Arul Prakash

Horror Thriller

4.3  

Arul Prakash

Horror Thriller

பேய் ஒப்பந்தம்

பேய் ஒப்பந்தம்

9 mins
23.6K


ஒருத்தன் பேரு ரங்கன், வயசு 27 ஆகுது. அவன் ஒரு சோம்பேறி, எப்படி பட்ட சோம்பேறினு ஒரு சீன் பார்ப்போம். 


ரங்கனின் அப்பா to ரங்கன் : டேய் இவளோ பெரிய சோம்பேறிய எங்கும் பார்க்க முடியாது டா. வேலைக்கு போகாம இத்தன வருஷமா வீட்ல இருக்க. 


ரங்கன் : இத்தன வருஷம் மட்டும் இல்ல, வாழ்க்கை முழுசா இப்படி தான் இருக்க போறேன். 


ரங்கனின் அப்பா : டேய் இதெல்லாம் ஒரு கொள்கையா டா, கல்யாணம் எப்படி பண்ணுவ. 


ரங்கன் : ஒரு பெரிய பணக்கார வீட்ல, வீட்டோட மாப்பிள்ளையா போய்டுவேன். 


ரங்கனின் அப்பா : உன்னோட உயர்ந்த எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள். 


ரங்கன் : நக்கல் பண்ற மாதிரி இருக்கு, இருந்தாலும் நன்றி. 


--------------ரெண்டு நாள் கழித்து -------------


ரங்கனின் அப்பா to ரங்கன் : ஒரு வரன் வந்து இருக்கு, அவங்க ஜமீன் குடும்பம். உன் போட்டோவ காட்டினேன்.அவங்களுக்கு பிடிச்சிருக்கு. 


ரங்கன் : சூப்பர், நான் தான் சொன்னல, ஒரு பெரிய பணக்கார வீட்டுல, வீட்டோட மாப்பிள்ளையா போவேன்னு. 


ரங்கனின் அப்பா : ஆமா டா நீ அதிர்ஷ்ட காரன். கல்யாணம் கூட ஜமீன் வீட்லயே, வீடு கல்யாண மண்டபத்தை விட பெருசு. 


ரங்கன் : சரி பா. பொண்ணு பேரு என்ன. 


ரங்கனின் அப்பா : மீரா 


-----------கல்யாணம் முடிஞ்சாச்சு -------------


கல்யாணம் முடிஞ்சு ரெண்டு நாள் கழிச்சி தான் ரங்கனுக்கு ஒரு ஊருகாரர் மூலமா தெரிஞ்சுது, கல்யாண பொண்ணு மீரா , ஜமீன் இல்லன்னு , ஜமீன் வீட்ல தங்கி, வீட்ட பாத்துக்குற வேலைக்கார குடும்பம்னு. 


ரங்கன் to மீராவின் அம்மா : ஏன் மா ஜமீன் குடும்பம்னு சொல்லி ஏமாத்துனீங்க. 


மீராவின் அம்மா : தம்பி, உங்க அப்பாவுக்கு எல்லாம் தெரியும். அவர் உன்கிட்ட பொய் சொல்லி இருக்காரு நாங்க ஜமீன்னு . மாப்பிளை வேலை செய்யுறாருனு கூட எங்க கிட்ட பொய் சொல்லிட்டாரு உங்க அப்பா. நீங்க சொல்லி தான் எங்களுக்கு தெரியும் நீங்க உங்க வாழ்க்கையில வேலையே செஞ்சது கிடையாதுன்னு. 


ரங்கன் ரொம்ப வருத்ததோடு அவனோட அப்பாவுக்கு போன் பன்றான். 


ரங்கன் to ரங்கனின் அப்பா : தகப்பா, இப்படி என்ன ஏமாத்திட்டியே. 


ரங்கனின் அப்பா : ஹா ஹா ஹா. வேலையே செய்யமாட்டேன்னு சொன்ன. இப்போ அந்த வீட்டு வேலைகாரங்க அதாவது உன் மாமியார், உன் மனைவியோடு நீயும் வேல செய்யுடா.



