ஏலியன் அட்டாக் - 10
ஏலியன் அட்டாக் - 10
முகிலன், தன் கையில் இருந்த கடிகாரத்தை பார்த்து வில்சன் வியந்ததை பார்த்து சற்று பீதி அடைந்தான் .
"என்ன சார் சொல்றீங்க , இது எங்க வீட்டு தோட்டத்துல இருக்குற பழைய ரூம்ல இருந்து எடுத்தேன் "
இப்போ தான் எனக்கு எல்லாம் புரியுது.......
இந்த ஏலியன் பெட் உண்ண ஏன் கண்ணன் பெற சொல்லி கூப்புடுதுனு ...... இத ஏலியன்ஸ் தான் அவனுக்கு குடுத்தாங்க.... இத வச்சு நம்மல டிராக் பண்ணுறாங்கனு நெனைக்கிறேன்...... அத கழட்டி போட்ரு தம்பி.....", வில்சன் எச்சரித்தார்.
அவர் சொன்னது தான் தாமதம் ..... அதற்கு முன்பே முகிலன் அதை கழட்டி விட்டான். அவன் அதை தூக்கி போட்ட அதே நேரத்தில் அந்த பல்லி பிராணிகள் ஓடி போய் அந்த கடிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு , முகிலனை பார்த்து சொன்ன அதே வார்த்தைகளை கூறியது.....
சீ...... வாட்ச்க்கு செத்த ஏலியனா நீங்க......?,
இது தெரிஞ்சு இருந்தா முன்னாடியே தூக்கி போட்டு இருப்பேனே..... அட கொடுமையே...." என தலையில் அடிதான்.
நாம சீக்கிரம் இந்த எடத்த விட்டு கெளம்பி ஆகனும் , அவங்க இத டிராக் பண்ணி இங்க வந்துருவாங்க..... அப்பறம் பெரிய பிரச்சனை ஆயிரும்..... வாங்க கெலம்பலாம் என்று கூறி தன் கார் இருக்கும் பக்கம் விரைந்தார். அவரை பின் தொடர்ந்து, மூவரும் சென்றனர்.
பாவம் அவர்கள்.....
இங்கு நடப்பதை நான்கு கண்கள், கண்ணனின் வாட்ச்சில் உள்ள ஸ்பை கேமரா மூலம் தன்னுடைய திரையில் பார்த்து கொண்டு இருப்பது அவர்களுக்கு தெரியாதே.
(ஆன அத நா உங்களுக்கு சொல்லிட்டேன்..... 😋
இத அவங்களுக்கு சொல்லாதீங்க..... 🤫அப்ரம் சஸ்பென்ஸ் த்ரில்லர் இதெல்லாம் இருக்காது😈)
திரையை பார்த்து கொண்டிருந்த இருவரில் ஒருவர் சார் நா வேணும்னா அங்க போய் போர் வேணாம் சமாதானம் செய்து கொள்ளலாம் அப்பிடின்னு கோரிக்கை வச்சுட்டு வரவா? என்று கேட்டது....
"அதுக்கு அவசியம் இல்ல ...... அந்த முடிவு இப்போ சரியானவங்க கிட்ட தா இருக்கு. அவங்க இந்த போரா நடக்க விடமாட்டங்க", மற்றொருவர் பதிலளித்தார்.
யாருட்ட சார் இருக்கு.....
அந்த குறிப்பிட்ட நபரின் பார்வை , திரையில் தெரிந்த மூவரின் மீது ஆழமாக பதிந்தது.
இவங்களா...? இவங்க என்ன பண்ண போறாங்க ....?, அவன் குழப்பத்துடன் கேட்க
"பொறுத்து இருந்து பார்...", என்றது அந்த தலைவனின் குரல்.
_தொடரும்.....
