சட்டம் ஒரு பக்கம்: அத்தியாயம் 11
சட்டம் ஒரு பக்கம்: அத்தியாயம் 11
சட்டம் ஒரு பக்கம்: அத்தியாயம் 11
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி
வைத்த்தானே தேவன் அன்று.. அந்த தேவன் எழுதிய வைத்ததையும் உடைத்து விட்டானே...
அந்த தேவனின் பக்கதன் பாவி ஆல்பர்ட் என்று தனது அப்பனை கடிந்து கொண்டே...டேவிட் உடன் பண்ணை வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்த எலிசாவுக்கு அன்று நடந்த முதலிரவு காட்சி வந்து சென்றது....
மிருதுவான பட்டு சேலையில்..மென்மையான புன்முறுவலுடன்.. மெதுவாக அடியெடுத்து முதலிரவு அறைக்குள் பால் செம்பை தாங்கிக் கொண்டு.. உள்ளே சென்ற எலிசாவை...
எலிசாவே நீ வருக..
எல்லோரா சிலையே வருக..
என் புது மனைவியே வருக..வருக ..
மது கிண்ணம் கையிலிருக்க போதையில் வரவேற்றான்... டேவிட்..
என்ன இது ? என்று பால் செம்பை கேட்டான் டேவிட்..
பால்.... என்றாள் எலிசா...
20 thousand sensoryயிலும் பால் கொண்டு வருவது நியாயமா?.. நியாயமா? என்று மிரட்டினான்... டேவிட்... பயந்து படியே...
இதுதான் நம்ம கலாச்சாரம் என்றால் எலிசா..
சத்தமாக சிரித்தான்... டேவிட்
No..no..no..no...
இனி முதலிரவுக்கு வரும் போது..இந்த கால டிரெண்ட்க்கு ஏற்றாப் போல் ரம் விஸ்கி பீரை ஒரு கிண்ணத்தில் கொண்டு வாங்கடி.... என்று சொல்லி அவளை தள்ளிவிட ... அவள் தடுமாறி கீழே விழுந்தாள்...
கட்டிலில் கிடந்த ஒரு bed sheet pillow வை கீழே தூக்கி எறிந்தவன். ..உன் place அதுதான்..தூங்கு என்றான்... எலிசா அழுதாள்...
கிருத்துவ பெண்தான் மருமகளாக வரவேண்டும் என்ற அப்பா அம்மா வெறிக்கு பலிகடா நீ.. இந்த வீட்டில் உனக்கு share உண்டு.. கட்டில் மற்றும் என் மனதில் உனக்கு share கிடையாது..ok..
அவன் சொன்ன வார்த்தை அவள் தலையில் பாறாங்கல்லை தூக்கி போட்டது போல் இருந்தது...
அப்பா அம்மா திருப்திக்காக உன்னை திருமணம் செய்து கொண்டேன்.. ஆகையால் ...நீ எனக்கு அதிருப்தி என்றான் டேவிட்..
இந்துஷா என்ற இந்து மத நரிக்குறவர் பெண்ணை காதலித்து திருமணம் செய்து இரு வருடங்கள் ஆகிறது ஒரு ஆண் குழந்தை இருக்கிறது..மதுரை சிம்மக்கல்லில் ஒரு பங்களாவில் அவளை ராணி போல் வைத்திருக்கிறேன் ..இது என் அப்பன் அம்மா உறவு நண்பர்கள்னு எவனுக்கும் தெரியாது என்றான் டேவிட்...
இந்த கதை அவளுக்கு தலையில் இடி விழுந்தது போல் இருக்க மயங்கி சாய்ந்தவள்... குயிலும் சேவலும் கூவ கண் விழித்தாள்.. அழுதாள்... அவன் சொன்னவை எல்லாம் போதையின் உளறலாக இருக்கும்..மனதை தேற்றி குளிக்க சென்றாள்...
காரை விட்டு இறங்கி வாடி.. என்று டேவிட் கதற நினைவுக்கு திரும்பியவள் ..பண்ணை வீடு வந்து விட்டது போல் அதுதான் நாய் sound விடுதோ.. என்று மனதில் நினைத்து கொண்டு காரை விட்டு இறங்கி அவன் பின் சென்றாள்.... எலிசா
பல பழ மரங்களும் பலா மரங்களும் பழங்களை காய்த்து சுமந்தபடி நின்றன .. அதன் நடுவில் ஒரு சிறு வாய்க்கால் வரப்பு அதன் மீது நடக்க பண்ணை வீட்டிற்குள் சென்றவள்..பழைய விவசாய பொருட்கள் வைத்திருக்கும் அறையை திறந்தான்..பின் நின்ற எலிசாவை உள்ளே தள்ளி வெளியே தாழ்ப்பாள் போட்டு சென்றவன்
இன்றோடு 28 வது நாள்..
டேவிட் திருந்தி வருவான் ..கதவை திறந்து அழைத்து செல்வான் என்று எதிர்பார்த்து இருந்தவளுக்கு ஏமாற்றமே...
இந்த 28 நாட்கள் உணவு.. தண்ணீர் என்று எதுவும் இல்லாமல் வாடி வதங்கி போய் இருந்தவள்.. வேறு வழியின்றி ஜன்னல் கதவை உடைத்து வெளியே பார்த்த போது...
அதிர்ச்சி தொடரும்...
சமத்துவ புறா ஞான.அ.பாக்கியராஜ்
கதை தொகுப்பு: ஞான.அ.பா.கெளசிக் சாஸ்னு
தென்காசி மாவட்டம்

