STORYMIRROR

Ravivarman Periyasamy

Inspirational

5  

Ravivarman Periyasamy

Inspirational

என் பாரதி

என் பாரதி

1 min
507

செஞ்சோற்று கடன் தீர்த்தவன் பாரதி

கருப்பு உடையில் முறுக்கு மீசையில்

செங்கவியில் நிமிர்ந்த நன்னடையில் 

ஒரு பெரும் சமரையே செய்துவிட்டான் 


கூட்டமொன்றும் அவனை காட்டமாக்கவில்லை

தனி ஒருவனாய் தரணியையே தடம் மாற்றினான்

இருட்டிற்குள் விடியலைக் கண்டான்

அந்த விடியலைக் காணவும் வைத்தான் 


தீச்சுடர் மையால் துப்பாக்கியைத் துளைத்தான்

ஆயுத மொழியால் வழியைத் திறந்தான்

அச்சத்திற்கே அச்சத்தை உண்டாக்கினான்

வேட்டையாடாமலே வீரம் எதுவென்பதை காட்டினான் 


என் பாரதி தமிழின் காதலன்

தன்னலமில்லா மானுடன்

அவன் எனக்குள்ளே என்றும்

மொழியாய் ஒளியாய்...


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational