ஓடுவதைத் தவிற வேறு என்ன தெரியும் காலத்திற்கு?
ஓடுவதைத் தவிற வேறு என்ன தெரியும் காலத்திற்கு?
பொற்காலம் நற்காலம்அந்த காலம் அதுஎங்க காலம்என்று காலத் துதி பாடிஇங்கே பலர்சூரியனைப் பிழிந்துஊற்றும் பிரமாண்டகூரைக்குள் பரவத் துடிக்கும் வெளிச்சத்தைபழங்குடை ஒன்றால்இருளாக்கிச்சாரை சாரையாய்ஊர்ந்து போகும்சிற்றெரும்பைப்பார்த்துக் கொண்டேகாலம் அவிழ்த்துவிடும்என்று இறுகிய முடிச்சுகளைஅவிழ்க்க முனையாமலேஅது கழுத்தைநெரிக்கும் வேளையிலும்தளர்த்த முயலாமலேகலிகாலம் என்று பழி கூறிகால கங்கைக்குள்கால் நனைத்துப் புனிதம் சேர்த்துக் கொள்ளப் பார்க்கின்றனர்இப்படியேஇருந்துவிடும்என்று நம்பும்மூடர்களேஆர்வம் காய்ந்தஉங்கள் முதுகைசுகமாய்ச் சொறிந்து கொள்ள மழுங்கியகருங்கல் திண்டாகாலம் ?அது ஓடும் கலப்பைகாலம்உழுது போடாதநிலத்தில் விதைத்தென்னபுதைத்தென்ன?ஓடிக்கொண்டேஇருக்கும் காலம்காட்சி மாறிக்கொண்டேஇருக்கும் நாளும்ஓடுவதைத் தவிறவேறு என்ன தெரியும்காலத்திற்கு?