Siva Kamal

Action Comedy Tragedy

4.5  

Siva Kamal

Action Comedy Tragedy

விண்டோஸும் நானும்

விண்டோஸும் நானும்

3 mins
24.5K


கல்லூரி முடித்து வேலை தேடிய போது நான் பார்ட் டைம் ஹார்ட்வேர் சர்வீஸ் இஞ்சினியராக இருந்த காலம். யமஹா பைக் வைத்திருந்தேன். அம்மா வாங்கிக் கொடுத்தது. லிட்டருக்கு 50 கி மீ கொடுக்கும். ஒரு சர்வீஸ் போனால் அதிக பட்சம் 300 ரூபாய் கிடைக்கலாம். சில சமயம் 150 ரூபாயும் கிடைக்கும். பெயர்தான் ஹார்ட் வேர் இஞ்சினியர். பெரும்பாலும் சாஃப்ட்வேர் பிரச்சனைகள்தான். விண்டோஸ் தாலி அறுக்கும். ஒரு மெண்டல் கேர்ள் ஃபிரண்டை புரிந்து வைத்திருக்கும் அன்பான பாய் ஃபிரண்ட் போல விண்டோஸை நான் புரிந்து வைத்திருந்தேன்.

அப்போதெல்லாம் கம்பியூட்டர் , பிரிண்ட்டர் , ஸ்கேனர் , வெப் கேமரா , ஸ்பீக்கர் எனத் தனித்தனியாக கனக்ட் செய்து வைத்திருப்பார்கள். எல்லா சனியனுக்கும் தனித்தனியாக டிரைவர் போட வேண்டும். மானிட்டருக்கே டிரைவர் போட வேண்டும். மோடம் என்று ஒன்று தனியாக சீ பி யூ மேல் அமர்ந்து இருக்கும். அதற்கும்.

இப்படிச் சொன்னால் இந்த 2k கிட்ஸுக்கு புரியலாம். சிடி டிரைவுக்கு டாஸ் ப்ராம்ப்டில் கமாண்ட் போட்டு சிடி டிரைவை புரிய வைத்துதான் விண்டோஸை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

அதற்கு முன்பு fdisk பயன்படுத்தி ...அதாவது இப்போது போல் , எடுத்த வுடன் ஹாய் , நான் உன்னை லவ்வுல்லாம் பண்ணலை , மேட்டர் பண்றதும் நோக்கம் இல்லை , ஆனா வா தண்ணி அடிச்சிட்டு ஊர் சுத்திட்டு இருக்கலாம் என்று ஆன்லைன் பெண்களை ஹேண்டில் செய்வது போல, அதாவது லேப்டாப் போல, அப்போது செய்ய முடியாது.

என்னதான் லவ் லெட்டர் குடுத்து , சைட் அடித்து , கொஞ்சம் நெருங்கி , கையைப் பிடித்துப் பேசி , இருட்டில் முத்தம் குடுத்து , அதற்கு சண்டை போட்டு , சமாதானம் செய்து , கோவிலுக்குப்போய் , சினிமாவுக்குப்போய் , ஐஸ் கிரீம் சாப்பிட்டு , காதலியிடமே அறை வாங்கி , சமாதானம் செய்து , ஒருவழியாக நம்பிக்கை ஊட்டி , பெற்றோர்களிடம் பேசி , உறவினர்களிடம் புரிய வைத்து , ஜாதி மத கம்பேட்டபிலிட்டியை சரி செய்து , ஊர் கூட்டித் திருமணம் செய்து எல்லாம் செய்து முடித்து , ஊர் போற்ற வாழ்ந்து , புள்ளையை பெற்றெடுத்த பின்பு , "உங்களுக்கு என் மேல லவ்வே இல்ல " என்று அவள் சொல்வது போல விண்டோஸ் சொல்லும் ‘யூ ஹேவ் ஸம் யெரர் ‘ என்று

அப்படி சொல்லவில்லை என்றால் தான் 300 ரூவா.

லைட்டா கோபத்தோடு சொன்னால், 150 ரூவா

லவ்வே இல்லை என்று சொல்லி விட்டால் 100 ரூவா கூட கிடையாது.போய் விட்டு வந்த பெட்ரோல் செலவு 100 ரூபா நஷ்டம். ஆக்சுவலி நாம் எல்லாம் செய்து மேட்டரும் செய்து முடித்திருப்போம். விண்டோஸ் அப்படிச் சொல்லும். நம் வீட்டில் நம் அம்மா அப்பா , தங்கச்சி , தம்பி , பாட்டி என யார் கூடவும் ஒத்துவராத மனைவி தன் அம்மா வீட்டுக்கு கோபித்துக்கொண்டு போவது போல விண்டோஸுக்கு நீலக் கலர் ஸ்கிரீன்.

