனைவி ஒருபோதும் காதலியாக மனைவியாக ஆகுவதை தமிழர் பண்பாடு ஏற்காது....
தமிழர் நாகரிகம் பண்பாடுகளை காப்போம்.. தமிழ் பேசி தமிழர்களாக வாழ்வோம்.. தமிழோடு நாமும் பல்லாண்டு வாழ்வோம்..நன்றி..
வணக்கம்
🙏 சுபம் 🙏
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

