கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 46
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 46
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 46
" மலர் போல் இருப்பதால்
மலராக பேச மறுக்கிறாயோ..
நிலவாக சொழிப்பதால்
நிமிடப் பார்வையை தவிர்க்கிறாயோ..
காதலியே நீ
காதலிக்க மறுத்ததால்
காலங்கள் சுழலாமல்
கடையாணி உடைந்து நிற்கவில்லை
காதலியே ஒரு முறை
காரணம் சொல் - எனை
காதலிக்க ஏன் மறுத்தாய் யென்று ?
கருணையுடன் சொல்
கலங்கம் இல்லாதவனாக உனை
கடந்து செல்கிறேன்.."
தனது இருசக்கர வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப எரிபொருள் நிலையம் வந்த திரிஷாவை இடைமறித்து கேட்டான் கெளதம்..
திரிஷா எதுவும் அறியாதவள் போலவும்.. காதுகள் கேளாதவள் போலவும்..வாய் பேச இயலாதவள் போலவும்..கெளதமை பார்த்தது சிறு அசட்டை செய்யாது .. சாட்டிலைட் போல் சமிக்ஞை கொடுக்காமல் விரைந்தாள்... ராஜபாளையம் நோக்கி...
கெளதம் நேராக T.R தையலகம் கடைக்கு சென்றான்... கடைக்குள் நுழைந்தவுடன், அங்குள்ள பணிப்பெண் அண்ணா இது பெண்கள் ஆடையகம்.. இங்கு ஆடவர்களுக்கு கிடையாது என்றாள்..
அப்படியா..என் மனைவி பெண்தான் என் மனைவிக்கு 👗 ஆடைகள் கிடைக்கும் தானே என்றான் கெளதம்..
சுடிதார் ரகங்களின் பேயர்களை கூறியவாறு சுடிதார்களை பணிப்பெண்கள் மலைபோல் குவிக்க.. அவனுக்கு எதுவும் பிடித்தவனைப் போல்.. முகத்தை கோபம் வந்தவனைப் போல் பாவனை செய்து.. திரிஷானு ஒரு பொண்ணு நிற்குமே அந்த பொண்ணை எங்க.. அந்தப் பொண்ணுன நல்ல நல்ல மாடல் சுடிதார் எடுத்து போடுவாங்க..அவங்களை எங்க ? என்றான் கெளதம்..
அவங்க எங்க கடை உரிமையாளர்.. அவங்க ராஜபாளையத்தில் ஒரு கிளை வச்சிருக்காங்க அங்கே போயிருக்காங்க.. என்றாள் பணிப்பெண்..
எப்ப இங்கே வருவாங்க? என்றான்..இரவு எழு மணிக்கு என்றது.. திரிஷா என் மனைவியின் தோழிதான் ... திரிஷா கைப்பேசி எண்ணைக் கொடுங்கள்.. திரிஷா இருக்கிற நேரத்தில் என் மனைவியை வரச் சொல்ல என்று சொன்னான் கெளதம்.. இவன் சொல்வது உண்மையென்று நினைத்த பணிப்பெண் திரிஷாவின் கைப்பேசி எண்ணை கொடுக்க வாங்கியவன்..
திரிஷாவின் வாட்ஸ் அப்க்கு ஃ என்று அனுப்பினான்.. திரிஷாவின் கைப்பேசி இரண்டு டிக் அடித்து வண்ணம் மாறியது.. அவள் who are you என்று அனுப்பினாள்...
திரும்பவும் ஃ அனுப்பினான் கெளதம்.. இப்போது எந்த சமிக்ஞை வரவில்லை திரிஷாவிடம் இருந்து...
ஆனால்,வந்தது இரவு 10.30 க்கு அழைப்பு.. கெளதம் சந்தோஷத்தோடு எடுத்தான்.. ஆனால் ஆரம்பித்தது செவ்வாய் தோஷம்.. திரிஷாவின் அண்ணன் பேசினான்.... அவர்கள் பேசியதை எழுத முடியாது, எல்லாமே அர்ச்சனை மந்திரம்...
அந்த கைப்பேசி எண் கெளதம் உடையது தான் என்று தெரிந்தவுடன் திரிஷா அதை block செய்தாள்...
திரிஷா அவனுடன் பழகிய காலத்தில் சுடிதாரின் சாலை .. அவள் ஒரு பக்கமாக போட்டது கிடையாது.. இப்போதுதான் ஒரு பக்கம் சால் போடுகிறாள்.. அது ஏன்?...ஓசூரில்தானே இருந்தாள்.. இங்கே எப்படி வந்தாள்.. வரக் காரணம் என்ன ?.. கழுத்தில் தாலியை பார்க்கவில்லையே.. சிறிதாக தங்க செயின் மட்டும் போட்டிருந்தாக ஞாபகம்.. அவள் கணவன்?..இதை யாரிடம் கேட்கலாம் என்று யோசனை செய்ய..
பிரவீனா ஸ்டுடியோவில் திரிஷாவின் உறவுக்காரி ஓவியா வேலை பார்ப்பது நினைவுக்கு வர அவளை சந்திக்க அங்கு சென்றவன்..
திரிஷாவுக்கு திருமணம் முடிந்தவுடன்.. மகேஷ்க்கு இராணுவத்தில் வேலை கிடைத்து.. குடும்பம் நல்ல முறையில் சென்று கொண்டிருந்த வேளையில்.. ராணுவ வேலையை விட்டு விட்டு வெளியே வந்து..சோனா சில்க்ஸ் என்று மிகப்பெரிய ஜவுளி ஸ்டோர் திறந்து .. அதுவும் நல்லபடியாக வியாபாரம் நடக்க.. மகேஷ்க்கு பெண் சகவாசம் அதிகமாக எல்லாம் நஷ்டமாகி கடனாக..
திரிஷா அப்பாவின் சொத்தும் அதில் கரைந்து..கடல் வாய்க்கால் போல் வற்றியது.. இப்போது திரிஷாவின் பங்களா வீடு பேங்க் கடனில் மூழ்கியது...இப்போது வாடகை வீட்டில் 🏡 இருப்பதாகவும் கூறினாள் ஓவியா..
திரிஷாவின் கணவன்? என்றான் கெளதம்..
திரிஷாவின் அப்பாவிடம் கொடுக்க பணம் 💰 குறைந்த காரணத்தால்.. மகேஷ் கேட்ட பணத்தை கொடுக்க முடியாத காரணத்தினால்.. திரிஷாவை விவகாரத்து செய்து விட்டான் மகேஷ்..
திரிஷா சங்கரன்கோவில் வந்து 2 வருடம் ஆச்சே ? என்றாள் ஓவியா.... எனக்கு தெரியாது ஓவியா என்றான் கெளதம்..
சங்கரன்கோவில் வந்த திரிஷா மீதம் இருந்த பணத்தை வைத்து..T.R என்ற ஜவுளி ஸ்டோரை .. சங்கரன்கோவிலிலும்.. இராஜபாளையத்திலும் வைத்திருக்கிறாள் என்றாள் ஓவியா...
கெளதமுக்கு வருத்தம் ஒரு பக்கம்..அவளை மறுமணம் செய்ய வக்கிரம் ஒரு பக்கம்..
வென்றது வருத்தமா ? வக்கிரமா ?..
... தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்..

