அலைபேசி
அலைபேசி


அழகு சேயின் அழுகுரல்
ஆசை தாயின் தழுவல்கள்
இருள் அழகில் அகல்விளக்கு
ஈர மண்ணில் பெரியகோவில்
உருண்டோடும் தாயம்
ஊட்டா கூட்டாஞ்சோறு
எட்டி துரத்திய வண்ணத்து பூச்சி
ஏங்கி தொலைத்த தலையாட்டு பொம்மை
ஐயம் செய்த வாலிப நண்பன்
ஒரு ஊர்ல ஒரு ராஜா
ஓரத்தில் நின்ற சைக்கிள் டயர்
ஒளவை முகத்தில் அழகு நிலா
நினைத்து ஏங்கையில் விரல் தொட சிணுங்கியது என் அலைபேசி..