ரங்கன் தன்னோட கொள்கையை கை விட்டு, வீட்டு வேலை செய்ய ஆரமிச்சான்.



மீரா, மீராவோட அம்மா சகுந்தலா பத்தி சொல்லனும்னா, அவங்க 40 வருஷமா இந்த ஜமீன் குடும்பத்துல வேல செய்யுறாங்க. மீராவோட அப்பா சின்ன வயசுல இறந்திடுறாரு. ஜமீன் குடும்பம் தான் மீராவை படிக்கவச்சது. 


ஜமீன் குடும்பத்துல கடைசியா ஜானகி அம்மா தான் எல்லாத்தையும் நிர்வாகம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க, அவங்க மகள் ரேஷ்மா வெளிநாட்டுல கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டாங்க. ரேஷ்மா கல்யாணத்துக்கு அப்பறம் ஜானகி அம்மா கொஞ்ச நாள்ல உடும்பு முடியாம இறந்துட்டாங்க. இப்ப இந்த ஜமீன் சொத்து எல்லாம் ரேஷ்மா மேல இருக்கு, ரேஷ்மா வெளிநாட்டுல இருந்து வேலைகார மீரா குடும்பத்துக்கு சம்பளத்தை மட்டும் accountல அனுப்பிச்சிடுவாங்க. இப்ப மீராவும், மீரா அம்மா சகுந்தலாவும் தான் ஜமீன் வீட்ட பாத்துக்கிறாங்க. வெளிநாட்டுல இருக்க ரேஷ்மா எப்பயாவது இங்க சொந்த ஊருக்கு வருவாங்க. 


ரேஷ்மா சொந்த ஊருக்கு கொஞ்ச நாள் தங்க வந்து இருக்காங்க.


ரெண்டு நாளா ரங்கன் ரேஷ்மாவை கவனிக்கிறான். ரேஷ்மா ரொம்ப வித்தியாசமா நடந்துக்கிறாங்கனு ரங்கனுக்கு தோணுது,ஏன்னா ரேஷ்மா, மீரா அம்மா சொல்றது அப்படியே கேட்டு நடுக்கறாங்க. வேலைகாரங்க சொல்றது ஏன் ஒரு முதலாளி அப்படியே கேட்கணும். அதுவே மாலை 6 மணிக்கு மேல வேற மாதிரி நடந்துக்கிறாங்க அப்ப ரேஷ்மா சொல்றத மீரா அம்மா கேட்டு நடந்துக்கிறாங்க. அது மட்டும் இல்லாம, காலைல வந்தவுங்க ரேஷ்மா, மாலை 6 மணிக்கு தான் மீராவுக்கும் ரங்கனுக்கும் கல்யாண வாழ்த்துக்கள் சொன்னாங்க. அது மட்டும் இல்லாம அந்த ஊரு மைனர் சிவா வீட்டுக்கும், வயல்வெளி பக்கமா அடிக்கடி போய்ட்டு வந்தாங்க. இத பத்தி மீரா கிட்டயும், மீரா அம்மா கிட்டயும் கேட்குறான் ரங்கன் 


ரங்கன் to மீராவின் அம்மா : எனக்கு ஒன்னு கேட்கணும். 


மீராவின் அம்மா : சொல்லுங்க தம்பி. 


ரங்கன் : ஏன் ரேஷ்மா நீங்க சொல்றது எல்லாம் 6 மணி வரைக்கும் கேட்குறாங்க, 6 மணிக்கு நீங்க அவங்களுக்கு அடங்கி போறீங்க. நீங்க அவங்களுக்கு சூனியம் வச்சிட்டீங்கனு நினைக்கிறன். 


மீரா to மீராவின் அம்மா : சூனியமா, அம்மா இவன் கிட்ட எல்லாம் உண்மையும் சொல்லிடுமா, இல்லனா ஊருகுள்ள போய் நம்மல பத்தி எதுனா உளரிடப்போறான். 


