மாற்றம் தேடி
மாற்றம் தேடி
கொலையும் கொள்ளையும்
அரசியல் தர்மமானது
இலஞ்சமும் ஊழலும்
அதற்கு அங்கமானது
தனிமனிதன் தன்மானம்
தொலைந்து போனது
ஓட்டுக்கும் உரிமைக்கும்
இனாம் தேடுது
அடுத்தவனை குறைகூறவே
கூட்டம் கூடுது
தன்தவறை மறைத்துக்கொள்ள
உரக்க கூவுது
இனாம் வந்து இழந்ததையே
மறைக்க தூண்டுது
அரக்கன் வந்தால் அடுத்த
தேர்தல் நினைத்து ஏங்குது
தொடர்கதையாய் தொடர்ந்துபோன
மக்கள் கதையிது
மாற்றம் தேடி மக்களோடு
அலையும் மனமிது.....