சட்டம் ஒரு பக்கம்: அத்தியாயம் 8
சட்டம் ஒரு பக்கம்: அத்தியாயம் 8
சட்டம் ஒரு பக்கம்: அத்தியாயம் 8
என் முதல் காதல்..என் தாயின் வயிற்றில் கருமுட்டையாக (Ovum) இருக்கும் போது தந்தையின் மில்லியன் விந்தணுக்களில் (Sperm) ஒரு விந்துவை (Sperm) காதலித்து கருவாக உருவாகி உன் அழகால் உன்னிடம் உருகிக் கொண்டிருக்கிறேன்..இது தான் என் முதலும் இறுதியுமான காதல்.. நீங்கள் யாரையாவது காதல் செய்தது உண்டா ... என்று எலிசாவை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை டேவிட் எலிசாவிடம் கேட்டான்...
" "தாயைப் போல் தாரம்"வேண்டும் என்று ஆண்கள் எதிர் பார்ப்பது போல்..என் தந்தை போல் ஒரு கணவனை எதிர் பார்த்தேன்... அப்படி ஒரு இளைஞன் கிடைக்காததால்.. நான் யாரையும் காதலிக்கவில்லை என்று சொல்லியபடி அழுது கொண்டே தன் அறைக்கு ஓடினாள்...
எலிசாவின் அழகில் விழுந்தவன்.. அவள் அழுது கொண்டே சென்றதையும் ரசித்தான்..
டேவிட் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த மறவர் சமூக "convert" Christian ..அப்பா DSP (Deputy superintendent of police) அம்மா திருமங்கலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்.. டேவிட் மாட்டுப்பண்ணை.. கோழிப் பண்ணை.. finance.. விவசாயம் என்று கோடியில் கொடி கட்டிப் பறக்கும் business man...
இரு வீட்டார் சம்மதத்துடன் திருமங்கலம் புனித லூக்கா ஆலயத்தில் திருமணம் நடத்தப்பட்டடு மேலும் நிகழ்வுகள் திருமங்கலம் Mass Mahal லில் செம mass ஆக நடந்து முடிந்தது..
முதலிரவு முடிந்ததும் காலையில்.. எலிசா தலைக்கு குளித்து....சேலை கட்டி நகைகள் சில அணிந்து தங்க தாரையாக மகாலட்சுமியாக கட்சி தந்தவள்... டேவிட்க்கு காப்பி போட்டு .. தூங்கிக் கொண்டிருந்த கணவனை தட்டி எழுப்பி காப்பியை அவனிடம் கொடுத்தாள்..
காப்பி கப்பை வாங்கியவன்.. எலிசாவை பார்த்து சத்தமாக சிரித்தான்.... ஏன் சிரிக்கிரிங்க சொல்லுங்கள் என்று சினுங்கியபடி கேட்டாள் எலிசா .. மேலும் சத்தமாக சிரித்தான் டேவிட்.. முகத்தை பார்க்க கண்ணாடி தேடிப் போய் பார்த்தாள்.. சிரிப்பு வருவதற்கு முகத்தில் அப்படியொன்றும் தெரியவில்லை..மீண்டும் டேவிட்டின் அருகே வரவே மீண்டும் அவளை சத்தமாக சிரித்துக்கொண்டே சொன்னான்...
ஏன்டி... மாட்டுச் சாணம் அள்ள வந்த வேலைக்காரி நீ... உனக்கு ஏன்டி இத்தனை வனப்பு ..சேலை ..பூ ...நகை... போய் சேலையை கழட்டி போட்டுட்டு நைட்டியை போட்டுட்டு வா.. பண்ணையில் சாணி அள்ளி ..மாட்டை குளிப்பாட்டுனும் ... என்றான் டேவிட்..
மாட்டுச் சாணம் நான் அள்ளவதா...? ... மாட்டுச் சாணம் அள்ளுவதற்கா என் அப்பன் 1 கிலோ தங்கம் கட்டில் மெத்தை... லட்சத்தில் ரொக்கம் எல்லாம் கொடுத்தான்.. என்றாள் எலிசா..
எலிசாவின் கன்னத்தில் பளார் என்று அடித்தவன்.. போய் சொன்னதை செய் என்றான்.. அழுதுகொண்டே சென்றவள் இரவு உடையுடன் வந்தாள்....
கணவன் அழகாக சென்றாள் கை பிடித்து இழுப்பான் அணைப்பான் மீண்டும் அதற்கு திரைப்படத்தில் போல் அழைப்பான் என்று வந்தவளை அடிப்பான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை..
தொடரும்.....
சமத்துவ புறா ஞாண்.அ.பாக்கியராஜ்
கதை தொகுப்பு: ஞான.அ.பா.கேளசிக் சாஸ்னு
மேலக்கலங்கல்