மீராவின் அம்மா to ரங்கன் : அவளுக்கு பேய் பிடிச்சிருக்கு. 


ரங்கன் பயத்துல என்ன பேய்யானு கேட்குறான். 


மீராவின் அம்மா : ஆமாபா. ரேஷ்மாவோட அம்மாவுக்கும் இவளுக்கு பேய் பிடிச்ச விஷயம் தெரியும். ரேஷ்மாவை இந்த பேய் இந்த ஊருக்கு வந்தா மட்டும் தான் பிடிக்கும், ஊரை விட்டு வெளிய போய்ட்டா, அந்த பேய் அவ உடம்ப விட்டு போய்டும். ரேஷ்மாவோட அம்மா எத்தனையோ மந்திரவாதிகள் வச்சி பேய் ஓட்ட முயற்சி பண்ணாங்க ஆனா எல்லா மந்திரவாதிகளும் காசு வாங்கிட்டு ஏமாத்துற டூபாக்கூரா இருந்தாங்க. ரேஷ்மாவுக்கு அவ மேல பேய் இருக்குனு இப்ப வரைக்கும் தெரியாது. அதுனால வெளிநாட்டுல ரேஷ்மா கல்யாணம் பண்ணிட்டேன், அங்கேயே செட்டில் ஆக போறேன் சொல்லும் போது ஜானகி அம்மா சந்தோசமா ஏத்துக்கிட்டாங்க. 


ரங்கன் : சரி அந்த பேய் நீங்க சொல்றத எப்படி கேட்குது. 


மீராவின் அம்மா : ஜானகி அம்மா சாவுக்கு, ரேஷ்மா வெளிநாட்டுல இருந்து வந்தாங்க. ரேஷ்மா மேல பேய் இருக்குனு, எனக்கும் மீராக்கும் தான் தெரியும். ரேஷ்மா மேல இருந்த பேய் ரொம்ப ஆக்குரோஷமா இருந்துது, அதையும் சமாளிச்சு அவ மேல பேய் இருக்குனு சாவுக்கு வந்தவங்க யாருக்கும் தெரியாம பாத்துக்கிட்டோம். அடுத்த நாளே ஒரு பெரிய மந்திரவாதி வச்சு, பேய்ய ஓட்டலாம்னு முயற்சி செய்தோம். ரேஷ்மா உடம்புல இருந்த பேய் அப்ப பேசுச்சு.


ரங்கன் : பேய் என்ன சொல்லுச்சு, எனக்கு ரொம்ப ஆர்வம இருக்கு. 


மீராவின் அம்மா : அந்த பேய் தன்னோட பெயர் தேவினு, அது சாவுறதுக்கு முன்னாடி ஒன் சைடா அந்த மைனர் சிவாவை லவ் பண்ணதா சொல்லுச்சு. அதுக்குள்ள ஒரு விபத்துல செத்துடுச்சாம். இந்த ஊர்ல இருக்க எல்லார்க்கும் தெரியும் அந்த மைனர் சிவாக்கு ரேஷ்மா மேல ஒரு கண்ணுனு. இப்ப அந்த தேவி பேய், ரேஷ்மா உடம்புகுள்ள போய்ட்டா, அந்த மைனர் சிவா, ரேஷ்மானு நினைச்சி தேவி பேய் கிட்ட பேசுவான்ல, அதுனால தான் அந்த பேய் ரேஷ்மா உடம்புல இருக்கு. 


ரங்கன் : இப்ப என்ன அந்த பேய்யுக்கு, அந்த மைனர் கிட்ட பேசினால் போதும்ல 


மீராவின் அம்மா : பேசுனா போதும்னா, பருவா இல்லையே. 


ரங்கன் : வேற என்ன கேட்குறா. 


மீராவின் அம்மா : அவன் கூட ரெண்டு நாள் வாழணுமா. வாழ்ந்தா ரேஷ்மா உடம்பு விட்டு போய்டுவாளாம். 


ரங்கன் : வாழணுமா, நீங்க அதுக்கு அனுமதிக்கல இல்லையா. 


