ஓட்டத்திற்கான இளைப்பாறல்
ஓட்டத்திற்கான இளைப்பாறல்
இன்பத்தை தேடியே
ஒடும் பாதை தனில்
இளைப்பாறலுக்காய் -
இயற்கையை கொஞ்சம்
சுவாசிக்கப் பழகிக் கொள்வோம் !
மூச்சு முட்டும் இறுக்கங்கள்
பாதையெங்கும் விரவிக் கிடந்தாலும்
சுவாசத்தை சீராக்கும்
உயிர்வளியை தேடியடைய
கற்றுக் கொண்டே பயணிப்போம் -
வாழ்க்கை பாதையை மகிழ்வுடனே !