பூக்களாய் இன்று
பூக்களாய் இன்று
புன்னகைக்கும் உன்
செந்நிற இதழ்கள்
என் இளமைக் கால
கனவுகளின் பதிவுகள்!
எத்தனையோ நாட்கள்
உன் சிவந்த இதழ்களில்
ஒளிர்ந்த நளினத்தில்
நான் என்னையே
மறந்திருக்கிறேன்!
காலகாலமாக
நீ பூத்துக்குலுங்கும்
நாட்கள் எல்லாம்
எனக்கு வெற்றி தரும்
நாட்களே !
ஆனால் நீ என்
வீட்டுத் தோட்டத்தில்
என்று மலர்வாய்
எனக் காத்திருக்கும்
இன்றும் ஒரு தவமே!