மீராவின் அம்மா : அனுமதிச்சன். 


ரங்கன் : ஏன் எதுக்கு 


மீராவின் அம்மா : பேய் கூட ஒரு ஒப்பந்தம் போட்டோம். தேவி ரேஷ்மா உடம்புக்குள்ள போய், மைனர் கூட ரெண்டு நாள் குடும்பம் நடத்திக்கலாம் அதுக்கு பதிலா அந்த பேயோட வேல முடிஞ்சதும் ரேஷ்மா உடம்புக்குள்ள இருக்க தேவி, ரேஷ்மா கையெழுத்து போட்டு இந்த ஊர் மக்கள் எதிர்க்க ஜமீன் சொத்தையெல்லாம் என் பேர்ல எழுதிடனம். ஊரை பொறுத்த வரை ரேஷ்மா தான் அவ சொத்தை நம்ம மேல எழுதின மாதிரி. ஆனா நமக்கு மட்டும் தான் தெரியும் அது ரேஷ்மா இல்ல அது பேய்னு. 


ரங்கன் : பயங்கரமான ஆளுங்க நீங்க. ஆமா 10 to 6 மணிக்கு ஏன் வேறமாதிரி நடந்துக்கிறாங்க. 


மீராவின் அம்மா : முழு நேரமும் பேய் பிடிச்சா தெரிஞ்சிடும் ரேஷ்மாக்கு, சந்தேகம் வந்துடும்னு தான் காலை 10 to 6 மட்டும் தேவி, ரேஷ்மா உடம்பு குள்ள இருக்க மாதிரி ஒப்பந்தம் போட்டோம் 


ரங்கன் : நல்ல ஐடியா தான். 


மைனர் சிவா பத்தி சொல்லணும்னா,வயசு 26, அவர் பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவரு, கபடி போட்டி, குத்து சண்டை, மாடு அடக்கறதுனு எல்லா வீர விளையாட்டுலையும் கலந்துக்கிட்டு ஜெயிப்பான் ஆனா நீச்சல் போட்டில மட்டும் கலந்துக்க மாட்டான் ஏன்னா அவனுக்கு நீச்சல் தெரியாது. பெண்கள் பின்னாடி சுத்துறதும் ஒரு வேலையா பண்ணுவான். 


------------அடுத்த நாள் திருவிழா -----------


தேவி பேய் : இன்னைக்கு, ரேஷ்மா உடம்புல நைட் வர இருக்க போறேன். 


மீராவின் அம்மா : ஆனா காலை 10 to 6 தான நம்ம ஒப்பந்தம். 


தேவி பேய் :  மைனர் சிவா நைட் என்ன பாக்க வர சொல்லி சிக்னல் தந்தான். 


மீராவின் அம்மா : அட்ரா சக்க, இது எப்ப நடந்தது, இன்னைக்கு நைட் உன் ஆசைய தீத்துப்ப. 


தேவி பேய் : ஆமா அப்படியே என் ஆசை தீர்ந்ததும், ரேஷ்மா உடம்ப விட்டு போய்டுவன். 


மீராவின் அம்மா : ஏம்மா, என்ன உன் வேல முடிஞ்ச உடனே போறனு சொல்லிட்ட, சொத்தை எங்க மேல எழுதிடுமா. 


தேவி பேய் : கண்டிப்பா செஞ்சிடுறன். 


தேவி பேய், மைனர பாக்க கிளம்பிட்டா. 


மீராவோட அம்மா எப்போ தேவி பேய் திரும்பி வருவான்னு காத்து இருக்கா , சொத்தை தன் பேர்ல எழுதுவதற்காக. 


ரங்கன் to மீராவின் அம்மா : தேவி பேய் எங்க. 


மீராவின் அம்மா : அவ, மைனர் கூப்டான்னு அவன் வீட்டுக்கு போய் இருக்கா. 


ரங்கன் : ஐயோ, ரெண்டு பேரும் ஆசையில சேர்ந்துற போறாங்க,இன்னைக்கு திருவிழா வேற தெய்வ குத்தம் ஆயிடும். 


