கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 45
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 45
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 45
(பூங்குயிலே பூங்குயிலே என்ற பாடல் மெட்டில்)
பல்லவி
++++++++
மாங்குயிலே.. மாங்குயிலே..
நீர் வத்தின குளமாகக் காய்ந்து போனேன் -நான்
நீர் வத்தின குளமாகக் காய்ந்து போனேன்...(2)
மானின் அழகான வண்ணக்கண்ணு
எனக்கு விஷமாக ஆச்சு பொண்ணு (2)
மாங்குயிலே..(2)
பாசமுள்ள பசுங்கிளியே...
புலித்தோல் போற்றியே மாயக்கிளியே...(2)
நீ உயிர்மூச்சு என்றுதானே
உனக்காக நானும் காத்திருந்தேன்..(2)
வட்டத்து வாழ்க்கையிலே- நீயும்
வாளாக அழிக்கவந்த..(2)
மாங்குயிலே...(2)
தெருவோரம் சொக்கப்பனை - நீயும்
சொக்கப்பனையாக எரித்தாயடி..(2)
தீயான கண்ணாலே என்னையும்
கொளுத்திட சாம்பலானேன்...(2)
மாங்குயிலே..(2)
கள்ளிக்காட்டு பால்போல
துள்ளத் துடிக்க நீ சாவடிக்க..(2)
நல் உள்ளமில்லா காதலால்
நஞ்சாக மாறினாயம்மா...(2)
மாங்குயிலே..(2)
உடலெல்லாம் காதலாம்
உள்ளமெல்லாம் வஞ்சகமாம்...(2)
உயிர் மேலே காதலித்தேன் - என்
உயிர்க் கோலம் அழித்தாயம்மா..(2)
மாங்குயிலே..(2)
சேலை முந்தி பானை முந்தி
சோடியும் சேர்ந்திருச்சு .....(2)
மார்குடி உரிமம் போட்டு
மணமேடையும் கண்டிட்ட
நீயும் வாழ்கம்மா...(2)
நீடூழி வாழ்கம்மா...
மாங்குயிலே...(2)
சங்கரன்கோவிலில் காவல் நிலையம், யூனியன் ஆபிஸ் இரண்டும் அருகே அருகேதான் இருக்கிறது.. கெளதம் காவல் நிலையத்திலிருந்து வெளியே இருசக்கர வாகனத்தில் வந்தபோது... திரிஷா யூனியன் ஆபிஸ் வந்தவள்,அதே நேரத்தில் ஸ்கூட்டரில் வெளியே வர ..
" இதய துடிப்பு என்பதே
நிமிஷத்துக்கு என்பது
உன்னை பார்க்கும் போது தான்
நூறு மடங்கு கூடுது
வெட்கம் பாதி சொர்க்கம் பாதி
மாறி மாறி வந்து போனது
ஆ ஆ ...ஆ...அ ..
ஆண்: திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் செய்யும்
கனவு காதலா "
என்று இவர்கள் பின்னால் வந்த பார்வையற்ற சகோதரர்கள் இன்னிசை வாகனத்தில் ஒலித்து கொண்டிருந்தது...
கெளதம் முன்பை விட சிறிது குண்டாக மாறி அடையாளம் தெரியாதவனாக இருந்ததால் சிறிது நின்று அவனை பார்த்தவள்."இவன் கெளதம் தான் என்று தெரிந்தவுடன்.. வண்டியின் வேகத்தை கூட்டினால்..
திரிஷா முன்பை விட மிக அழகாக இருந்தாள்.. ஆமாம் பெண்கள் 16 வயதின் அழகை விட 35 - 45 வயதில் மிக அழகாக தெரிவார்கள் என்று அறிவியல் கூறுகிறது..என்பதை அறிந்த கெளதம் அதை இப்போதுதான் உணர்ந்தான்..
பாலாடை போன்ற மெல்லிய உடம்பில் பச்சை வண்ண சூடிதார் படர்ந்திருக்க மரத்தில் பழுத்த சேலம் மாம்பழம் போல் அழகாக , கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் போல் மினுமினுத்தாள் அன்று போல் இன்றும் திரிஷா..
திரிஷாவை பார்த்த கெளதம்..இவளை தவற விட்டு விட்டோமே என்று கவலை தொடர...திரிஷா வாகனத்தை கெளதம் பின் தொடர...
சங்கரன்கோவில் காவல் நிலையத்திலிருந்து ஊர்க்குள்ளும், பேருந்து நிலையத்திற்கு செல்ல ரயில்வே ட்ராக்கை கடந்தே செல்ல வேண்டும் ..
ரயில்வே கேட் அடைக்கப்பட்டது.. இருவரும் அருகருகே நிற்க பேச முயன்றான்.. கெளதம். பார்க்கவே மறுத்தாள் திரிஷா..
உடனே இருசக்கர வாகனத்தை ஒதுக்கி நிறுத்தி விட்டு, பார்வையற்றோர் சகோதரர்களின் இன்னிசை வாகனத்தில் ஏறி அமர்ந்து " மாங்குயிலே" என்று பாட ஆரம்பித்தான் (அந்த பாடல் வரிகள்தான் இப் பாகத்தின்தொடக்க வரிகள்)
பாடலைக் கேட்ட திரிஷா தாமரை போல் தலை குனிந்தாள்..
" இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய்
நாளும் சூட்டுவேன்
இசையை மலராய்
நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல் "
அடுத்த பாடலைத் தொடர்ந்தான் கெளதம்..
தொடர் வண்டி கடந்து சென்றது.. அவளும் மெல்ல கடந்தாள்.அவனும் அவளை பின் தொடர்ந்தான்...தொலை தொடர்பை துண்டிக்க விரைந்தாள் திரிஷா....துண்டித்த தொடர்பை இணைக்க அவனும் விடாப்பிடியாக தொடர்ந்தான்..
திரிஷா பேருந்து நிலையத்தை கடந்து வடக்கு ரத வீதிக்குள் நுழைந்தவள் TR பெண்கள் ஆடையகம் மற்றும் தையல் பயிற்சி பள்ளி என்று பெயர் பலகை மாட்டப்பட்ட கடை முன் நின்றாள்.... வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றவள் மதியம் 1 மணிவரை வெளியே வரவில்லை அதுவரை மீனுக்காக ஒற்றைக்கால் கொக்காக அக்கடை முன் காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது....
மறுநாள் பேருந்து நிலையம் எதிரே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தான்.. கெளதம்... திரிஷாவும் பெட்ரோல் நிரப்ப வரவே....
நடந்தது என்ன?...
.... தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

