பசி
பசி


சாலையோரம் படுத்திருந்த பிச்சைக்காரன், அங்குள்ள குப்பைத்தொட்டியில் உணவை கொட்டும் சிறுவனைப் பார்த்து கேட்ப்பதாவது...
"உயிர் வாழ வழியுமில்ல, வழித்துணையா யாருமில்ல,
ஒழச்சு சம்பாதிச்சு ஒரு வா சாப்புட, இந்த கெழவன் ஒடம்புல வலுவுமில்ல...
எல்லாரையும் படைக்குரது அந்த கடவுளோட வேல,
என்ன படைக்கும் போது அவன் தூங்கிபுட்டான் போல...
ஏனோதானோனு எப்புடியோ படச்சுபுட்டான்,
வாழ்க்கைக்கு வழி காட்ட மட்டும் ஏன் மறந்துபுட்டான்...
இல்லாத வழிய தேடி வாலிபத்த தொலச்சிபுட்டேன்,
தல்லாத வயசுலா இப்புடி தனிமரமா நிக்குரேன்...
முந்தாநாள் சோறோ புளிச்சு போன கூழோ,
அர வயிரு போட்டாலும் அமிர்தமா சாப்புடுவேன்...
ருசிச்சு பாக்க தெரியாது,
பசியோ ருசிய அறியாது...
நாடி நரம்பெல்லாம் வத்திப்போச்சு,
நாக்குல ருசி செத்துப்போச்சு...
அரவயிறு சோத்துக்கே நாங்க அல்லோல படுகையில,
அறுசுவ சாப்பாட்ட இப்புடி ஆழும்பாழும் பன்னுரியே...!"
(குறிப்பு : பேச்சு வழக்கில் எழுதப்பட்டது )