மீராவின் அம்மா : சொத்தே வருது, தெய்வ குத்தம்லாம் பரவா இல்ல. 


-------------மைனர் வீட்டில் ------------


திருவிழானால ஊர்ல முக்கால் வாசி பேரு கோயில்ல இருக்காங்க. ஊரே காலியா இருக்கு. 


மைனர் வீட்ல யாரும் இல்ல, ரேஷ்மா உடம்புகுள்ள இருக்க தேவி பேய்யும், மைனரும் ரொம்ப நெருக்குமா பேசிட்டு இருக்காங்க. இவங்க நெருக்கம் அடுத்த கட்டத்தை தாண்டி போய்ட்டு இருந்தது திடிர்னு தேவி பேய்யுக்கு விக்கல் வந்துடுது. வீட்ல தண்ணி இல்லனு, மைனர் பின் வாசல்ல போய் கிணற்றில் தண்ணி இறைக்கிறாரு. பின்னாடி யாரோ நிக்கற மாதிரி இருந்துதுனு திரும்பி பாக்குறான், தேவி பேய் உடனே அவன் கால புடிச்சி தூக்கி கிணத்துல தள்ளிட்டு பேய் சிரிப்பு சிரிக்குது. இத பக்கத்து வீட்டு கிழவி ஒன்னு பாத்துட்டு கத்த ஆரமிச்சிடுது ஜமீன் வீட்டு பொண்ணு மைனர கிணத்துல தள்ளிட்டானு. அந்த கிழவியால நடக்க முடியாது, அதுனால மைனர காப்பாத்த முடியல. 


ரேஷ்மா இப்ப அவ வீட்டுக்கு போயிட்டா , மீராவின் அம்மாக்கு இவ ரேஷ்மாவா இல்ல தேவி பேய்யானு சந்தேகதோடவே பாக்குறா. 


ரேஷ்மா to மீராவின் அம்மா : என் மூஞ்சையே ஏன் அப்படி பாக்குற போய் சாப்பாடு எடுத்து வையுனு சொன்ன உடனே தெரிஞ்சிது இது ரேஷ்மா தான்னு 


ரேஷ்மா சாப்பிட்டு தூங்கிடுறாங்க. 


மீராவின் அம்மா to மீரா : ஏண்டி, தேவி பேய் வருவா, சொத்தை எழுதி தருவானு நான் காத்துட்டு இருக்கேன். இப்ப ரேஷ்மா வந்து இருக்கா .என்ன தான் மைனர் வீட்ல நடந்து இருக்கும். 


மீரா : தேவி பேய்க்கு மைனர் கூட தன்னோட ஆசைய எல்லாம் தீத்து இருப்பா. அவ ஆசை தீர்ந்ததும், அவ ஆத்மா சாந்தி அடைஞ்சு இந்த உலகத்து விட்டு போயிருப்பா. 


மீராவின் அம்மா : அப்போ பேய் கூட நம்மல ஏமாத்திடுச்சா. 


மீரா : நம்ம கடைசி வரைக்கும் வேலைகாரங்க தான். 


அடுத்த நாள் காலையில 


ரேஷ்மா இன்னும் தூக்கத்துல இருந்து எழுந்திரிக்கல 


மீரா, மீராவின் அம்மா, ரங்கன் எல்லாரும் எழுந்து வேல செஞ்சுட்டு இருக்காங்க. 


ஊர்ல இருந்து ஒருத்தர் ஒருதரா வந்து என்ன ரேஷ்மா மைனர கிணத்துல தள்ளி கொன்னுட்டாலேமேனு கேட்டுட்டு போறாங்க. 


மீரா, மீராவின் அம்மா, ரங்கன் எல்லாருமே ஷாக். 


மீரா : அப்போ அந்த தேவி பேய், ரொமான்ஸ் பண்ண போல, அவன கொள்ள தான் போய் இருக்கா. 


