மனமே...மனமே...
மனமே...மனமே...

1 min

221
உள்ளம் சுமக்கும் அன்பு
நினைவெல்லாம் சுகந்தமாய்
மணம் பரப்பியே
மனதினில் நினைக்கும்
நொடியில் எல்லாம்
தேனாய் இனிக்குமே !
காலம் விதித்த விதியினை
வென்றிடுவார் எவரும் உளரோ ?
உறவொன்றில் பிரிவென்பதும்
சகஜமென்ற போதும்
ஏற்றுக் கொள்ளாது அடம் பிடிக்கும்
சிறு பிள்ளையாய் மாறிப் போன
மனம் தனையே தேற்றிடும் வழியை
காலமே நீ சொல்லிடுவாயோ ?