மனைவிக்கு நம்மோடே ஒத்துவராதுதான். ஆனாலும் ஏதோ குத்து மதிப்பாக ஓட்டிக் கொண்டு இருப்போம். அதுபோல ப்ராஸஸரும் விண்டோஸும் மற்ற எல்லோரையும் கழட்டி விட்டு விட்டு ஏதோ செய்து கொண்டு கிடக்கும். புது விருந்தினர் யாரேனும் வந்து விட்டால் களேபரம் தான். மொத்தத்தில் குடும்பம் விளங்காது. இது ஏதும் கஸ்டமருக்குத் தெரியாது. மொத்தமா வேலை முடியலைங்களே என்பார். சமயத்தில் அவுட்லுக் எக்ஸ்ப்ரஸில் இருந்து மொண்ணை மெயில்களை எல்லாம் பேக் அப் எடுத்து இருக்கிறேன். அது ஒரு பெரிய கொடூரம். அது இப்போது வேண்டாம்.

நம்மை இன்று இரவு நம்மை இந்த விண்டோஸ் தூங்க விடுமா விடாதா என்று பயங்கர திரில்லாக இருக்கும். சமயங்களில் நாலு இட்லி தின்பதையும் இந்த விண்டோஸ்தான் முடிவு செய்திருக்கிறது. இதற்கே இன் ஷர்ட் செய்து கொண்டு ஷூ போட்டுக்கொண்டு டிப் டாப்பாக செல்ல வேண்டும். ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். 200 ரூபாய் எடுத்து அவர்கள் நம் கையில் கொடுப்பதற்குள்.....

இப்போது என்னமோ கேம் ஆஃப் த்ரோன்ஸ் , மணி ஹீஸ்ட் அது இது என த்ரில்லிங்க் என சொல்கிறார்கள்.அந்த 200 ரூபாயை ஒரு மர்ம இடத்திலிருந்து எந்தக் கணத்தில் எப்போது எடுத்துக் கொடுப்பார்கள், கொடுப்பார்களா மாட்டார்களா ? செம த்ரில்.

மதியம் சோறு இல்லாமல் சுற்றி இருக்கிறேன். என் பைக் எப்போதும் பெட்ரோல் இல்லாமல் நடு ரோட்டில் நின்றதே இல்லை. காசு கொடுக்கவில்லை எனினும் வீட்டுக்கு வந்து விடும் 50 கிமீ கொடுக்கும் பைக்.அதே போல பெட்ரோலுக்கு காசு குடுங்க என்று கேட்டதேயில்லை. அட்வான்ஸ் குடுங்க என்றும் கேட்டதில்லை.

சோறு இல்லாமல் சுற்றி இருக்கிறேன் என்பதை கொஞ்சம் கூடக் கருணையுடன் அணுகக் கூடாது.அதற்கு முந்தின நாள் நல்லா ரெஸ்டாரன்ட் ஹோட்டலில் வெளுத்துக்கட்டி இருப்பேன். ஆனாலும் விசித்திரமான அனுபவங்கள் கிடைக்கும். விசித்திரமான மனிதர்கள்.

ஒருமுறை ரெஸிடண்ஸி ஹோட்டலில் தங்கி இருந்த அமெரிக்க ஆசாமி ஒருவருக்கு இண்டர்நெட் கனக்ட் ஆகவில்லை. யாராலும் சரி செய்ய முடியவில்லை. நம்பிள் போய் சரி செய்தோம். என்ன எழவு என்றால் அப்போது டயல் அப் மோடம். பல வித மோடங்களை விண்டோஸுக்கு தெரியாது. அதை புரிய வைக்க ஸ்டிரிங்க் போட வேண்டும். s10 = 225 , இது சின்னது. இதைப்போல பலவிதமான நீளமான ஸ்டிரிங்குகள் அப்போது எனக்கு மனப்பாடம். அதில் ஏதோ ஒன்று செட் ஆகி கனக்ட் ஆனது.

அப்போது இத்தனை ஸ்டிரிங்குகள் தெரிந்த ஒரே ஆள் என் பகுதியில் நான் மட்டுமே. என் கெட்ட நேரமோ அல்லது பேட் லக்கோ , அவரும் கை கொடுத்து , ரொம்ப தேங்க்ஸ் என்று கூறினார். 20 ரூபாய் நோட்டு , 50 ரூபாய் நோட்டு எல்லாம் எடுத்து வைத்து எவ்வளவு என்றார்...கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு , 300 ரூபாய் என்றேன்....டூ காஸ்ட்லி என்று புலம்பியபடி 250 ரூபாய் கொடுத்து என் முகத்தை நோக்கினார்.

சரி, எதுவோ இந்தியக் கலப்பு போல என்று எண்ணியபடி நடையைக் கட்டினேன்.பல அலைச்சல்களில் இதுவும் ஒரு அலைச்சல்.

என்னமோ என் கதையைச் சொல்லி இப்படி இருந்த நான் எப்படி ஆகி விட்டேன் பாருங்கள் என்று சொல்லப்போவதாகத்தானே நினைக்கிறீர்கள் ? அதுதான் இல்லை . நான் இப்போதும் அப்படியேதான் இருக்கிறேன் . வேறொரு வேலையை இதே போல செய்து கொண்டிருக்கிறேன்.பேட்டாவுக்கு பதில் மாத சம்பளம். அவ்வளவுதான் .


Rate this content
Log in

Similar tamil story from Action