STORYMIRROR

Sathishkumar Gurunathan

Abstract Inspirational

5  

Sathishkumar Gurunathan

Abstract Inspirational

வழிப்போக்கனின் குரல்.....

வழிப்போக்கனின் குரல்.....

1 min
514

இனப்படுகொலை இன்று தினப்படுகொலை ஆகுது,

இயலாமை இன்று இயல்பாய் மாறுது.....


மனிதம் கடந்து மதங்கள் வாழுது,

சாதித்த ஒருவனை சாதி வீழ்த்துது.....


வறுமைக்கு திருடினால் படுகொலை நடக்குது,

வறுமையை தருபவனுக்கோ விடுதலை கிடைக்குது.....


வளங்கள் கொள்ளை, அது அரசின் கொள்கை

மக்கள் உரிமை, அது பேரினவாதம்....


பாரினில் தினம் ஒரு தாக்குதல் நடக்குது,

பகுத்தறிவு அதிலே உயிர் பலியை கேட்குது.....


பெரியவர் சிறியவர் அனைவரும் சாக,

கருணை இங்கு கொலையில் மட்டுமே வாழுது......


உயிருக்காக போராடும் மனிதரிடையே,

தினம் மயிருக்காக போராடுகிறோம்....


உறவுக்கு தவிக்கும் மனிதரிடையே, காதல் தோல்விக்கு தினம் தவித்திருக்கிறோம்.....


சோற்றை மறந்து சேற்றில் தவிக்கிறான்,

சோற்றுக்காக தினம் ரோட்டில் தவிக்கிறான்,

உணவை வீணாக்குகிறோம் நாம்.....


வாழ்க்கைக்காக ஏங்கும் பலரிடையே,

என்ன வாழ்க்கை என்று ஏங்கித் திரிகிறோம்.....


இருப்பது நினைவில் இருப்பதில்லை,

நமை வெறுப்பதை மனமும் மறுப்பதில்லை....


இல்லை என்பதை இல்லை என ஆக்குவோம்,

இனி இருப்பது ஒன்றே பெரிதென போற்றுவோம்.....


வீழ்ந்தால் என்ன, விதையாய் எழுவோம்,

மரமாய் முளைத்து நிழலை தருவோம்.....


மாற்றம் காண மனமிருந்தால்,

பிறர் ஏற்றம் காண நினைவிருந்தால்,


இன்றிலிருந்து துவங்கு

அதை உன்னிலிருந்து துவங்கு

கடந்ததை கடந்து வா, நிகழ்வதில் இருந்து போ.....


சோதனைகள் எல்லாம் போதனைகளாகட்டும்,

தோல்விகள் வெற்றியின் வேள்விகளாகட்டும்

வலிகள் உங்கள் வலிமையாகட்டும்.....


Rate this content
Log in

Similar tamil poem from Abstract