கொரோனா என்றொரு கொல்லைநோய்!
கொரோனா என்றொரு கொல்லைநோய்!


கொரோனா என்றொரு கொல்லை நோய்...
கொத்துக் கொத்தாய் அழிக்கிறதே!
சீன நாட்டில் தோன்றிடினும்
உலகையே வாட்டி வதைக்கிறதே!
அமெரிக்கா, இத்தாலி, ஈரான் எனும்
வளர்ந்த நாடுகளுக்கே சவாலாய்
இந்தியா போன்ற நாடுகளின் - மக்களை
அழிவை நோக்கி அழைக்கிறதே!
வெளியில் சுற்றித் திரியும் அனைவரையும்
வீட்டில் அடைத்து வைக்கிறதே!
சாதி, இனம், மொழி பேதமின்றி
நாட்டையே அடக்கி ஆள்கிறதே!
தனித்திரு..விழித்திரு..வீட்டிலிரு..
கைகளைக் கழுவிடு..
முகக்கவசம் அணிந்திடு...
போன்ற எளிய முறைகளில் தடுத்திடலாம்!
குடும்பத்தோடு
குதூகலிக்க
இயற்கை அளித்த வரமெண்ணி
நாட்களை நகர்த்தி இருந்திடலாம்!
வாழ்க்கையை வாழ்ந்து களித்திடலாம்!
பசி, பட்டினி, பிணியுற்று
கையில் பணமின்றி அல்லாடும்
குடும்பம் இல்லா தனித்திருப்போர்,
சிறு, குறு, தெருவோர வியாபாரி
போன்றோர்க்கிது சாபமாய் இருந்தாலும்
நாட்டைக் காக்க விழைந்திடுவோம்!
இன்னும் 20 நாளைக் கடந்திடுவோம்!
பள்ளத்தாக்கை கடந்துவிட்டால்
குன்று இருப்பது இயற்கையெனும்
உண்மை மொழிதனை விளங்கிடுவோம்!
இக்கொல்லை நோயைக் கடந்துவிட்டால்
வாழ்வில் என்றும் வசந்தமெனும்
நிலையை உணர்ந்து வென்றிடுவோம்!