Saravanan P

Horror Thriller Others

3  

Saravanan P

Horror Thriller Others

மீண்டும் வருகிறேன்

மீண்டும் வருகிறேன்

2 mins
191


அன்று அந்த காட்டில் நிலவிய நிசப்தம் காட்டின் உள்ளே வந்த காதலர்கள் நிலா மற்றும் வினய்யை சற்று பயமுறுத்தியது.

வினயின் நண்பன் ஷ்யாம் சற்று பின்னால் நடந்து வந்தபடி அவன் பயத்தை கட்டுப்படுத்தி கொண்டிருந்தான்.

ஷ்யாம் இந்த காட்டில் தன் நண்பர்களுடன் அடிக்கடி வந்தாகவும் இப்பொழுது சற்று விசித்திரமாக இருந்தது.


தூரத்தில் அவர்கள் கண்டது ஒரு ஆங்கிலேய காலத்து வீடு.


அதன் உள்ளே சென்று விடலாம் என்று அவர்கள் திட்டமிட்டார்கள்.

ஷ்யாம் அடிக்கடி தங்குவதால் அந்த இடத்தில் அனைத்து தேவையான பொருட்களும் வாங்கி வைத்திருந்தான்.

அவர்கள் அந்த வீட்டின் உள்ளே சென்ற நேரம் ஒரு நரி பயங்கர ஊளையிட அவர்கள் மேனி சில்லென்று மாறியது.சடசடவென்று பறந்த வௌவால்கள் சற்று கிலியை கொடுத்தது.

சிறு சிறு விளக்குகளை ஆன் செய்த ஷ்யாம் கொண்டு வந்த சாப்பாட்டை பிரித்து வைத்தான்.

மழை ஹோவென்று பேரிரைச்சல் உடன் வேகமெடுத்தது.

வினய் மற்றம் நிலா காதலை கண்டுப்பிடித்த நிலாவின் தந்தை இருவரையும் கொல்ல ஆள் அனுப்ப இந்த காடு அவர்களை காத்தது.

சாதி,மதம் தான் இங்கு பெரிய விஷயம் எல்லாருக்கும் என வினய் சொன்னான்.

அதே நேரம் மழை மெல்ல நின்றது.

மழை நின்றவுடன் மூவரும் தங்கள் அறைக்கு தத்தம் செல்ல எழுந்தனர்.

சென்று படுத்தவுடன் வினய்யின் அறையில் தண்ணீர் ஒழுக தொடங்கியது.

வெளியே பார்த்தாலும் பெரிய மழை இல்லை,சரி தேங்கிய தண்ணீர் ஒழுகும் என‌ நினைத்து திரும்புகையில் அவன் நிழல் அவனை பார்த்து முறைத்து நின்றது.

வினய் எழுந்தான்.

பின்பு எழுந்து ஷ்யாமை அழைக்க செல்ல அவன் அறை காலியாக இருந்தது.

நிலாவை பார்க்க செல்ல அவள் அறையிலும் யாரும் இல்லை.

சரி வெளி வாசல் தேடி செல்ல அது வெளிப்புறம் பூட்டி இருந்தது.

அவன் வெளிப்பக்கம் பார்க்க நிலாவும்,ஷ்யாமும் அவன் பெயரை கத்திக்கொண்டு தேடினர்.

மழை முன்பு எப்படி பெய்ததோ அப்படிதான் பெய்து கொண்டிருந்தது.

வினய் திரும்ப தன் அறை செல்ல அங்கு இருந்த கண்ணாடி கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கி அதில் இருந்து ஒரு உருவம் வெளி வந்து வினய்யின் உடம்பின் உள்ளே வேகமாக சென்று விட வலி தாங்க முடியாமல் வினய் இறந்து விழுந்தான்.

வெளியே பெய்த மழையில் நடந்த ஷ்யாம் திரும்பி நிலாவை பார்க்க அவள் துளி அளவுகூட நனையவில்லை.

நிலா,நீ என ஷ்யாம் பேச ஆரம்பிக்க பின்னால் இருந்த மரக்கிளை முறிந்து அவன் மீது விழ ஒரு பாம்பு அவனை இடைவிடாது கொத்தி கொன்றது.

நிலா என்ற அந்த பேய் தனது சுய உருவமான பிசாசு உருவம் அடைந்து இன்னும் கொஞ்சம் நாள் தான் நான் மீண்டும்‌ வருவேன் என அவள் சொல்லி மெல்லிய புன்னகை புரிய அந்த வௌவால்கள் அந்த ஆங்கில காலத்து வீட்டின் உள்ளே சென்றன.



Rate this content
Log in

Similar tamil story from Horror