பூவினைப் போன்று மலரும் காதல் நினைவுகள்
பூவினைப் போன்று மலரும் காதல் நினைவுகள்
கவலைகள் நிறைந்த வாழ்க்கையில் சோர்வாக இருக்கும்பொழுது!
கவலைகளைக் களைய என் முன்னே கருப்பு மயிலாக வந்து நின்றவளே!
என்னுடைய சிந்தனைகளின் காதல் தேவதையாக அவள் இருக்கும்பொழுது!
என்னுடைய ஆழ்மனதின் கருப்பு மயிலாக நிலைத்திருப்பவளே!
வாழ்க்கையில் சில மணித்துளிகள் அந்தக் கருப்பு மயில் என்னுடன் உரையாடியதை நினைக்கும்பொழுது!
வாழ்க்கை முழுவதும் அந்தக் கருப்பு அன்னப்பறவை என்னுடன் உரையாடியதாக நினைத்து மகிழ்ந்திருக்கிறேன்!
வருடங்கள் கடந்து சென்றாலும் அந்தக் கருப்பு மயில் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை நினைக்கும்பொழுது!
வருடங்களைக் கடந்த அந்தக் கருப்புக் குயிலின் மீதான நட்பினைத் தொடர வேண்டும் என்று கனவு காண்கிறேன்!
ஒவ்வொரு ஆண்டும் நான் நம்பிக்கையுடன் இருக்கும்பொழுது!ஓத்த மனதுடன் ஒரு நாள் ஒரு நாள் இணைந்து வாழ்க்கையின் பயணிப்போம் என்று கனவு காண்கிறேன்!
என்னுடன் பயணித்த என்னவளின் நினைவுகளை எனது ஆழ்மனதில் நினைத்துக்கொண்டிருக்கும்பொழுது!
என்னவளுடன் வாழ் நாள் முழுவதும் அன்புடன் உரையாட வேண்டும் என்று அதிகமாக ஆவல் கொள்கிறேன்!
உண்மையான நட்பே உயர்ந்த காதல் என்று உறுதியுடன் மனதில் நினைக்கும்பொழுது!
உரிமையுடன் நினைத்துக் கொண்டு வாழ்கிறேன் என்றும் நிறைவேறாத ஏக்கங்களோடு!

