முதுமைக் காதல்
முதுமைக் காதல்
கண்களில் குழி விழுந்திட
அனுபவ ரேகைகள்
தோலில் சுருக்கங்களாய்
வரிசை காட்டிட
தளர்ந்து போன உடலும்
தளர்வறியாத மனமும்
மெல்லிய புன்னகையில்
புரிந்து கொள்ளப்படும் அன்பும்
அனுசரணையான உதவியில்
வெளிப்படும் காதலும்
ஆசுவாசமாய் அருகமர்ந்தே
பேசிடும் சில வார்த்தைகளும் போதுமே
இளமையில் முகிழ்த்த ஆசைக் காதல்
முதுமையிலும் மணம் பரப்பி
மனம் நிறைத்திடவே !