நினைவுகள்
நினைவுகள்


உள்ளத்துள் ஒளிந்திருக்கும்
சொல்லாத கதைகளும்
எழுத்தில் வடிக்காத கவிதைகளும்
ஆயிரமாயிரம் நினைவுகளின்
புதையல் கிடங்காகவோ - அல்லது
குப்பைக் கிடங்காகவோ
மாறிப்போகலாம் !
குப்பைகளை தூக்கி எறிவோம் !
பொக்கிஷ நினைவுகளை
பாதுகாத்தே மகிழ்ந்திடுவோம் !
நினைவுகள் - நாம் உயிர்ப்புடன்
வாழ்வதற்கான ஆதாரங்கள் !