சட்டம் ஒரு பக்கம் அத்தியாயம் 20
சட்டம் ஒரு பக்கம் அத்தியாயம் 20
சட்டம் ஒரு பக்கம் காதல் கதை: அத்தியாயம் 10
சில ஆண்டுகளுக்கு பிறகு....
இரு பக்க நிலங்கள் பசுமை தாங்கிய பயிர்களை தாங்கிய நிலங்கள் நடுவே உள்ள செம்மண் சாலை வழியாக சொகுசு கார் ஒன்று நகர்ந்து வந்து .. கருங்கல் படுக்கையில் படர்ந்படி இருந்த வானுயர மேலக்கலங்கல் ஜமீன் கோட்டை முன் வந்து நிற்க ...
அதிலிருந்து பளிச் என்று கத்தி போல் தீட்டிய கோடுகள் தேய்த்து எடுத்த கதர் சட்டை..வேஷ்டி அணிந்த இளைஞர் ஒருவரும் .. அவர் பின்னால் இரண்டு பெரியவர்கள் இறங்கிய நிலையில்..கோட்டை காவலாளி நீங்கள் யார் என்று வினவினான் .. அவர்கள் யாதோ சொல்ல கோட்டைக்குள் சென்று அனுமதி பெற்று கேட்டை திறந்து விட ... யானைகள் இரண்டு வரவேற்க வீட்டினுள் சென்றவர்களை இருக்கையில் அமர வைத்து பணிப் பெண் மோர் கொடுக்க அதை அருந்திய படி கோட்டையை அன்னாந்து பார்த்து .. அந்த கால வடிவமைப்புகளையும் .. ஜமீன்தார் வேட்டையாடிய விலங்குகளின் தலைகள் கொம்புகள்..வாள்.. துப்பாக்கி.. மன்னர்களின் படங்கள் என்று சுவர்களை அலங்கரிக்க அனைத்து மெய் மறக்க வைக்க மெய் மறந்து ரசித்தான்...
அமைதியின் நடுவில் தரையில் விழுந்த குண்டு ஊசியின் சவுன்டாக மெல்ல ஆரம்பித்த சலங்கை மற்றும் வளையோசை மெல்ல மெல்ல சத்தம் அதிகரிக்க பச்சை நிற சேலை கட்டி... மெல்லிய இடையை ஆக்ரமிப்பு செய்த கைக்குட்டை மென்மையாக சிரிக்க சற்று மேலே பெண்களுக்கே தேவையற்ற சுமையை இடது கையால் தாங்கிய படி. வான் தேவதை போல் மெல்ல இறங்கினாள் பெண் ஒருத்தி...
அப்பெண்ணின் முகம் கண்ட வாலிபர் இதயத்தில் பட படவென ரயில் ஓட.. தேகத்தில் மேக கூட்டம் கலைந்து வியர்வை சிந்த.. தேகம் மேளம் இசைத்து நடு நடுங்க...நின்ற கதர் வேட்டி இளைஞனை பார்த்து வாங்க என்று சொல்லி வணக்கம் தெரிவித்து உட்காருங்க.. என்றாள்... உடன் வந்திருந்த இளைஞன் பரவயில்லை என்று சொல்லி கை கட்டியபடி நின்றிருந்தவன் நா தழுதழுத்த குரலில் நீங்களா என்றான் அந்த பெண்ணை நோக்கி..
ஆம் என்பது போல் தலையை மட்டும் ஆட்டியவள்..ஜமீனில் அனைவரும் சமமே .. இருக்கையில் அமருங்கள்.. என்றாள்.. வந்தவர்கள் அமர.... வந்த வேலையை சொல்லுங்கள் என்றாள்..
அம்மா உங்க ஜமீன் குலதெய்வம்... கெளதல மாடசாமி கோவிலில் இந்த வருட கலைநிகழ்ச்சியா " திண்டுக்கல் ரீட்டா " இசைக் குழுவினர் நிகழ்த்திய நிகழ்வு மிக சிறப்பாக இருந்ததாக .. சுரண்டை சுற்றுவட்டப் பகுதி கிராம மக்கள் மெய்சிலிர்க்க சொன்னாங்க...
" திண்டுக்கல் ரீட்டா" போன் நம்பர் உங்களிடம் போனில் வாங்கியது நான்தான்...நீங்க கொடுத்த அந்த போன் நம்பர்க்கு போன் செய்து பேசினேன்... ஒரு நாள் நிகழ்ச்சிக்கு 40 ஆயிரம் கேட்கிறார்கள்...ஆனா மேலக்கலங்களில் 25 ஆயிரம் மட்டுமே வாங்கியதாக தகவல் அதற்கு காரணம் நீங்கள் தான் என்றார்கள்...
அவங்க தொகையை கொஞ்சம் 30 ஆயிரமாக குறைச்சு ... திண்டுக்கல் ரீட்டாவிடம் நீங்கள் பேசி நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கி தரனும் ...அதுதான் உங்களை பார்த்து பேச வந்தோம் என்றன் இளைஞன்...
அப்படியா சரி.. திண்டுக்கல் ரீட்டா நிகழ்ச்சி உங்கள் ஊரில் நடக்கும் போயிட்டு வாங்க... என்றவள்.. எழுந்தாள்....
நீங்கள் எப்படி இங்க என்று இழுத்தான் வாலிபன்... அதை போனில் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்... அவளின் கண்களில் இருந்து வடிந்த நீர் துவளைகள் ..தரையை நனைத்து கொண்டு பின் சென்றது... வந்த இளைஞன் கண்ணும் கலங்கியது....
தொடரும்...
சமத்துவ புறா ஞான.அ.பாக்கியராஜ்
கதை தொகுப்பு: ஞான.அ.பா.கெளசிக் சாஸ்னு...
மேலக்கலங்கல்

