அண்ணனின் பரிணாமங்கள்
அண்ணனின் பரிணாமங்கள்


ஊக்கம் அளிக்கையில்
நல் ஆசானாகவும்
துவண்டு வீழ்கையில்
தோள் கொடுக்கும் தோழனாகவும்
பசி கொண்டு துடிக்கையில்
அன்னையாகவும்
அறிவுரை கூறி நல்வழிப்படுத்துகையில்
தந்தையாகவும்
ஆசையோடு அள்ளித் தருகையில்
கர்ணப் பிரபுக்களாகவும்
எப்போதும் நம் நலம் நாடும்
உற்ற தோழமைகளாகவும்
துணை நிற்பவர்கள் -
அண்ணன்கள் !