மீராவின் அம்மா : எதோ அசம்பாவிதம் நடந்து போச்சு, ஆனா நம்ம சொத்தை ஆட்டைய போட நினைச்சுது நமகுள்ளேயே

இருக்கணும். என்ன மாப்ள சரி தான. 


ரங்கன் : நம்ம குடும்பம் ஆகிட்டோம், இதெல்லாம் வெளிய சொல்ல மாட்டேன். 


 

ரேஷ்மா எந்திரிச்ச உடனே 


மீராவின் அம்மா to ரேஷ்மா : உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். 


ரேஷ்மா : சொல்லுங்க. 


மீராவின் அம்மா : உங்க மேல ஒரு பேய் பிடிச்சி இருந்துது. 


ரேஷ்மா : என்ன சொல்றிங்க. 


மீராவின் அம்மா : ஆமா இப்போ அந்த பேய் உங்க உடம்புல புகுந்து, ஒருத்தன கொன்னுடுச்சு. 


ரேஷ்மா : கடவுளே.


மீராவின் அம்மா : இப்ப தான் எங்களுக்கு, ஊரு மக்கள் சொல்லி தெரியும். 


ரேஷ்மா : எப்பத்துல இருந்து எனக்கு பேய் பிடிச்சி இருக்கு. 


மீராவின் அம்மா : உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே, உங்க அம்மாவுக்கும் தெரியும் .இந்த ஊருகுள்ள வந்தா மட்டும் தான் உங்களுக்கு பேய் பிடிக்கும். 


ரேஷ்மா : எப்படியோ இந்த கேஸ்ல மாட்டிகிட்டேன். சரி வக்கீலை கூப்புடுங்க. 


கோர்ட்க்கு அலைஞ்சி திரிஞ்சி ஒரு bail வாங்கி ரேஷ்மா வெளிய வராங்க. 


ரேஷ்மா வீட்டுக்குள்ள இருகாங்க 


ரங்கன் to ரேஷ்மா : உங்களுக்கு விஷயம் தெரியுமா. உங்க மேல வந்த தேவி பேய கொலை பண்ணது மைனர் தானாம், அந்த பொண்ணு சாவுக்கு காரணமான ஆட்டோ டிரைவர் போலீஸ்ல அவனாவே முன் வந்து சரண் அடைஞ்சு இருக்கான். 


ரேஷ்மா : எப்படி அந்த ஆட்டோ டிரைவர் காரணமாம்? 


ரங்கன் : மைனர்,போதையில ஆட்டோ டிரைவர்க்கு கால் பண்ணி, எதாவது பொண்ணு சவாரில இருந்தா இங்க கூட்டிட்டு வந்து விட்டுட்டு போ, உனக்கு காசு தரேன்னு சொன்னதா ஆட்டோ டிரைவர் கோர்ட்ல சொல்லி இருக்கான். 


ரேஷ்மா : அப்ப இந்த ரெண்டு பேரு தான் குற்றவாளியா? 


ரங்கன் : இல்ல மூணாவதா ஒருத்தன் இருக்கானா. ஆட்டோ டிரைவர் தேவியை கொண்டு போய் விட்ட உடனே மைனர் அவன் கூட இன்னொருத்தணும் தேவியை இழுத்துட்டு போன்னாங்க. அந்த மூணாவது ஆளு மூஞ்ச பாக்கல, ஏன்னா அவன் மூஞ்சுல துணி கட்டி இருந்து இருந்தான் . ஆனா சட்டை போடல, அதுனால அவன் உடம்புல முதுகுல பெரிய மீன் பச்சை குத்தி இருந்தான். 


ரேஷ்மா : ஓ அப்ப அந்த மூணாவது ஆளோட ஒரே அடையாளம், முதுகுல பெரிய மீன் பச்சை குத்தி இருக்கறது. ஆமா அந்த ஆட்டோ டிரைவர்க்கு தண்டனை கொடுத்துட்டாங்களா கோர்ட்ல. 


