வாடிவாசல்
வாடிவாசல்


வாடா பங்காளி வாடி வாசலுக்கு +++++++++++++++++++++++++++++ வாடிப்பட்டி காளை ஒன்னு வாடிவாசல் முன்னே நின்னு வாவென அழைக்குது கண்ணு வீரமிருந்தா பிடிப்பதை எண்ணு
கொம்பு சீவிய முரட்டுக்
காளை
குத்திக் கிழித்திடும் எதிர்த்திடும் ஆள
திமிலைத் தழுவிட இதுதான்
வேளை
காளைய அடக்குனா கழுத்தில் மாலை
காளையின் ஊடே காலை
விடாதே
களத்து வீரன் கண்ணியம்
தவறாதே
கொம்பைப் பிடித்துக் கோழை இராதே
மறத்தால் அடக்கு மதியுடன்
நீயே
வாலைப் பிடித்து வலியைத்
தராதே
கோழைப் பட்டம் வாங்கிக் கொள்ளதே
திமிலைப் பிடித்துத் திமிரைக்
காட்டு
வீரன் என்பான் வெகுமதி
தந்து
மாமன் கண்டால் பெண்ணும்
தருவான்
மறவன் நீயென மகளிடம் உரைப்பான்
மரியாதை பெற்று மணமும்
முடித்திட
மறத்தமிழ் மகனே வாடிவாசல்
வாடா.