STORYMIRROR

Deepa Sridharan

Romance

4.4  

Deepa Sridharan

Romance

உன் ஞாபகம்

உன் ஞாபகம்

1 min
23.9K



ஒற்றையடிப் பாதை

ஆளில்லா இருக்கை

உதிர்ந்த சருகின்மேல்

உருண்டோடும் பனித்துளி

-உன் ஞாபகம்

பனிகொட்டும் நள்ளிரவு

சைகைவிளக்கின் கதகதப்பு

குளிர்காயும் வண்டுகளின்

குழைந்திட்ட ரீங்காரம்

-உன் ஞாபகம்

மொட்டுகளில் இரத்தஓட்டம்

விரிந்திட்ட நரம்புகள்

சிரித்துக் குலுங்கியதில்

சிவந்த மலரிதழ்கள்

-உன் ஞாபகம்

கலவிகொள்ள இனம்மாறிய

சிப்பிக்குள் முத்துக்கள்

கோடைதாகம் தீர்ந்திட

கோர்த்துக்கொண்ட மாலை

-உன் ஞாப

கம்

இமைச்சிறையை உடைத்திட்ட

அதிக அதிர்வெண் மௌனம்

மல்லுகட்டும் கண்ணீரை

மஞ்சுவிரட்டும் புன்னகை

-உன் ஞாபகம்


புகைகக்கும் தேனீர்கோப்பை

கையேந்தும் வாடைக்காற்று

சற்றே சிலிர்த்துபோன

சன்னல் கம்பிகள்

-உன் ஞாபகம்

 கண்ணாடியில் பிம்பம்

மூச்சுக்காற்று படர்ந்ததில்

ஒளியியல் மாயை

ஒடுங்கிய உருவம்

-உன் ஞாபகம் 

இத்தனை ஞாபகம்

வந்தென்னை ஆளும்

முகமறியா "உன்"களுக்கு

முடிசூட்டுவது எப்போது? 


Rate this content
Log in

Similar tamil poem from Romance