திகில் இரவு
திகில் இரவு
அருணா தன் தோழி மாலினி இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள்.மாலினியை அவளுடைய PG ஹாஸ்டலில் இறக்கி விட்டு, அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவளது ஃபிளாட்டை நோக்கி தன் ஸ்கூட்டரை செலுத்தி கொண்டு இருந்தாள்.
இன்னும் நூறு மீட்டர் சென்றால்
கேட் வாசலுக்கு சென்று விடலாம்.
அந்த நேரம் பார்த்து மாலினிக்காக வைத்து இருந்த ரிங்டோன் அடிக்க போனை எடுத்து பேசினாள்.காலையில் அவள் புறப்பட தாமதம் ஆகும்,அவளுக்கு வேண்டி காத்து இருக்க வேண்டாம் என்று தகவல் சொன்னாள்.
பேசி முடித்து வண்டியை கிளப்பும் போது பக்கத்து வீட்டு சுற்று சுவரை ஒட்டி இருட்டான இடத்தில் தீடீரென்று
ஒரு பெண் குரல் சத்தம் போட,அவள் அங்கு திரும்பி பார்க்கும் போது,ஒரு பெண் சாலையின் குறுக்கே ஓடி வர,அருணா மயக்கம் போட தயார் ஆனாள்.அவள் பார்க்கும் போது அந்த பெண்ணிற்கு கழுத்துக்கு மேலே ஒன்றும் இல்லை.சாலையை கடந்து இருட்டில் சென்று விழுந்தாள் அந்த பெண்.உடனே வண்டியை கிளப்பி வீடு வந்து சேர்ந்தாள்.
பயத்தில் அவளால் பேச முடியவில்லை.ஒரு மணி நேரத்திற்கு பிறகு நடந்ததை அப்பாவிடம் சொல்ல,பக்கத்து வீட்டில் உள்ள நண்பரை அழைக்கவும் அவரை துணைக்கு வைத்து கொண்டு டார்ச் எடுத்து கொண்டு அருணா சொன்ன இடத்திற்கு சென்று பார்க்க அங்கு யாரும் இல்லை.எந்த விதமான தடயமும் இல்லை.கழுத்து இல்லாமல் இருந்தால் இரத்தம் சொட்டி இருக்க வேண்டும்.அப்படி எதுவும் இல்லை.
ஒரு வாரம் சென்றது.வேறு ஒருவரும் அதை பார்த்து பயந்து மயங்கி விழ
பின்னாடி வந்தவர் தூக்கி விட்டு,ஆசுவாச படுத்தி வீட்டில் விட்டு சென்றார்.விழுந்து மயக்கம் தெளிந்து வீடு வந்து பார்த்தால் பணமும் போனும் தொலைந்து போய் இருந்தது..
இதை பற்றி அந்த பிளாட்டில் வசிக்கும் எல்லோரும் போலீசில் புகார் செய்தார் கள்.
ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு கும்பல் பிடிபட,அவர்கள் தான் இதன் பின்னணியில் இருப்பவர்கள் என்று
ஒத்து கொண்டனர்.பெண் உடை அணிந்து தலை தெரியாமல் மூடி தலை இல்லா முண்டம் போல குறுக்கே ஓடி சாலையில் வருபவர்களை பயமுறுத்தி, அவர்கள் மயங்கி விழும் போது,அவர்களின் உடமைகளை கொள்ளை அடித்து வந்தது தெரிந்தது..
அந்த சம்பவதிற்கு பிறகு அருணா துணை இல்லாமல் அந்த சாலையில் வருவது இல்லை.

