கோடை
கோடை
கோடை காலம் அது
சுட்டெரிக்கும் வெயிலின்
தாண்டவம் தனையே
காணும் காலம் !
சூரியன் தன்
சக்தி மொத்தத்தையும்
பூமி மீது இறக்கி வைத்து - ஆசுவாசமாய்
புன்னகைக்கும் காலம் !
தித்திக்கும் பழ வகைகள்
நீர்ச்சத்து நிறை
ஆரோக்கிய இயற்கை உணவுகள்
பலவும் கிடைத்திடும்
காலமும் இதுவே !
இயற்கையை குளிர்வித்தால்
நாமும் குளிர்வோம் !
உணர்ந்து செயல்படுவோம் !
நலமாய் வாழ்வோம் !