பூ வனமாய்!
பூ வனமாய்!


மொட்டவிழும் சின்னஞ்சிறு மலர்களின்
மென்மையான மணமாய் நீ!
தொட்டணைக்கும் தென்றலின் குளுமையாய்
தொடரும் நினைவுகள் நீ!
கனவுகளால் சிலிர்த்திடும் மனது
கண் விழித்துப் பார்க்கும் துயில் நீ!
ஒன்றாய், இரண்டாய், மூன்றாய்
ஆர்ப்பரித்து கரை புரளும் அலையின்
ஆர்வமாய் உன் காதல் உணர்வுகள்
அவை பந்தமாய், இணைக்கும் பாலமாய்
ஆருயிர் பந்தத்தின் வலிமையாய்
என்னுள் பலமாய் படர்கின்றது!
உன் வலிய பாசத்தின் விழுதுகள்
என் மனதினுள் ஆழ்ந்து ஊன்றிட
நட்பு என்னும் சோலை வனத்தில்
என் மகிழ்ச்சி சாரல்கள் இறங்கிட
நேசமெனும் பூக்கள் அரும்பியே
இன்று பூ வனமாய் மாறியதே!