ரங்கன் : அவன், அந்த தேவி பேய்,  மைனர கொன்னா மாதிரி தன்னையும் கொன்னுடுமோனு பயந்து, போலீஸ் பாதுகாப்பு கொஞ்ச நாள்க்கு கேட்டான் கோர்ட்ல. ஒரு மூணு நாளுக்கு மட்டும் நிஜமாவே அந்த பேய் வருதானு பாக்க, ஒரு போலீஸ் ஒரு கேமரா இருக்குற ரூம் கொடுங்கனு கோர்ட் உத்தரவு போட்டு இருக்கு. மூணு நாள் கழிச்சு அந்த பொண்ண கொலை பண்ண உதவியதுகாக ஜெயில் தண்டனைனு கோர்ட் உத்தரவு. அந்த மூணாவது குற்றவாளி , உடம்புல இருந்த மீன் tatoo எப்படி இருக்கும்னு, போலீஸ் sketch artistku சொல்லணும். அந்த மீன் அடையாளத்தை வச்சி, போலீஸ் குற்றவாளிய தேடணும்னு கோர்ட் உத்தரவு. 


ரேஷ்மா : அப்போ மூணு நாள்ல அந்த பேய், ஆட்டோ டிரைவர கொலை பண்ண வந்தா, அங்க இருக்குற கேமரால பதிவாயிடும் .அந்த பேய் தன்ன கொன்னவங்கள கொல்லுதுனு, நம்ம மைனர் கொலை கேஸ்ல இருந்து தப்பிச்சிடுலாமா. 


ரங்கன் : தப்பிச்சிடலாம், ஆனா ரெண்டு நாள் முடியப்போகுது, நாளைக்கு ஒரு நாள் தான் இருக்கு. அது குள்ள அந்த பேய் வரணுமே. 


ஒரு போலீஸ் காரர் ரேஷ்மா வீட்டுக்கு வராரு 


போலீஸ் ரமேஷ் : என் பேரு ரமேஷ் மேடம். 


ரேஷ்மா : சொல்லுங்க என்ன விஷயமா வந்து இருக்கீங்க. 


ரமேஷ் : மேடம் உங்களுக்கு ஒரு உதவி பண்ண தான் வந்து இருக்கேன். நான் அந்த ஆட்டோ டிரைவர ஒரு ரூம்ல வச்சி அந்த தேவி பேய் வருதான்னு பாத்துக்குற போலீஸ். ரெண்டு நாள் ஆச்சு அந்த பேய் வரல. மூணாவது நாளும் வரலனா, நீங்க மைனர கொன்றது உண்மை ஆகிடும் 


ரேஷ்மா : பேய் வரலனா என்ன பண்ண முடியும் ? 


ரமேஷ் : நம்ம பேய்ய உருவாக்குவோம், எப்படின்னா நான் அந்த தேவி பேய் என் மேல வந்தது போல நடிச்சி, அந்த ஆட்டோ டிரைவர கொன்னுடறன். அது அந்த கேமெரால பதிவாயிடும். அப்பறம் அந்த பேய் இருக்கு, அந்த பேய் தான் உங்க உடம்பிலும் புகுந்து மைனர கொன்னதுனு ஆதாரம் கிடைச்சுடும். அந்த பேய் அவன கொன்னவங்கள கொல்லுது அப்படினு ஆகும். இந்த வேல பண்ண கொஞ்சம் பணம் வேணும் மேடம். 


ரேஷ்மா : பணத்த வேலைய முடிச்சிட்டு வாங்கிக்கோங்க. 


ரமேஷ் : சரி மேடம், நான் ஆட்டோ டிரைவர கொல்றத கேமரா மூலமா லைவா பாக்குற மாதிரி பண்ணி தரேன். நீங்க உங்க போன்ல இருந்து அந்த கேமெராவை பாக்க முடியும். 


அடுத்த நாள் காலைல shiftக்கு, ஆட்டோ டிரைவர பாத்துக்குற வேலைக்கு போலீஸ் ரமேஷ் போறான். அன்னைக்கு ஆட்டோ டிரைவர கொல்றது திட்டம். 


