STORYMIRROR

Packiaraj A

Horror Romance Crime

3  

Packiaraj A

Horror Romance Crime

சட்டம் ஒரு பக்கம் அத்தியாயம் 13

சட்டம் ஒரு பக்கம் அத்தியாயம் 13

2 mins
0

சட்டம் ஒரு பக்கம்: அத்தியாயம் 13


பாரதிராஜா இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இந்த படத்தில் பெண்களின் மறுமணம் பற்றிய விழிப்புணர்வு கதையான மையக் கதை தென்காசி மாவட்டம் ஜமீன் மேலக்கலங்கலில்  நடந்த கதையாக இருக்கலாம்...


அந்த படத்தில் வரும் துரைராசுத் தேவர் மகள் பெரிய நாச்சியாரின் மூத்த மகன் தங்கப் பாண்டியன் வாரிசு இந்த கதையின் பாளையத்துக்காரர் ..இளைய மகன்களின் ஒருவனான செல்லச் சாமி என்ற வின்சென்ட் ராஜா   வாரிசுதான் இந்த கதையின் ஆல்பர்ட் இந்த இரு வாரிசுகளுக்கும் தனித் தனி பங்களாக்களில் வாழ்ந்து வந்தனர்..


திருமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எலிசாவை ஜமீன் மேலக்கலங்கலுக்கு அழைத்து வரப்பட்டு  பாளையத்துக்காரர் பங்களாவில் பாதுகாப்பு கருதி தங்க வைத்து விட்டு....


ஆல்பர்ட் அவனது பங்களாவுக்கு சென்றவனுக்கு ... மதுரையில் அவனுக்கு நடந்த தோல்விகள் நினைத்து பார்க்க பார்க்க அவன் மீதே அவனுக்கு கோபம் வர மது அடித்து கொண்டுயிருந்தவன் உள்ளத்தில் மதுரை நினைவுகள் ஓடியது..


எலிசாவின் கொடுமைகளை விசாரணை செய்ய வந்திருந்த inspector மற்றும் Si களை அழைத்த டேவிட் அப்பன் DSP .. இந்த பாதிப்புக்கு FIR எதுவும் போடாதீங்க.. உங்களுக்கு வேண்டிய பணம் வீட்டுக்கு வரும்... OK என்க ..சரி என்றனர் கையூட்டு போலிசார்...


உங்கள் பொண்ணை ஊர்க்கு கூட்டிட்டு போங்க ஆல்பர்ட்... என் மகன் வந்ததும் உங்கள் ஊர்க்கு  கூட்டிட்டு வாருகிறேன் என் மருமகளை அழைக்க.. என்றான் DSP ஆல்பர்ட்டிடம்..


கோபம் அடைந்த ஆல்பர்ட் DSP கண்ணத்தை பதம் பார்க்க இருவரும் மல்லுக் கட்டி சண்டை போட ... சுற்றி இருந்தவர் அவர்களின் சண்டையை விலக்கி விட..


ஆல்பர்ட் டே..ங்..உன் வேலையை சோழி முடிக்கிறேன் பார் என்றான்..


நீ என்னை உன்னால்  ஒரு மயிரையும் பிடுங்க முடியாது போடா.என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான் DSP..


ஆல்பர்ட் எலிசாவை கூட்டிக் கொண்டு மதுரையில் உள்ள பல  காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்ல அனைவரும் DSP மீது நடவடிக்கை எடுக்க தயங்கினர்.. காவல்துறையும் நீதித்துறையும் அவர்களை  கைவிடப்பட்டது..


  பணபலம்.. பதவி பலம்..அதிகார பலங்களிடம் .. எலிசா நிகழ்வின் உண்மையான பலம் தோற்றது ... சட்டம் ஒரு பக்கமே


ஒரு நாள் ஆகியும் ஆல்பர்ட் வெளியே வரததால் சந்தேகம் அடைந்த பாளையத்துக்காரர் ஆல்பர்ட் வீட்டுக்கு சென்று கதவை பார்த்த போது உட்புறம் தாழ்ப்பாள் போட்டிருக்க ஜன்னல் வழியே அவர் ரூம்பை பார்க்க அதிர்ந்தார்..கதவை உடைத்து ஆல்பர்ட் போட்டிருந்த தூக்கு கயிற்றை அறுத்து இறக்கி வைத்து நாடி பார்க்க துடிப்பு இல்லை..ஒரு காகித மடிப்பு தான் கிடைத்தது


" பாவத்தின் சம்பளம் மரணம்" என்ற பைபிள் வாசகம் அந்த காகிதத்தில் ஆல்பர்ட் எழதிருந்தான்...  இறைவன் உண்மையின் ஒரு பக்கமே...


ஆல்பர்ட் இறப்புக்குப் பிறகு பாளையத்துக்காரர் மகளாகவே அவரின் வீட்டில் வாழ்ந்த எலிசா என்ற இளைஞியை பார்க்க வந்தான் வாலிபர் ரமேஷ்... திண்டுக்கல் ரீட்டா நிகழ்ச்சியை புக் செய்ய...


கிறிஸ்துமஸ் நிகழ்வுக்கு வந்த பாதர் ஜான் பிரான்சிஸிடம் வந்த ரமேஷ்...ஓ பாதரே என்னை ஞாபகம் இருக்கா? சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடத்தி வைக்க சொல்லி உங்களிடம் வந்தோம்.. சட்டம் அது இதுன்னு பிரிச்சிங்க..இன்று ஜமீன் மேலக்கலங்கலுக்கு ஜமீன் வாரிசு இல்லாத நிலையை உருவாக்கிட்டிங்க..இது டூ மச் பாதர் வெரி டூ மச்.. என்றவன் சபையில் இருந்த மக்களை பார்த்து..


சாதி மதம் இனமுனு பிரிந்தால் நமக்கு தான் நஷ்டம்....மத வெறியால் ஆல்பர்ட் என்ற மாமனிதர் அந்த மனிதர் குடும்பம் அழிந்தது போதும்.

இனிமேல் தனி ஒருவனுக்கு சாதி மத இனவெறி வேண்டாம்... என்றான் ரமேஷ்.. இதுதான் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின் போது நடந்தது..


எலிசா என்றவது ஒருநாள் தாலி கட்டிய கணவன் திருந்தி வருவான் என்று கனவோடு காத்திருக்கிறாள்..


சுபம்...



முழுக்கதை : சமத்துவ புறா ஞான.அ.பாக்கியராஜ்

கதை தொகுப்பு: ஞான.அ.பா.கெளசிக் சாஸ்னு

மேலக்கலங்கல்

தென்காசி மாவட்டம்...






Rate this content
Log in

Similar tamil story from Horror