சட்டம் ஒரு பக்கம்: அத்தியாயம் 9
சட்டம் ஒரு பக்கம்: அத்தியாயம் 9
சட்டம் ஒரு பக்கம்: அத்தியாயம் 9
அழகான வானத்தை வசீகரிக்க சுற்றி வரும் மேகங்கள் போல்.. என்னை வசீகரிக்க வட்டமடிக்கும் 100 ஆண்களில் அதில் நீங்கள் ஒரு ஆள் .... என்றாள் ரமேஷை நோக்கி அஸ்மா ...
வானத்தை தொட முடியாத தோல்வியில் மேகங்கள் மழையாக தரை வந்து சேரும்... ஆனால்.. நான் மேகம் அல்ல வானத்தோடு கலந்தே இருக்கும் நிலா...உன்னை விட்டு கலைந்து செல்ல மாட்டேன்..அஸ்மா.. என்றான் ரமேஷ்...
நடுக் கடலில் தத்தளிக்கும் கப்பலில்.. சொகுசு பயணத்துக்கு ஆசைப்பட்டால்.. அந்த தள்ளாடும் கப்பலோடு அல்லாட வேண்டிருக்கும்..விதி முடிந்து கப்பலோடு மூழ்க வேண்டிருக்கும்...சார்... என்றாள் அஸ்மா..
சிறந்த மாலுமி இல்லாத கப்பல் தான் நடுக்கடலில் தள்ளாடும்.. அந்த சிறந்த மாலுமியா நான் இருந்தால் தள்ளாடும் கப்பலும் நிலையாகி தன் நிலை அடையும் என்றான் ரமேஷ்...
ஒரு வண்டு தேன் பருகிய கசங்கி வாடிய பூவை .. குப்பையில்தான் போட முடியும்... சாமிகளுக்கு அந்த பூவை சூட முடியாது... என்றாள் அஸ்மா..
குப்பையில் வீசிய பூவும்..ஒரு நாள் அந்த குப்பையை உரமாக்கி செடியாக வளர்ந்து பூவாக மலரும்.. அது சூடிக் கொடுத்த சுடர் கொடியாக அந்த மாலை பெருமாளுக்கு சாத்தப்படும்... அந்த குப்பையா உனக்கு நான் இருப்பேன் உரமாக உன் வளர்ச்சிக்கு நான் இருப்பேன்..அஸ்மா pls என்றான் ரமேஷ்...
இது அனுதாபத்தில் காட்டுகிற அன்புதானே என்றாள் அஸ்மா..
இல்லை.. அஸ்மா.. இல்லை... என் அனுபவத்தில் விளைந்த அன்பு...உன் குழந்தை என்னை அப்பா என்று அழைப்பதை அனுபவிக்க ஏங்கும் அன்பு...அதை நம்பு அஸ்மா.. என்று சொல்லி கையெடுத்து வணங்கினான் ரமேஷ்....
விழி வழியே நீர் கசிய..ரமேஷை இருக அணைத்து கொண்டாள்...
பேருந்தில் ரமேஷ்.. அஸ்மா சந்திப்புக்கு சில நாட்கள்களுக்கு பிறகு.. நெல்லை கொக்கிரகுளம் ரோஜா மஹாலில் தோழி பைரோஜ் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு விடைபெற்று வெளியே வந்த பின்.. ரோஜா மஹாலின் வாசலில் அஸ்மா .. ரமேஷ் இருக அணைக்க..
திருமண நிகழ்வுக்கு வந்த அணைவரும் ஆச்சரியத்தோடு பார்த்து ஆசிர்வதித்து சென்றனர்....
சில நாட்களுக்கு பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன்... பாரதியார்.. தமிழ் அன்னை சிலை முன்.. சமூக சீர்திருத்த திருமணமாக எளிய முறையில் தமிழ் முறைப்படி நடந்தது மனங்கள் கலந்த திருமணத்தில் மதங்கள் கலக்கவில்லை..
பர்தா அணிய அஸ்மாவுக்கு தடையில்லை ...நெற்றியில் பட்டை போட ரமேஷ்க்கு தடையில்லை.. இருவரும் இல்வாழ்க்கையில் வெற்றி நடை மட்டுமே போட்டு மதம் கடந்த மனங்களாக முன்னேறினர்....
அஸ்மாவை கரம் பிடித்த ரமேஷ்க்கு ரூ 70,000 மருந்து விற்பனை பிரிவு மேலாண்மை பணி கிடைக்க..அஸ்மாவிவின் இடை நின்ற செவிலியர் கனவுகள் நனவாக நர்ஸிங் படிக்க சென்றாள்...
அஸ்மாவிவின் குழந்தயை ரமேஷின் அம்மா..தன் மகனுக்கு பிறந்த குழந்தை போல் பாவித்து பார்த்துக் கொண்டாள்...
ஆண்களின் பலதார திருமண முறைகளினால் அஸ்மா போன்ற பெண்கள் பாதிக்கப்படுவது...சட்டத்தின் ஒரு பக்கமே....
தொடரும்....
சமத்துவ புறா ஞான.அ.பாக்கியராஜ்
கதை தொகுப்பு: ஞான.அ.பா.கெளசிக் சாஸ்னு
மேலக்கலங்கல்...

