மத(ம்) யானைப் பாகன்
மத(ம்) யானைப் பாகன்


மதம் பிடித்த யானைக்கு
பிடித்த மதம் எதுவென்று அறிவதற்குள்
மாண்டனர் பலர்
பலரும் மாண்டது
மதத்தினாலா?
இல்லை யானையினாலா?
கண்டவன் சொன்னான்
மதத்தினால் என்று
காணாதவன் சொன்னான்
யானையினால் என்று
பலரோ இதை
கண்டும் காணாமலும்
ஆனால் என்னவோ
மதம் பிடித்த யானையும்
மாண்டது
இது மதத்தினால்தான்
ஆனால்
என்ன மதம் என்றுதான் தெரியவில்லை
அதை,பாகன்தான் சொல்ல வேண்டும்
அட யானைப் பாகனை சொன்னேனப்பா