பொங்கல் தாத்தா
பொங்கல் தாத்தா


பொங்கல் தாத்தா வந்தாரே பொங்கல் வச்சுத் தந்தாரே
கட்டிக் கரும்பை வாங்கியே
வெட்டித் திங்கச் சொன்னாரே
பச்சை ஆடை அணிந்துமே
பசுமைப் புரட்சி செய்தாரே
வெள்ளை முண்டாசுக் கட்டிலே வெண்மைப் புரட்சி தந்தாரே
இயற்கை உணவைத் திங்கவே இதயம் பலம் ஆகுமாம்
செயற்கை உணவைத் தின்னாலே கெட்ட மலம் கூடுமாம்
ஆயுள் வளர என்றுமே
ஆவியில் வெந்ததைத் திங்கனும் ஆயில் உணவை நாமுமே
அறவே வெறுத்து ஒதுக்கனும்
அதிகாலை எழுதல் நன்றாமே
ஐயா எமக்குச் சொன்னாரே
ஆதவன் கதிர்கள் பட்டிடவே அனுதினம் நடக்கச் செய்தாரே
அன்பை வளர்க்கும் இனத்திலே அறிவை விதைத்துச் சென்றாரே பண்பைப் போற்றும் குணத்திலே பயிரை உயிராய்க் காத்தாரே
நம்ம தாத்தா நம்மாழ்வார்
நம்மை எல்லாம் ஆள்வாரே
சிம்ம சொப்பனம் என்றுமே
சீமை வெள்ளத் துரைகளுக்கு
தாத்தா சொல்லைக் கேட்கணும் ஆத்தா அப்பனைக் காக்கனும் கலப்பை பூட்டி என்றுமே
கஞ்சி குடிச்சுப் பொழைக்கனும்