ரேஷ்மாவும், ரங்கன், மீரா, மீரா அம்மா எல்லாரும் கேமெராவையே பாத்துட்டு இருக்காங்க, போலீஸ் ரமேஷ் கத்தி எடுத்துனு போறான், கத்தி எடுத்து ஆட்டோ டிரைவர கொன்னுடுறன். ரமேஷ் தான் கொன்னுட்டான் நினைச்சு இருக்கும்போது, ரமேஷ் திரும்பி பாக்குறான் ரமேஷ் உடம்புல இருக்கறது தேவி பேயோட முகம் . 


ரேஷ்மா to ரங்கன் : போலீஸ் ரமேஷ் கொல்லுவான்னு பாத்தா, தேவி பேய்ய்யே கொன்னுடுச்சு. 


ரங்கன் : விடுங்க, நல்லது தான் இப்ப பேய் கேமெரால பதிவு ஆகிடுச்சு. நீங்க கொலை கேஸ்ல இருந்து தப்பிச்சிடுவிங்க. 


இன்னும் அந்த தேவி பேய்யோட கோபம் அடங்கல, கோபத்துல போலீஸ் ரமேஷோட சட்டையை கிழிக்கிறா . போலீஸ் ரமேஷ் முதுகுல பெரிய மீன் பச்சை குத்தி இருக்கு.


ரேஷ்மா : ஐயோ அப்போ மூணாவது கொலைகாரன் போலீஸ் ரமேஷ் தானா. 


தேவி பேய், ரமேஷ் உடம்புல இருக்கறது நால, தன்ன தானே கழுத்தை கத்தியால் அறுத்துடுது . இப்ப போலீஸ் ரமேஷும் செத்துடுறான். 


அந்த கேமரால தேவி பேய் தான் கொலை பண்ணது பதிவாகி இருந்தது, அதுனால மைனர் கொலையும் அந்த பேய் தான் பண்ணி இருக்கும்னு கோர்ட் முடிவு பண்ணி, ரேஷ்மா அந்த கேஸ்ல இருந்து வெளிய வந்துட்டாங்க. 


போலீஸ் விசாரணையிலும், மைனர், ஆட்டோ டிரைவர், போலீஸ் ரமேஷ் தான், தேவி சாவுக்கு காரணம்னு கண்டுபிடிக்கபட்டது. 


ரேஷ்மா to ரங்கன் : தேவி பேய் ஏன் என் மேல வந்து அந்த மைனர கொள்ளணும், அதும் பல வருஷம் வெயிட் பண்ணி. 


ரங்கன் : யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்னு சொல்றேன், போலீஸ் விசாரணையில் தேவி பேய் சாவரத்துக்கு முன்னாடி மைனர ஒன் சைடு ah லவ் பண்ணி இருக்குனு தெரிய வந்து இருக்கு. 


ரேஷ்மா : சரி அதுக்கும் என் மேல வந்து மைனர கொன்னதுக்கும் என்ன சம்பந்தம். 


ரங்கன் : மைனர் உங்கள ஒன் சைடு ah ரொம்ப லவ் பண்ணான். அது தான் நம்ம விரும்புறவங்களே நம்மள கொன்னா எப்படி இருக்கும்னு காற்றத்துக்காக உங்கள வச்சு அவன கொன்னு இருக்கும். 


ரேஷ்மா : சரி எப்படியோ எல்லாம் முடிஞ்சிடுச்சி. அப்பறம் என்னால இனிமே இந்த ஊருக்கு அதிகமா வரமுடியாது அதுனால இந்த வீட்ட மீராவின் அம்மா பேருக்கு எழுதிடலாம்னு இருக்கேன். என்கிட்ட வெளிநாட்டுல நிறையவே சொத்து இருக்கு. இந்த சொத்தையும் பராமரிக்க முடியல. 


மீராவின் அம்மா கண் கலங்கிடுறாங்க. அவங்க இந்த சொத்துக்காக பேய் கூட ஒப்பந்தம் போட்டது நினைச்சு வருத்த படுறாங்க 







---------------------- The End----------------------------






















Rate this content
Log in

Similar tamil story from Horror