நன்றி நவில்வோம்
நன்றி நவில்வோம்


நன்றி நவில்வோம் -
இயற்கைக்கு நாம்
நன்றி நவில்வோம் !
மனித வாழ்வின் ஆதாரம்
நீர் நிலம் காற்று
ஆகாயம் சூரிய வெப்பம்
ஐம்பூதங்கள் அனைத்திற்கும்
நன்றி நவில்வோம்!
புதுப் பானையில்
புத்தரிசிப் பொங்கலிட்டு
மங்கள மஞ்சளும்
தித்திக்கும் கரும்புமே கொண்டு
இயற்கைக்கு நன்றி நவில்வோம் !
உழவுக்கும் தொழிலுக்கும்
துணை நிற்கும் மாடுகளை
சீராட்டி மகிழ்வோம் !
இயற்கை தரும்
உன்னத வாழ்விற்கே
உளமார நன்றி நவில்வோம் -
இந்த பொங்கல் நன்னாளிலே !